Followers

Thursday, December 31, 2015

கனத்த இதயத்தோடு விடை பெற்றது 2015







யூத நயவஞ்சகர்களால் சிரியாவெங்கும் பிணக் குவியல்!

ஒரு மூட்டை கோதுமைக்கு காரையே விற்கும் அவலம்

கடுங்குளிரிலும் போர்வையின்றி தவிக்கும் இளஞ்சிட்டுக்கள்

கடற்கரையில் கேட்பாரற்று ஒதுங்கிய சிரிய சிறுவனின் உடல்

ரத்த மழையால் நனைந்துருகிக் கொண்டுள்ள சிரிய வீதிகள்

இது எதற்குமே எந்த ஒரு விடையையும் சொல்லாது

துபை புர்ஜ் கலீஃபாவில் வாண வேடிக்கைகளாம்....

இதயமற்ற அரக்கர்கள் இடத்தில்தான் செல்வம் குவியும்

என்பதற்கு மேலும் ஒரு எடுத்துக் காட்டு துபை ஆனால்

இறைவனின் கோபப் பார்வை என்று ஒன்று உண்டு

அதற்கு முன்னால் எந்த ஆட்சியாளனும் நிற்க முடியாது

உங்கள் பிரார்த்தனையில் தினமும் சிரிய மக்களையும்

சேர்த்துக் கொள்ளுங்கள் எனதருமை நண்பர்களே...

கனத்த இதயத்தோடு விடை பெறுகிறது 2015

தலித் என்பதால் பாஜக ஒதுக்கியது! இன்று இஸ்லாத்தை தேர்ந்தெடுத்துள்ளார்!



ராஜஸ்தான் மாநில தலைமைச் செயலாளராக பதவி உயர்வுக்கு தன்னை பரிசீலிக்காத காரணத்தினால் அம்மாநில மூத்த ஐஏஎஸ் அதிகாரியும் தலித் வகுப்பைச் சேர்ந்தவருமான உம்ராவ் சலோதியா தான் விருப்ப ஓய்வு பெறுவதாக எழுதிக் கொடுத்ததோடு இஸ்லாம் மதத்தையும் தழுவினார்.

உம்ராவ் சலோதியா என்ற தலித் வகுப்பைச் சேர்ந்த இவர் 1978-ம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். அவர் சீனியாரிட்டியின் படி இன்று (வியாழக்கிழமை) மாநிலத்தின் தலைமைச் செயலாளராக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வசுந்தரா ராஜே அரசு ஏற்கெனவே உள்ள தலைமைச் செயலாளர் சி.எஸ். ராஜன் என்பவரின் பதவிக்காலத்தை 2016 மார்ச் வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனால் தான் தலித் பிரிவைச் சேர்ந்தவர் என்பதற்காக சாதிப்பாகுபாடு பார்க்கப்படுகிறது என்று குற்றம்சாட்டிய உம்ராவ் சலோதியா, இது குறித்து ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவுக்கு எழுதிய கடிதத்தில், “நாடு விடுதலையடைந்த பிறகு SC/ST பிரிவைச் சேர்ந்த நான் முதல் முறையாக மாநிலத்தின் தலைமைச் செயலாளராக வியாழக்கிழமையான இன்று சீனியாரிட்டி அடிப்படையில் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் நடப்பு தலைமைச் செயலாளர் சி.எஸ்.ராஜனின் பதவிக்காலம் 2016 மார்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது எனக்கான வாய்ப்பை மறுப்பதாகும்.

ஆகவே 3 மாதகால நோட்டீஸ் அடிப்படையில் நான் அனைத்திந்திய பணி அலுவல் விதிமுறைகளின் படி பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெறுகிறேன். எனக்கு விருப்ப ஓய்வு அளிக்க வேண்டும், ஏனெனில் ஜூனியர் அதிகாரியின் கீழ் நான் பணியாற்ற விரும்பவில்லை” என்று கூறியுள்ளார்.

