Followers

Wednesday, May 20, 2020

அடுத்த நம்பிக்கையில் கை வைக்க ஆரம்பித்து விட்டார்கள்.

வெரி குட். அடுத்த நம்பிக்கையில் கை வைக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த முறை அடிப்படையிலேயே கை வைத்துவிட்டார்கள். இந்த செய்தியை புரிந்துக்கொள்ள முதலில் நாம் நம்முடைய ஸ்கூல் காலத்திற்கு சென்று வந்து விடுவோம். உயிரின செல்கள் இரண்டு வகைப்படும். ஒன்று Procaryote, மற்றொன்று Eucaryote.
Eucaryote வகை செல்கள் பல்வேறு மண்டலங்களை தன்னுள்ளே கொண்டவை. ஒவ்வொரு மண்டலமும் தனித்துவமான வேலைகளை செய்து உடல் இயக்கத்திற்கு உதவி செய்கின்றன. மனிதர்கள், விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்களில் இவ்வகை செல்கள் காணப்படுகின்றன.
Procaryote வகை செல்கள், மண்டலங்கள் இல்லாத மிக எளிமையான கட்டமைப்பை கொண்டவை. பாக்டீரியா உள்ளிட்ட உயிரினங்களில் இவை காணப்படுகின்றன. பரிணாம புரிதலின்படி, எளிமையான Procaryote செல்களில் இருந்து சிக்கலான வடிவமைப்பை கொண்ட Eucaryote செல்கள் தோன்றியதாக காலங்காலமாக நம்பப்பட்டு வருகிறது. எப்படி மற்ற பரிணாம நம்பிக்கைகளுக்கு ஆதாரம் இல்லையோ அது போல இதற்கும் ஆதாரம் கிடையாது. இருந்தாலும் நம்பிக்கொண்டிருந்தார்கள்.
சரி நாம விசயத்திற்கு வருவோம். Procaryote செல்கள், மண்டலங்கள் இல்லாத எளிமையான கட்டமைப்பை கொண்டவை என்ற நம்பிக்கையில் தான் தற்போது மண் விழுந்திருக்கிறது. கடந்த சிலபல ஆண்டுகளாக மிக முன்னேறிய தொழில்நுட்பங்களை கொண்டு பாக்டீரியாக்களில் நடத்தப்பட்டு வரும் ஆய்வுகள், Procaryote செல்களிலும் சிக்கலான கட்டமைப்பை கொண்ட பல்வேறு மண்டலங்கள் உள்ளதாக தெரிவிக்கின்றன.
உதாரணத்திற்கு, Eucaryote செல்களுக்கு ஆற்றலைக் (energy) கொடுக்கும் Mitochondria மண்டலம் இருப்பது போல, Procaryote செல்களுக்கு ஆற்றலை கொடுக்க Anammoxosome மண்டலம் உள்ளது. ஆச்சர்யம் என்னவென்றால், இந்த Procaryote மண்டலங்களில் சில, Eucaryote மண்டலங்களை ஒத்திருந்தாலுல், பல மண்டலங்கள் தனித்துவமாக இருக்கின்றன.
இன்னும் வியப்பு என்னவென்றால், எல்லா வகை பாக்டீரியாக்களிலும் இந்த மண்டலங்கள் ஒரே மாதிரியாக இல்லாமல், ஒவ்வொரு வகைக்கும் வேறுபடுகின்றன. இதெல்லாம் நீண்ட கால நம்பிக்கைகளுக்கு ஷாக் கொடுக்கக்கூடிய கண்டுபிடிப்புகள்.
ஆக, Eucaryote செல்களை போல, Procaryote செல்களும் சிக்கலான வடிவமைப்பை கொண்டவை தான் என்பது நிரூபணம் ஆகியுள்ளதால், Procaryote-டிலிருந்து Eucaryote வந்ததாக சொல்லப்பட்டு வந்த கதை கிழிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், இப்போது எப்படி விளக்கத்தை மாற்றியிருக்கிறார்கள் என்றால், Procaryote Eucaryote ஆகிய இரண்டும் தனித்தனியே பரிணாமம் அடைந்ததாம். 
நீங்க எதையாவது சொல்லிட்டு போங்க, நம்ம கிட்ட திணிக்காத வரைக்கும் OK...
படங்கள்: Procaryote மண்டலங்களை காட்டும் elecron micrograph & Reconstruction படங்கள்.
படங்களுக்கு நன்றி: Quanta Magazine
செய்திக்கான ஆதாரம்: https://www.quantamagazine.org/bacterial-organelles-revise…/
சகோ Aashiq Ahamed பதிவிலிருந்து எடுக்கப்பட்டது.



1 comment:

Dr.Anburaj said...

புதிய புதிய கண்டுபிடிப்புகள் வர வர புதிய சிந்தனை புதிய கருத்துக்கள் தோன்றும்.தோன்று போது பழைய நம்பிக்கைகள் மாறலாம்.உறுதிப்படுத்தலாம். பொறுமை அவசியம்.முடிந்தால் தாங்கள் ஒரு ஆய்வுக் கட்டுரையை சமா்பிக்கலாமே.யாா் தடுத்தார்கள் ?

கற்றது கை அளவு.கல்லாதது உலகளவு.

இன்றும் அந்த நிலை மாறவில்லை.