கல்வி வரலாற்றில் மறக்க முடியாத நானா அஸ்மா
உலக கல்வி வரலாற்றில் மறக்க முடியாத ஒரு ஆளுமை என்றால் அது நானா அஸ்மா. இன்று நைஜீரியா என்ற அழைக்கப்படும் நிலப்பகுதிகளை ஆண்டது இவரது குடும்பம் (19-ஆம் நூற்றாண்டு). நான்கு மொழிகளில் புலமைப் பெற்றிருந்த நானா அஸ்மா, இஸ்லாமிய சட்டதிட்டங்களில் தீர்க்கமான ஞானம் பெற்றிருந்தார்.
அசாத்திய திறமைசாலியான அஸ்மா, ஒரு கட்டத்தில் தீவிரமான மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தார். அந்த கவலை தன் மக்களை/அரசை பற்றியது. அரசாங்கத்தின் முன்னால் கடுமையான சவால்கள் காத்திருந்தன. பசி, நோய், ஏழ்மை, இஸ்லாமை ஏற்ற பூர்வகுடிமக்களை முஸ்லிம் சமுதாயத்தில் ஒருங்கிணைப்பது என்று இப்படி பல சவால்கள்.
குர்ஆனின் உதவிக்கொண்டு வெளிவந்தவர் கல்விப் புரட்சிக்கான விதையை வித்திட்டார். ஒரு நாடு வளம்பெற வேண்டுமென்றால் குழந்தைகள் சரியான முறையில் வளர்க்கப்பட வேண்டும். குழந்தைகள் சரியான முறையில் வளர்க்கப்படவேண்டும் என்றால் பெற்றோர்களுக்கு மார்க்க அறிவு தெளிவாக போதிக்கப்பட வேண்டும். இது தான் அஸ்மாவின் அடிப்படை எண்ணமாக இருந்தது.
பசி மற்றும் நோய்களில் இருந்து மக்களை காக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டே கல்வியை போதிக்க வேண்டும். பாடத்திட்டங்கள் எளிமையாக இருக்கவேண்டும். நாட்டின் பெண்களை ஒருங்கிணைக்க வேண்டும். அவர்களிடையே சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டும்.
ஒவ்வொரு கிராமத்திலும் நற்பண்புகள் மிக்கவர்களாக கருதப்பட்ட பெண்களை தேர்ந்தெடுக்க ஆரம்பித்தார். இப்படியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களுக்கு தன் வீட்டில் கல்வி, ஒழுக்கம் குறித்த பயிற்சியை தொடங்கினார்.
நான் முன்னமே கூறியது போன்று அஸ்மா ஒரு அசாத்திய திறமைசாலி. இறையச்சம் சார்ந்த அற்புத பண்புகளை அவரால் தன் மாணவர்களிடையே எளிதாக கொண்டுவர முடிந்தது. இப்படியாக அஸ்மாவினால் உருவாக்கப்பட்டவர்களுக்கு "ஜாஜிக்கள் (jajis)" என்று பெயர். ஜாஜி என்றால் பொறுப்பாளர் என்று பொருள் கொள்ளலாம். கல்வி பயிற்றுவிக்கப்பட்ட இந்த ஜாஜிக்கள் தற்போது தங்கள் ஊர்களுக்கு சென்று அங்குள்ள பெண்களுக்கு கல்வி போதிக்க வேண்டும்.
இந்த ஜாஜிகளுக்கு துணையாக இருந்தது அஸ்மாவிடம் இருந்து அவர்கள் கற்ற கல்வியும், நபிமொழிகளும் தான். வீடுகளுக்கே சென்று அங்குள்ள பெண்களுக்கு கல்வி போதிக்க ஆரம்பித்தார்கள். குர்ஆன் வசனங்களை சத்தமாக ஓதி காட்டுவார்கள். அது அடுத்தடுத்த வீடுகளிலும் எதிரொலிக்கும். அந்தந்த வீட்டு பெண்கள் இந்த வசனங்களை திரும்ப ஓதி காட்டுவார்கள். இப்படியானது ஒரு யுக்தி.
பெண்களின் கஷ்டங்களை அஸ்மாவின் பார்வைக்கு கொண்டுவந்தார்கள் ஜாஜிக்கள். அவற்றை பொறுமையாக கேட்டறிந்தார் அஸ்மா. உடனுக்குடன் தீர்த்து வைக்கவும் செய்தார். அஸ்மாவின் இத்தகைய நடவடிக்கைகள் பெண்களிடையே பெரும் புரட்சியை உருவாக்கத் தொடங்கின. பெண்களிடையே ஒரு ஒருங்கிணைப்பை அவரால் கொண்டுவர முடிந்தது. பிரச்சனைகளை ஜாஜிக்கள் மூலமாக எளிதாக கையாள முடிந்தது. அவர் எதிர்ப்பார்த்த சகோதரத்துவம் மேலோங்க ஆரம்பித்தது.
