மன்னர் பரம்பரையில் பிறந்த கோடீஸ்வரர், அமைச்சர் சக மனிதர்களோடு சரி சமமாக அமர்ந்து நோன்பு திறக்க வருகிறார். இவர் வருவதைப் பார்த்து அருகில் அமர்ந்துள்ள இந்தியர் மரியாதை நிமித்தமாக ஒதுங்கிக் கொள்கிறார். அதனை அவர் விரும்பாது அவரை தனக்கு அருகில் அன்போடு அழைக்கிறார். அந்த இந்தியரும் உரிமையோடு அருகில் எந்த பயமும் இல்லாது வருகிறார்.
இவர்களுக்கு மக்களை வசீகரித்து வாக்கு அள்ள வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. பரம்பரையாக அரச குடும்பத்தில் பிறந்தவர்களையும் இவ்வாறு எளிமையாக நடக்க எது உந்துதலாக இருக்கிறது? அது தான் இஸ்லாம்.
ஆண்டான் அடிமை என்ற பேதத்தை இஸ்லாம் ஒழித்துக் கட்டியதால் இது சாத்தியப்படுகிறது. இவ்வாறு சரி சமமாக நடத்துவதன் மூலம் இறைவனின் அன்பைப் பெறலாம் என்று இஸ்லாம் போதிப்பதால் இது சாத்தியமடைகிறது.
-------------------------------------
அபூ ஸயீத் (ரலி) அவர்கள் நபி அவர்களிடம் தம்முடைய ஏழ்மையைப் பற்றி முறையிட்டார்கள். அதற்கு நபி அவர்கள் ”அபூ ஸயீத் அவர்களே! பொறுமையை மேற்கொள்ளுங்கள். உங்களில் யார் என்னை நேசிக்கிறாரோ அவரை நோக்கி, பள்ளத்தை நோக்கிப் பாய்கின்ற வெள்ளத்தை விட விரைவாக அல்லது மலை உச்சியிருந்து கீழ்நோக்கி விழுகின்ற வெள்ளத்தைப் போல வறுமை விரைந்தோடி வரும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸயீத் பின் அபீ ஸயீத்(ரலி) அஹ்மத் 10952
No comments:
Post a Comment