இதனினும் ஒருபடி மேலே போய் உம்ராவ் சலோதியா இஸ்லாம் மதத்தையும் இன்று தழுவுவதாக அறிவித்தார். செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறும்போது, “இஸ்லாம் மதத்தில் மனிதர்களிடையே பாகுபாடு கிடையாது, இந்து மதம் சாதி அடிப்படையில் பாகுபாடு உடையது. மதம் மாறிய பிறகு எனது பெயர் உம்ராவ் கான்.” என்றார்.

ராஜஸ்தான் மாநில அரசு மறுப்பு:

இவரது அதிரடி அறிவிப்பை அடுத்து ராஜஸ்தான் அமைச்சர் ராஜேந்திர ராத்தோர், கூறும்போது, “சலோதியா அரசுக்கு எதிராக பேசியதன் மூலம் சட்டத்தை மீறியுள்ளார். அவரது குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. ராஜஸ்தான் அரசு சாதிப்பாகுபாடு அடிப்படையில் செயல்பட்டிருந்தால் ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தலைவராக SC/ST பிரிவைச் சேர்ந்த கைலாஷ் மேக்வால் இருந்திருக்க முடியாது.

இது குறித்து ராஜஸ்தான் அரசு விசாரணை செய்து, அதன் முடிவுகளின் அடிப்படையில் சலோதியா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்” என்றார்.

பாஜக அரசு மீது காங்கிரஸ் தாக்கு:

தலித் சமுதாயத்தினரிடம் பாரபட்சமாக ராஜஸ்தான் மாநில பாஜக அரசு நடந்து கொண்டுள்ளது கண்டிக்கத்தக்கது என்று கூறிய சச்சின் பைலட், “சலோதியா விருப்ப ஓய்வு கேட்டுள்ளது ராஜஸ்தான் ஆளும் கட்சியான பாஜக-வின் செயல்கள் மீது கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும், பாஜக அரசின் அலட்சியப்போக்கினால் மூத்த அதிகாரி இஸ்லாம் மதத்தை தழுவ நேரிட்டுள்ளது வருந்தத்தக்கது” என்றார்.

உம்ராவ் சலோதியா ராஜஸ்தான் மாநில போக்குவரத்துக் கழகத்தின் தலைவராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
31-12-2015

பிஜேபி என்பது பார்பனர்களின் நலனை தக்க வைப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு என்பது இதிலிருந்தும் விளங்குகிறது. வசுந்தராவின் பிஜேபி கட்சி என்றுமே தலித்களுக்கு சேவை செய்யப் போவதில்லை. 'உம்ராவ் கான்' ஆக மாறிய இவரை இஸ்லாம் இரு கரம் நீட்டி வரவேற்கிறது. இனி நீங்கள் உலக முஸ்லிம்களின் சகோதரராக மாறி விட்டீர்கள். பிறக்கின்ற இந்த புது வருடம் உங்களை புது மனிதனாக உருவாக்கும். சூத்திரன் என்ற இழி சொல்லும் இன்றிலிருந்து உங்களுக்கு நீங்குகிறது.

ஜெருஸலத்திலும் தூய இஸ்லாத்தை எத்தி வைக்கும் பணி!











இன்று உலக அளவில் இஸ்லாமியருக்கு பெருத்த சேதங்களை விளைவிப்பவர்கள் யூதர்களே.... அதிலும் குறிப்பாக இஸ்ரேலைப் பற்றி சொல்லவே வேண்டாம். எப்படி ஒருவர் பார்பனராக மாற முடியாதோ அது போல் யூதனாகவும் ஒருவன் மாற முடியாது. ஆனால் இஸ்லாம் நாள் தோறும் வளர்ந்து கொண்டுள்ளது. இது யூதர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளவர்களுக்கு பெருத்த தலைவலியாக இருக்கிறது. அனைவரும் இஸ்லாமியராக மாறி விட்டால் நமக்கு மதிப்பு போய் விடுமே என்ற அச்சத்தில் இஸ்லாமியரின் மேல் பொய்க் குற்றச்சாட்டுக்கள். குண்டு வெடிப்புகள் நிகழ்த்தி இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுக்கப் பார்க்கிறார்கள்.

