உலகின் மிகப் பழமையான நாகரிகங்களில் ஒன்றான, மத்திய அமெரிக்காவின் மாயன் பழங்குடியினத்தவரிடையே இஸ்லாம் பரவுவது குறித்து 2011-ல் ஒரு விரிவான கட்டுரையை எழுதியிருந்தேன். அன்றைய தேதியில் சுமார் 300 மாயன்கள் இஸ்லாமை தழுவியிருந்தனர். சரி, இவர்களின் இப்போதைய நிலை என்ன?
முஸ்லிம் மாயன்களின் தற்போதைய நிலையை அறிந்துக்கொள்ள முயற்சித்த போது ஆச்சர்யம் காத்திருந்தது. இவர்களின் இன்றைய மக்கட்தொகை 5500-ஐ தாண்டியிருக்கிறது. அதாவது பதினைந்து மடங்கிற்கும் மேலாக வளர்ந்திருக்கிறது (Exponential Growth). அபரிமிதமான வளர்ச்சி.
இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், ஸ்பெயினிய முஸ்லிம்களின் அழைப்பு பணியால் இங்கு இஸ்லாம் பரவத்தொடங்கியது. தங்களின் பழங்குடியின கலாச்சாரத்தை இஸ்லாம் ஒத்திருப்பதால் தங்களால் எளிமையாக மார்க்கத்தில் ஒருங்கிணைய முடிந்தது என்கிறார்கள் மாயன்கள். முதலில் தங்களின் மனமாற்றத்தை சக மாயன்கள் எச்சரிக்கையுடனே அணுகியதாகவும், ஆனால் இஸ்லாமை ஏற்றதற்கு பின்பான தங்களின் நடவடிக்கைகளை கண்ட பிறகு அப்படியான சூழல் மாறிவிட்டதாகவும் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். வருடா வருடம் ஹஜ் யாத்திரையும் மேற்கொள்கிறார்கள் மாயன்கள்.
படம் 1: நோன்பு திறக்கும் மாயன் குடும்பத்தினர்.
படம் 2: மாயன் பள்ளிவாசல்.
படம் 2: மாயன் பள்ளிவாசல்.
No comments:
Post a Comment