Followers

Saturday, May 09, 2020

அமெரிக்க பின்னணி பாடகி ஜெனிஃபரின் அழகிய குர்ஆன் ஓதல்.

அமெரிக்க பின்னணி பாடகி ஜெனிஃபரின் அழகிய குர்ஆன் ஓதல்.
வருங்காலங்களில் அமெரிக்க முஸ்லிம்கள் இஸ்லாத்தை பின் பற்றுவதில் முன்னணியில் இருப்பார்கள் இறைவன் நாடினால். அமைதி தேடி அலையும் அவர்கள் மனது கடைசியில் இஸ்லாத்தில் தஞ்சமடைகிறது. பல மாதா கோவில்கள் பள்ளி வாசல்களாக மாற்றம் பெறுகின்றன.
சகோதரி ஜெனிஃபர் குர்ஆனை ஓதும் அழகு மெய் சிலிர்க்க வைக்கிறது. பல தலைமுறைகளாக இஸ்லாத்தில் உள்ளவர்கள் கூட இவ்வளவு அழுத்தம் திருத்தமான ஆத்மார்த்தத்தோடு ஓத முடியாது.
------------------------
இனி சகோதரி ஓதிய வசனங்களின் பொருளைக் காண்போம்.
இறை தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; அவ்வாறே இறை நம்பிக்கையாளர்களும் நம்புகின்றனர்; இவர்கள் யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள்: “நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை; என்றும் இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; உன் கட்டளைகளுக்கு நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; நாங்கள் மீளுவதும் உன்னிடமேதான்” என்று கூறுகிறார்கள்.
அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை; அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (இறை நம்பிக்கையாளர்களே! பிரார்த்தனை செய்யுங்கள்:) “எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; இறை மறுப்பாளர்கள் கூட்டத்தாரின் மீது நாங்கள் வெற்றியடைய எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!”
அல் குர்ஆன் 2:285, 286


1 comment:

Dr.Anburaj said...


குரானை படிக்காமல் எப்படி முஸ்லீமாக மாறி விட்டாள் இந்த அம்மணி.பாவம்.

அரேபியா காரனுக்குதான் மூளையில்லை. அவனுடன் சோ்ந்த அமெரிக்க பெண்ணுக்குமா மூளை செயல்படாமல் உள்ளது ?