அதே அளவுகோல்தான் இந்தியாவிலும். இந்து மக்களை தங்களுக்கு கீழ்படிய வைத்து இத்தனை காலம் சுகமாக வாழ்ந்து விட்டது மேல்சாதி வர்க்கம். தற்போது பல இந்து பிற்படுத்தப்பட்ட மக்கள் இன விடுதலை வேண்டி இஸ்லாத்தை நோக்கி அலை அலையாக வந்து கொண்டிருக்கின்றனர். இது மேல் சாதி வர்க்கத்துக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. இஸ்லாத்தின் மேல் எப்படியாவது பழி சுமத்த எந்த நேரமும் சிந்தனையுடனேயே உள்ளனர். வன்முறையை இஸ்லாமிய பெயர்களில் அரங்கேற்றுகின்றனர். பல குண்டு வெடிப்புகளை நிகழ்த்துகின்றனர். 'கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் வரை' என்பது போல் அனைத்தும் இந்துத்வாவாதிகள் செய்ததாக நிரூபிக்கப்பட்டது. இந்த மாதம் வந்த மழை வெள்ளம் இஸ்லாமியர் எப்படிப்பட்டவர்கள் என்பதை பலரும் உணர்ந்து கொண்டனர்.

அதே போல் இஸ்ரேலிய யூதர்களுக்கு இஸ்லாத்தை எத்தி வைக்கும் பணியை நமது சகோதரர்கள் செய்து வருகின்றனர். அவர்கள் இஸ்லாத்தை ஏற்கிறார்களோ இல்லையோ இஸ்லாம் பற்றிய தவறான பிம்பத்தை துடைத்தெறிய இது போன்ற அழைப்புப் பணி நமக்கு மிக உதவிகரமாக இருக்கும்.

புது வருட கொண்டாட்டங்கள் பற்றி ஜார்ஜ்!



'நான் கிருத்துவனாக இருந்த போது புது வருடமும் வழக்கம் போல் கடந்து செல்லும். அப்போது நான் கண் இருந்தும் குருடனாக வாயிருந்தும் ஊமையாக இருந்தேன். வாழ்வின் அர்த்தம் என்ன என்பதையும் அறியாமல் இருந்தேன்.

ஆனால் நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பிறகு வாழ்வின் உண்மையை விளங்கிக் கொண்டேன். கொண்டாட்டங்கள் என்பது நிலையில்லாத இந்த உலகத்தில் இல்லை. இறைவனை சந்திக்கும் அந்த மறுமை வாழ்வில்தான் நிரந்தரமான கொண்டாட்டங்கள் உள்ளது என்பதையும் விளங்கிக் கொண்டேன்.

மார்க்கத்துக்கு முரணான அநாச்சாரங்கள் அரங்கேற்றப்படும் மேற்கத்திய கலாசாரமான புது வருட கொண்டாட்டத்திலிருந்து நம் அனைவரையும் இறைவன் பாதுகாப்பானாக!

சையத் இப்னு ஜார்ஜ்

-------------------------------------------

When I was christian new year was exiting cause I was blind and deaf, I never knew the purpose of life...

But after islam I found the truth ...am on earth to worship my creator and return to him

The real celebration starts in heaven not on earth ....be prepared to celebrate there

May Allah save us from West culture and celebratons

..ameen

By
Saeed Ibn George


https://m.facebook.com/story.php?story_fbid=1693848434191235&id=100006982842529&refid=7&__tn__=%2As

Wednesday, December 30, 2015

நிஜமான ஹீரோக்களை பார்க்க வேண்டுமா?

சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய இஸ்ரேலிய வீரர்கள். கொஞ்சம் கூட அசராது தங்களின் இறை வணக்கத்தை செலுத்திக் கொண்டிருக்கும் பாலஸ...

