வெட்கப்பட்டு பிறரிடம் கேட்க மாட்டார்கள்!
ஈராக்கில் உள் நாட்டு போரினாலும் வல்லரசுகளின் கயமைத்தனங்களாலும் அமைதியிழந்து காணப்படுகிறது. அந்த மக்கள் உணவுக்கு மிகவும் சிரமப்படுகின்றனர். இதனை உணர்ந்த சில செல்வந்தர்கள் தங்களிடம் உள்ள உணவுப் பொருட்களை தெருக்களில் பொதுவில் வைத்து விடுகிறார்கள். பிறரிடம் கேட்க வெட்கப்படும் சுயமரியாதை உடைய ஏழைகள் பயன்பெறும் பொருட்டு இவ்வாறு பொருட்கள் வைக்கப்படுகின்றன. தேவையுடைவர் இருட்டிய பிறகு பொருட்களை எடுத்துச் செல்கிறார்கள்.
-------------------------------
சிலர் நபிகள் நாயகம் அவர்களிடம் யாசித்தார்கள். நபிகள் நாயகம் அவர்களும் அவர்களுக்குக் கொடுத்தார்கள். பிறகும் நபியவர்களிடம் அவர்கள் கேட்டார்கள். அப்போதும் அவர்களுக்குக் கொடுத்தார்கள். பிறகும் அவர்கள் கேட்க, நபி அவர்கள் மீண்டும் அவர்களுக்குக் கொடுத்தார்கள். இவ்வாறு நபி அவர்களிடம் இருந்தது அனைத்தும் தீர்ந்து போன பின் "என்னிடமுள்ள செல்வதை நான் உங்களுக்குத் தராமல் பதுக்கி வைக்கவே மாட்டேன். ஆயினும் யார் சுயமரியாதையைப் பேணிக் கொள்கிறானோ அவனை அல்லாஹ் சுயமரியாதையோடு வாழச் செய்வான்; யார் பிறரிடம் தேவையற்றவனாக இருக்கிறானோ அல்லாஹ் அவனைத் தேவையற்றவனாக ஆக்குகிறான். யார் பொறுமையை மேற்கொள்ள முயற்சி செய்கிறானோ அவனை அல்லாஹ் பொறுமையாளனாக ஆக்குவான்; மேலும், பொறுமையை விடச்சிறந்த, விசாலமான அருட்கொடை எவருக்கும் கொடுக்கப்படுவதில்லை" என்றார்கள்.
(புகாரி-1469)
1 comment:
வீடியோவைப் பார்த்தால் தெளிவாக தெரிகின்றது. ஒரு நல்ல உள்ளம் தான் அனைத்து ஏற்பாட்டையும் செய்து வருகின்றது.
இந்தியாவில் நாய்களுக்கு கூட உணவுஅளித்து வருகின்றனா். ஒரு காட்சியை போடக் கூடாதா ? தெருவெல்லாம் மக்கள் மற்றவர்களுக்கு வழங்கி வருகின்றார்களே!யாரும் பட்டினியால் சாகவில்லையே.
அரேபிய அடிமைகள் அறிவு இப்படியா மழுங்கிப் போய் விடும்.ஈரான் நாட்டின் ஒரு பணக்காரன் செய்த தானம் மட்டும் சு..ன் கண்ணில் படுகின்றது.இந்தியாவில் தானம் தானம்... கடலளவு செய்யப்பட்டு வருகின்றது. சு..ன் கண்ணில் படவேயில்லை. அரேபிய கைநாட்டுக்காரன் உளறிவிட்டான் ”காபீர்களின் நல்லறங்களை அல்லா அஙகிகரிக்கமாட்டான் ”
என்று.ஆகவே சு..ன் பிரியனும் காபீர்களின் நல்ல அமல்களை பதிவிட மாட்டாாா்.
Post a Comment