ஒருவர் தன் வாழ்நாளிலேயே தன்னுடைய எண்ணங்கள் வெற்றி பெறுவதை பார்ப்பது இறைவனின் மகத்தான கிருபை. அந்த வகையில் அஸ்மா மிகப்பெரிய பாக்கியசாலி. நானா அஸ்மாவின் தாக்கம் அன்று எப்படி இருந்ததோ அதுபோலவே நைஜீரிய பெண்களிடம் இன்றும் இருக்கின்றது. பெரும் ரோல்மாடலாக போற்றப்படுகிறார். நைஜீரியாவின் பெருமைமிகு அடையாளம்.
3 comments:
நைஜீரியாவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 110 பேரை போபோஹரம் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர்.
ஏற்கனவே கடந்த 2014ம் ஆண்டு 276 மாணவகிளை கடத்திச்சென்ற நிலையில், தற்போது மீண்டும் 110 மாணவிகளை கடத்திச்சென்றுள்ளனர்.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இவர்கள் தங்களது படைக்கு தேவையானவர்களை கடத்திச்சென்று, மூளைச்சலவை செய்து, தங்களது இயக்கத்தில் சேர்த்து பயன்படுத்தி வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த 2014-ம் ஆண்டு போர்னோ மாகாணம் சிபோக் நகரில் இருந்து 276 பள்ளி மாணவிகளை கடத்திச் சென்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்களில் ஒருசிலர் தம்பித்து வந்த நிலையில், மற்றவர்களின் கதி என்ன? அவர்கள் என்ன ஆனார்கள் என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
இந்நிலையில், கடந்த வாரம் அரசு பள்ளியில் படித்து வந்த 110 மாணவிகளை கடத்திச்சென்றுள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
நைஜிரியாவின், சிபோக் நகரில் இருந்து 275 கி.மீ தொலைவில், யோப் மாகாணத்தின் வடகிழக்கு பகுதியில் அமைந்து உள்ள தாப்சி நகர அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை முற்றுகையிட்ட போகோஹரம் பயங்கரவாதிகள், அங்கிருந்து 110 மாணவிகளை துப்பாக்கி முனையில் கடத்திச்சென்றதாக கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் ராணுவ விமானங்களில் தாப்சி நகருக்கு சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். கடத்தப்பட்ட மாணவிகளை மீட்பதற்கான முயற்சிகளை நைஜிரிய அரசு எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்நாட்டு கலாசாரத்துறை அமைச்சர் அல்ஹாஜி லாய் முகமது வெளியிட்டுள்ள அறிக்கையில், , 910 பேர் பயின்று வந்த அந்த பள்ளியிலிருந்து 110 மாணவிகள் கடத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஒரு பகுதியினர், நைஜர் நாட்டுக்கும் மற்றொரு பிரிவினர் போர்னோ மாகாணத்திற்கும் போகோ ஹரம் பயங்கர வாதிகள் அழைத்துச்சென்றுள்ளதாகவும், அவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் கூறி உள்ளார்.
இதுவும் நைஜிரியாதான்.
நைஜிரியா நாட்டில் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் மோதல்களும் அதிகரித்து வருகிறது. இதுதவிர, முஸ்லிம் மக்களுக்குள்ளும் ஷியா-சன்னி பிரிவினரிடையே மோதல்களும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு பேரணியின்போது கைது செய்யப்பட்ட ஷியா தலைவர் இப்ராகிம் ஜக்ஜக்கி என்பவரை சிறையில் இருந்து விடுதலை செய்ய வேண்டி அந்நாட்டின் பல பகுதிகளில் ஷியா பிரிவினர் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிறையில் தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இருக்கும் நைஜீரியா ஷியா இயக்கத்தின் தலைவர் இப்ராகிம் ஜக்ஜக்கியை மருத்துவ காரணங்களுக்காக ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இவரது விடுதலையை முன்வைத்து அபுஜா நகரில் நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. இந்நிலையில், வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த நைஜீரியா, ஷியா இயக்கத்தை தடை விதிக்க அதிபர் முகமது புகாரி நேற்று உத்தரவிட்டார்.
நாட்டில் அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட இந்த தடையை விதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அதிபர் மாளிகை நேற்று வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் புகழ்பெற்ற
நாலாந்தா பல்கலைக்கழகத்தைப் பற்றி ஒருநாள் ஒரு கட்டுரை எழுதியிருப்பாரா ?
நாகர்சுனா பல்கலைக்கழகம் பற்றி ஒருநாள் ஒரு கட்டுரை எழுதியிருப்பாரா ?
பிரம்மச்சரியத்தை முன் வைத்து இந்தியாவில் நடந்த பள்ளிக் கூடங்கள் குறித்து என்றாவது
சு..ன் கட்டுரை எழுதுவாரா ?
என்ன ஜென்்மமோ இறைவன்தான் இந்த மக்களிடமிருந்து இந்துக்களை காக்க வேண்டும்.
Post a Comment