Posted by Nazeer Ahamed on Wednesday, December 30, 2015


சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய இஸ்ரேலிய வீரர்கள். கொஞ்சம் கூட அசராது தங்களின் இறை வணக்கத்தை செலுத்திக் கொண்டிருக்கும் பாலஸ்தீன முஸ்லிம்கள். துப்பாக்கி வைத்திருக்கும் இஸ்ரேலியர்கள் மனதில் இனம் புரியாத ஒரு திகில் இருக்கிறது. நிராயுதபாணிகளாக நிற்கும் முஸ்லிம்கள் மனதில் எந்த பயமும் இல்லை.

உண்மையாளர்களுக்கு வீரர்களுக்கு ஒரு முறைதான் சாவு. கோழைகளுக்கு தினமும் சாவு. தினம் தினம் அவன் செத்து பிழைப்பான். இஸ்லாமியன் என்ற காரணத்துக்காக வெட்டுப்பட்டோ குண்டடிப் பட்டோ இறந்தால் அந்த இளைஞனுக்கு நேரடியான சொர்க்கம். எனவே எந்த பயமுமின்றி யாருக்கும் தலை வணங்காமல் செல்கின்றனர் முஸ்லிம்கள். அரசும், ராணுவமும் காவல் துறையும் அமெரிக்காவும் கை வசம் இருப்பதால் இன்று வரை தாக்கு பிடிக்கிறது இஸ்ரேல். நிராயுதபாணிகளாக பாலஸ்தினர்களை சந்திக்கச் சொல்லுங்கள் பார்போம். ஒரே நாளில் இஸ்ரேல் காணாமல் போய் விடும்.

இஸரேலின் கைப்பாவைகளாக செயல்படும் நம் நாட்டு இந்துத்வாவாதிகளுக்கும் இது பொருந்தும். 10 பேர் சேர்ந்து கொண்டு திருட்டுத்தனமாக சென்று ஒரு முஸ்லிமைக் கொல்வார்கள். குஜராத்திலிருந்து நேற்று நடந்த ஏர்வாடி ஹாஜா கொலை வரை இந்த கோழைத்தனத்தைத்தான் இவர்கள் பின்பற்றுகிறார்கள்.

ஆட்டோ டிரைவரான ஹாஜாவை 'சவாரிக்கு வா' என்று சொல்லி அழைத்துச் சென்று ஐந்து பேர் கொண்ட இந்துத்வ கும்பல் வெட்டி சாய்த்திருக்கிறது. வீர முள்ள ஆண் மகன்களாக இருந்திருந்தால் நேருக்கு நேர் சந்தித்திருப்பார்கள். ஆனால் இவர்கள்தான் கோழைகள் ஆயிற்றே. குஜராத்திலும் 100 மற்றும் 200 பேராக சென்றுதான் பெண்களையும் வயோதிகர்களையும் கொன்றிருக்கிறார்கள் பேடிகள். இறைவன் இவர்கள் மனத்திலே நம்மைப் பற்றிய ஒரு பயத்தை உண்டு பண்ணி விடுகிறான். எனவேதான் நேருக்கு நேர் சந்திக்க பயந்து கோழைத்தனமாக நடந்து கொள்கின்றனர்.

'ஏக இறைவனை மறுப்போரே! உங்கள் கூட்டம் அதிகமாக இருந்த போதும் அது உங்களுக்குச சிறிதளவும் உதவாது. நம்பிக்கைக் கொண்டோருடன் இறைவன் இருக்கிறான்'

-குர்ஆன் 8:19

தினமும் ஏழைகளுக்கு உணவளித்துக் கொண்டிருக்கும் இஸ்லாமிய இளைஞர்!

'மழையோ வெயிலோ... எப்படி இருந்தாலும் மதியம் ஒரு மணிக்கு எங்களுக்கு சாப்பாடு வந்து விடும்''சாப்பாட்டுக்கு பணம் வாங்குவதி...

