அனைவருக்கும் ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்!
துப்புறவு பணியாளர்களை சவுதி நாட்டவர் நடத்தும் விதம்!
அரபு நாடுகளை சுத்தமும் சுகாதாரமுமாக வைத்திருப்பதில் வெளி நாட்டு தொழிலாளர்களின் உழைப்பை சாதாரணமாக எண்ணி விட முடியாது. இதை உணர்ந்ததாலோ எண்ணவோ பெருநாள் தினத்தன்று ஒவ்வொரு வருடமும் சவுதிகள் துப்புறவு தொழிலாளர்களை அழைத்து அவர்களை அமர வைத்து கண்ணியப்படுத்துவார்கள். இது அந்த தொழிலாளர்களை மனதளவில் மகிழ்ச்சியை உண்டு பண்ணும். இந்த எண்ணம் அனைத்து மக்களிடத்திலும் வர வேண்டும். தொழிலாளர்களை அலட்சியப்படுத்தக் கூடாது என்ற இஸ்லாத்தின் போதனையை சவுதிகள் மனதில் ஏற்றதாலேயே இது சாத்தியப்படுகிறது.
2557. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
உங்களில் ஒருவரிடம் அவரின் பணியாள் அவரின் உணவைக் கொண்டு வந்தால், அவர் அப் பணியாளைத் தம்முடன் உட்கார வைத்துக் கொள்ளட்டும். அவ்வாறு உட்கார வைக்கவில்லையென்றாலும் அவருக்கு ஒரு கவளம் அல்லது இரண்டு கவளங்கள் அல்லது ஒரு வாய் அல்லது இரண்டு வாய்கள் அந்த உணவிலிருந்து கொடுக்கட்டும். ஏனெனில், அதைத் தயாரிக்க அந்தப் பணியாள் பாடுபட்டார்.
உங்களில் ஒருவரிடம் அவரின் பணியாள் அவரின் உணவைக் கொண்டு வந்தால், அவர் அப் பணியாளைத் தம்முடன் உட்கார வைத்துக் கொள்ளட்டும். அவ்வாறு உட்கார வைக்கவில்லையென்றாலும் அவருக்கு ஒரு கவளம் அல்லது இரண்டு கவளங்கள் அல்லது ஒரு வாய் அல்லது இரண்டு வாய்கள் அந்த உணவிலிருந்து கொடுக்கட்டும். ஏனெனில், அதைத் தயாரிக்க அந்தப் பணியாள் பாடுபட்டார்.
புஹாரி: 2557
இனி நமது நாட்டிலும் நடந்த ஒரு பழைய நிகழ்வைப் பார்போம்.
------------------------------------------------------------
------------------------------------------------------------
வழிபாடுக்கான வாளியை துப்புறவு பணியாளர் தொட்டதால் கோபமடைந்த சாது, பணியாரை சகட்டு மேனிக்கு தாக்கி கையை உடைத்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
கடவுள் வழிபாடுக்காக வைக்கப்பட்டிருந்த வாளியை துப்புறவு பணியாளர் தொட்டதால், அதிர்ச்சி அடைந்த சாமியார் அவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் மனிதநேய ஆர்வலர்கள் மத்தியில் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.
கும்பமேளா நடைபெறும் இடத்தில் பணியாளர் மத்தாதீன் துப்புறவு பணிகளை மேற்கொண்டு இருந்தார். அப்போது தூசி பரவி, சாது ஒருவர் வைத்திருந்த வாளி மீது விழுந்துள்ளது. அதை கவனித்த சாது தூசி பறப்பது தொடர்பாக பணியாளரை எச்சரித்துள்ளார்..
இடத்தை சுத்தமாக்க வேண்டும் என தொடர்ந்து பணியில் ஈடுபட்ட போது, மத்தாதீன் தவறுதலாக சாது வைத்திருந்த வாளியை தொட்டுவிட்டார். இதனால் கோபமடைந்த அந்த சாமியார் குச்சியால் பணியாளரை கடுமையாக தாக்கிவிட்டார்.
இதனால் வலது கையில் முறிவு ஏற்பட்ட நிலையில் துப்புறவு பணியாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஜுன்ஸி பகுதி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், பணியாளரை தாக்கிய சாது தலைமறைவானார்.
துப்புறவு தொழிலாளி தாக்கப்பட்டது குறித்து பேசிய ஜுன்ஸி நகர காவலர் ஏ.கே. தியாகி, பணியாளர் மத்தாதீயை கடந்த 6 நாட்களுக்கு முன்பு சாமியார் ஒருவர் குச்சியால் தாக்கினார். இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட நிலையில், குற்றம்சாட்டப்பட்ட சாது தலைமறைவாகிவிட்டார்.
தாக்குதலுக்கு உள்ளான மத்தாதீனிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அவர் தற்போது சொந்த ஊரான மத்தியப் பிரதேசத்திற்கு சென்றுவிட்டார். தலைமறைவாக உள்ள சாதுவை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன என அவர் கூறினார்.
1 comment:
365 நாட்களும் எப்படி வாழ்கின்றார்களோ அதுான் உண்மை.
பண்டிகை தினத்திற்கு வேசம் போடுவதெல்லாம் நாடகம். இதை கூடவா தங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.
சு...ன் தாங்கள் என்ன இவ்வளவு முட்டாளா ?அப்பாவியா ?
தன் நாட்டை சுத்தப்படுத்த வெளிநாட்டுக் காரனை பயன்படுத்துவது ஏன் ?
அரபிகள் சுத்தம் செய்யலாமே ?
Post a Comment