Followers

Thursday, May 07, 2020

லுக்மானுல் ஸஃபா.....

லுக்மானுல் ஸஃபா.....

லட்சத்தீவை சேர்ந்த டாக்டர் அப்துல் றகுமானின் மகள்.. சிவில் சர்வீஸ் நுழைவுத்தேர்வு எழுத மஞ்சேரியில் கோச்சிங் செண்டரில் தங்கி பயின்று வந்தார் லுக்மானா.

திடீரென ஊரடங்கு அறிவித்து கோச்சிங் சென்டரும் ஹாஸ்டலும் அடைத்த போது லுக்மானாவுக்கு தர்ம சங்கடமானது..

லட்சத்தீவுக்கு திரும்பி செல்ல ஒரு மார்க்கமுமின்றி கையில் உடமைகளுடன் கலங்கிய விழிகளுடன் விடுதி வாசலில் நின்றிருந்த லுக்மானாவுக்கு ஆறுதல் வார்த்தை கூறி தனது இல்லத்துக்கு அழைத்து சென்றார் சக மாணவியான மாளவிகா..
மாளவிகாவின் பெற்றோரான பிரதீபும் பிந்துவும் மகிழ்ச்சியுடன் ஆதரவளித்து தங்களது இரண்டு பெண் மக்களோடு மூன்றாவது மகளாக ஒரு மாதத்துக்கு மேலாக லுக்மானாவை பாசத்தோடு போற்றி வருகின்றனர்..

ஊரடங்கு நீண்டு போகவே ரமலான் நோன்பும் துவங்கியது.. லுக்மானா கேட்பதற்கு முன்னே மாளவிகா குடும்பம் அதற்கான ஏற்பாடுகளை செய்தனர்..

முதல் நோன்பு அதிகாலை ஷஹர் வைக்க லுக்மானாவை எழுப்பினார் மாளவிகாவின் தாய் பிந்து..

டைனிங் டேபிள் அருகே வந்து பார்த்த லுக்மானா கண்களில் ஆனந்த கண்ணீர்..

தன்னோடு மாளவிகா பெற்றோரும் தங்கையும் நோன்பு பிடிக்க தயாராக டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தனர்...

தங்களது வீட்டில் ஒரு அறையை லுக்மானா தொழுகை நடத்துவதற்கு ஒதுக்கி தந்திருந்ததோடு,

கடந்த 11 நாட்களாக மாளவிகா குடும்பம் தன்னோடு நோன்பிருப்பது லுக்மானாவுக்கு குதூகலம்.  தனக்கு விருப்பமான உணவுகளை கேட்டு ஷஹருக்கும், இஃப்தாருக்கும் தயார் செய்து தரும் மாளவிகாவின் தாய் பிந்துவின் அதீதபாசம்...

 மகள் பாதுகாப்பான கரங்களில் இருப்பதறிந்து லுக்மானா பெற்றோருக்கு ஆறுதல்....



1 comment:

Dr.Anburaj said...


பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.


கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.

இந்துக்களுக்கு வேதங்கள் பிற மக்களை காபீர்கள் என்ற வெறுக்கக் கற்றுக் கொடுக்கவில்லை.

யாவர்க்கும் ஈமின் அவனிவன் என்றன் மின் - திருமந்திரம்

முஸ்லீம்கள்தான் இந்துக்களை காபீர்கள் என்று கருதி பெரும் குழ்பபத்தில் தவிக்கின்றனா்.

நல்ல செய்தி. வாழ்க அனைவரும். லுக்மானா இந்துக்களை காபீர் என்று வெறுக்காமல் மற்ற முஸ்லீம்களின் மனதில் காபீர் என்ற வார்த்தையை மற்க்க ஆவன செய்வாராக!