Posted by Nazeer Ahamed on Wednesday, December 30, 2015

'மழையோ வெயிலோ... எப்படி இருந்தாலும் மதியம் ஒரு மணிக்கு எங்களுக்கு சாப்பாடு வந்து விடும்'

'சாப்பாட்டுக்கு பணம் வாங்குவதில்லை. அதோடு அன்பாக பரிமாறுகிறார்கள்'

'சாதி மதம் பார்க்காமல் தினமும் 100 லிருந்து 150 பேருக்கு வயிறு நிறைய சாப்பாடு போடகிறார் அஜர் பாய்'

மக்கள் இந்த உணவு வழங்கும் நிகழ்ச்சியைப் பற்றி பேசிக் கொள்வதையே நாம் மேலே பார்த்தது.

அமிதாப்பச்சன்:

நம் முன் அமர்ந்திருக்கும் அஜர் பாய் தினமும் 200 பேருக்கு ஹைதராபாத்தின் மேம்பாலத்துக்குக் கீழ் உள்ள பகுதியில் மதிய உணவு இலவசமாக கொடுத்து வருகிறார். அஜர் பாய்! கொஞ்சம் வருகிறீர்களா?

(அஜர் அமிதாப்பை நோக்கி வருகிறார்)

'அஜர் பாய்! உங்களின் அனுபவங்களைச் சொல்லுங்கள். தினமும் எத்தனை பேருக்கு உணவு வழங்கி வருகிறீர்கள்?

அஜர்: நூறிலிருந்து நூற்று முப்பது பேர் வரை.... (பலத்த கைத் தட்டல்)

அமிதாப் பச்சன்: உங்களின் அனுபவத்தை எங்களிடம் பகிருங்களேன்.

அஜர்: நான்கு வருடம் முன்பு எனது சகோதரனோடு ரயில்வே பகுதி சமீபமாக போய்க் கொண்டிருக்கும் போது டயர் பஞ்சராகி விட்டது. வண்டியை ஓரமாக்கி விட்டு சரி செய்ய காத்திருந்தோம். அப்போது ஒரு ஓரத்தில் ஒரு பெண் ஏதோ உளறிக் கொண்டிருந்தார். அங்கிருந்தவர்களிடம் 'இந்த பெண்ணுக்கு என்ன ஆனது' என்று கேட்டேன்.

'இந்த பெண்ணின் மகன் இரண்டு நாளாக இவரைப் பார்க்க வரவில்லை. சாப்பிடாததனால் பசியில் இவ்வாறு அரற்றிக் கொண்டுள்ளார்' என்று சொன்னவர்.

நான் ஆச்சரியம் அடைந்தவனாக 'ஏன்.. நீங்கள் இந்த பெண்ணுக்கு உணவளிக்கக் கூடாதா?' என்று கேட்டேன்.

'எங்களுக்கே உணவு பற்றாமல் இருக்கும் போது இந்த பெண்ணுக்கு நாங்கள் எங்கிருந்து கொடுப்பது?' என்றனர்.

இதைக் கேட்டவுடன் எனக்கு கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. உடன் பக்கத்தில் இருந்த உணவகத்துக்குச் சென்று உணவு வாங்கி வந்து அந்த பெண்ணுக்கு கொடுத்தேன். இந்த நிகழ்வு என் மனத்தை மிகவும் பாதித்தது. நடந்த விபரங்களை என் மனைவியிடம் கூறினேன். அன்று எங்கள் வீட்டில் செய்த சிறிது உணவை எடுத்துக் கொண்டு ரெயில்வே பிளாட்பாரத்தில் தங்கியிருக்கும் ஏழைகளுக்கு கொடுத்தோம். அந்த உணவை பார்த்தவுடன் ஏதோ காணாததைக் கண்டது போல் இரு கைகளால் அள்ளி அள்ளி சாப்பிட்டதைப் பார்த்து என் கண்கள் கலங்கி விட்டது. என் இளமைக்கால் வாழ்வும் எனது ஞாபகத்துக்கு வந்தது.

அமிதாப் பச்சன்: உங்களின் இளமைக்கால வாழ்வைப் பற்றி எங்களுக்கு சொல்ல முடியுமா? பசியின் கொடுமையை உணர்திருக்கிறீர்களா?

அஜர்: என் தந்தை இறந்த போது எனக்கு நான்கு வயதிருக்கும். என் தாயார் என்னை மிகவும் சிரமத்தில் வளர்த்தார். எனது நானா வீட்டிலிருந்து தினமும் ஒரு வேளை உணவு வரும். அதை வைத்து அனுசரித்து சரி செய்து கொள்வோம். இவ்வளவு வறுமையிலும் என்னை எனது தாயார் வேலைக்கு அனுப்பவில்லை. 'நீ நன்றாக படி' என்று தான் என்னிடம் சொன்னார் (சொல்லும் போது அழுகிறார்) உறவினர் வீட்டில் எங்காவது விருந்துக்கு சொல்லியிருந்தார்கள் என்றால் எட்டு நாட்களுக்கு முன்பிருந்தே அவலோடு இருப்பேன். அந்த ஒரு நாளில் வயிறு நிறைய சாப்பிட்டு விடலாம் என்ற எண்ணத்தில் காத்திருப்பேன். பசி என்பது எவ்வளவு பெரிய கொடுமை என்பதை என்னை விட யாரும் சரியாக அறிந்திருக்க முடியாது.

அமிதாப் பச்சன்: இங்கு வந்திருக்கும் உங்கள் தாயாரிடம் பேசுவோம்....

'அம்மா! உங்கள் குடும்பம் 20 வருடங்களுக்கு முன்பு சாப்பாட்டுக்கே சிரமப்பட்டது. இன்று உங்கள் மகன் பல பேருக்கு சாப்பாடு போடுகிறார். இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?'

அஜரின் தாயார்: இதைப் பார்க்க எனக்கு சந்தோஷமாக உள்ளது (நா தழு தழுக்கிறது. அதற்கு மேல் பேச முடியாமல் மைக்கை தருகிறார்.)

Tuesday, December 29, 2015

தலித் மக்கள் மீதான தாக்குதலில் 7 பேர் கைது:



கர்நாடகத்தில் தலித் மக்கள் மீது ஆதிக்க சாதியினர் தாக்குதல் நடத்தியதில் கர்ப்பிணி உட்பட 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந் தனர். இது தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 22 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கர்நாடக மாநிலம், ரெய்ச்சூர் மாவட்டத்தில் துர்விஹால் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் நடுவில் தலித் அமைப்பினர் வைத்திருந்த பேன‌ர் மீது, கடந்த 24-ம் தேதி வேறு சாதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் வாகனம் மோதி விபத்தை ஏற்படுத்தினார். மேலும் அந்த பேனரில் இருந்த அம்பேத்கரின் படத்தையும் அவர் அவமதித்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக தலித் அமைப்பை சேர்ந்த‌ இளைஞர்கள் மறுநாள் விசாரித்தபோது, இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது, “ஊருக்கு நடுவில் அம்பேத்கரின் பேனரை வைக்கக்கூடாது. மீறி வைத்தால் தலித் மக்களை ஊரை விட்டே விரட்டுவோம்” ஆதிக்க சாதியினர் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தலித் மக்கள் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கு மாறு துர்விஹால் போலீஸாரிடம் மனு அளித்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஆதிக்க சாதியினர் 50-க்கும் மேற்பட்டோர் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு, அங்குள்ள தலித் காலனிக்குள் நுழைந்து, தலித் மக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்கினர். இதில் 3 மாத கர்ப்பிணி உட்பட 21 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் 25 பேர் லேசான காயம் அடைந்தனர்.

இதையடுத்து 29 பேர் மீது துர்விஹால் போலீஸார் 5 பிரிவு களின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எஞ்சிய 22 பேரை தேடும் பணியை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் ரெய்ச்சூர் மாவட்ட ஆட்சியர் சசிகாந்த் செந்தில், காவல் கண்காணிப்பாளர் சேத்தன் சிங் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட மக்களிடம் விசாரணை நடத்தினர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சமூக செயற்பாட்டாளர் பீர் பாஷா தலைமையிலான உண்மை ஆராயும் குழுவினர் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து விவரம் கேட்டறிந்தனர்.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
30-12-2015

ஒரு சுதந்திர நாட்டில் தனக்கு பிடித்தமான தலைவரின் படத்தை வைக்கக்கூட அனுமதி இல்லை என்றால் ஆதிக்க சாதியினரின் மன நிலை எப்படி இருக்கிறது என்பதை யூகித்துக் கொள்ளலாம்.

கங்கை நதியின் தூய்மைக்காக மோடி அரசு ஏதாவது செய்யுமா?

கங்கை நதியின் தூய்மைக்காக மோடி அரசு ஏதாவது செய்யுமா?கங்கை நதியை புனிதமானது என்று நினைத்து குடிக்கும் பலர் வியாதியை வில...

Posted by Nazeer Ahamed on Tuesday, December 29, 2015

கங்கை நதியின் தூய்மைக்காக மோடி அரசு ஏதாவது செய்யுமா?

கங்கை நதியை புனிதமானது என்று நினைத்து குடிக்கும் பலர் வியாதியை விலை கொடுத்து வாங்குகிறார்கள். அவசியம் குடிக்க வேண்டும் என்றிருந்தால் நன்கு கொதிக்க வைத்து மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே குடிக்கவும். ஏனெனில் அழுகிய இறந்த மனித உடல்களின் சதைத்துண்டுகளையும் நீங்கள் புனிதம் என்று கரைத்து குடிக்கிறீர்கள் என்பதையும் மறக்க வேண்டாம். கங்கை நீரை குடிப்பதால் புற்று நோய் மிக எளிதில் தொற்றிக் கொள்ளும் வாய்ப்புள்ளதாக மருத்துவ அறிக்கை கூறுகிறது.

இறை வணக்கமாக இருந்தாலும் உடல் நலம் முக்கியம். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். எரிந்த பிணங்களை கங்கை ஆற்றில் அரை குறையாக இறக்கி விடுவதை தடுத்தாலே சில ஆண்டுகளில் கங்கையை தூய்மை படுத்தி விடலாம். கங்கை ஆற்றில்தான் இறக்க வேண்டும் என்றால் ஒரு அரை பர்லாங் தூரத்தை கங்கை நீரை கொண்டு வந்து தடுப்பு ஏற்படுத்தி அங்கு பிணங்களை இறக்கலாம். அந்த ஓடை கங்கை ஆற்றில் கலந்து விடாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அந்த ஓடையில் மீன்கள் முதலைகளை வளர்த்தால் அவை சாப்பிட்டு அந்த நீரை தூய்மையாக்கி விடும். உலக வங்கி கங்கை நீரை தூய்மை படுத்த பல கோடிகளை வாரி இறைக்கிறது. அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராக போய்க் கொண்டுள்ளது. இந்துக்களுக்காக பெரும் சேவை செய்வதாக சொல்லிக் கொள்ளும் மோடி அரசு இதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் இதற்காக நம் நாடு பெரும் இழப்பை சந்திக்க நேரிடும்.

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ரஞ்சித் கைது!



பஞ்சாப்பை சேர்ந்த முன்னாள் விமானப்படை அதிகாரியான ரஞ்சித் என்பவரை டெல்லி கிரைம் பிராஞ்ச் போலீசார் கைது செய்துள்ளனர். கைதான ரஞ்சித், ஐஎஸ்ஐ அமைப்புடன், இ-மெயில், வாட்ஸ்அப் அழைப்புகள், ஸ்கைப் அழைப்புகள் மூலம் தொடர்பில் இருந்துள்ளார். ஒரு பெண் மூலமாக முதலில் தொடர்பு ஏற்பட்டு அது பின்னர் தொடர்கதையாகியுள்ளது.

ரஞ்சித்தின் பூர்வீகம் கேரளா. சென்ற ஞாயிறன்று கைது செய்யப்பட்டு டெல்லி கொண்டு வரப்பட்டுள்ளார். விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
29-12-2015

நம் தமிழக பத்திரிக்கைகள் நாளை 'ஒரு இளைஞர் கைது' என்று செய்தி வெளியிடுவார்கள். :-)

ஏனெனில் இஸ்ரேல் அவர்களின் தாய் நாடல்லவா!



'அமெரிக்கா பிரிட்டன் படைகளை சமாளிப்பது எங்களுக்கு அவ்வளவு சிரமம் இல்லை. ஆனால் இஸ்ரேல் படைகளை எதிர் கொள்வதுதான் எங்களுக்கு பிரச்னை. அவர்கள் நன்கு பயிற்சி பெற்றவர்கள்'

ஐஎஸ்ஐ அறிவிப்பு
விகடன்
29-12-2015

இதோ சொல்லியாச்சுல்ல..... ஈராக்கில் நுழைவார்கள், சிரியாவில் நுழைவார்கள், துருக்கியில் நுழைவார்கள்... அங்குள்ள மக்களை கொல்வார்கள். அப்பாவிகளான பத்திரிக்கையாளர்களின் தலையை கொய்து அதனை வீடியோவாக்கி பரப்புவார்கள். அதற்கு 'ஜிஹாத்' என்றும் பெயரிடுவார்கள்.

ஆனால் மறந்தும் கூட இஸ்ரேல் பக்கம் செல்ல மாட்டார்கள். ஏனெனில் அது அவர்களின் தாய் நாடல்லவா

மோடியைப் போல இழிவடைந்தவரை நான் பார்க்கவில்லை - ராம்ஜெத்மலானி



'ஒரு மனிதனை உயரத்திலிருந்து இவ்வளவு சீக்கிரம் தூக்கி எறியப்பட்டதை எனது வாழ்நாளில் முதன் முதலாக இப்போதுதான் பார்கிறேன். நான் திருவாளர் நரேந்திர மோடியைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறேன். சிரமமான நேரத்தில் மோடியை அதிகம் ஆதரித்தவர்களில் நானும் ஒருவன். '

- ராம் ஜெத்மலானி

மோடியைப் பற்றி இந்துத்வாக்கள் கட்டிய பிம்பம் பொல பொலவென ஒரு வருடத்திலேயே உதிரத் தொடங்கி விட்டது. இனி அரசியல் வானில் மோடியின் வீழ்ச்சியை எதிர்பார்கலாம்.

Monday, December 28, 2015

'ரொட்டி வங்கி' தொடங்கி சேவையாற்றி வரும் யூசுப் முகாட்டி!



மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்கா பாத்தில் யூசுப் முகாட்டி என்பவர், ‘ரொட்டி வங்கி’ தொடங்கி ஏழை களின் பசியை போக்கி வருகிறார். இந்த உன்னத சேவைக்கு அவருடைய மனைவி, சகோதரிகள், பொதுமக்கள் ஆர்வமுடன் உதவி வருகின்றனர்.

இந்தியாவில் ஒருவேளை உணவு கூட கிடைக்காமல் பட்டினி கிடப்பவர்கள் அதிகம் உள்ளனர். அவர்களின் பசியை போக்க உத்தரப் பிரதேச மாநிலம் பண்டல்கண்ட் என்ற பகுதியில் ஒருவர், ‘ரொட்டி வங்கி’ தொடங்கினார். அதேபோல் இப்போது மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் யூசுப் முகாட்டி என்பவர் கடந்த 5-ம் தேதி ரொட்டி வங்கி தொடங்கி உள்ளார். ‘ஹாரூண் முகாட்டி இஸ்லாமிக் சென்டர்’ என்ற அமைப்பையும் நிறுவி ஏழை மக்களுக்கு உதவி வருகிறார். தவிர துணிக்கடையும் சிறிதாக நடத்திவருகிறார். இந்த ரொட்டி வங்கி ஜின்சி - பைஜிபுரா சாலையில் இயங்கி வருகிறது.

அஜந்தா எல்லோரா குகை ஓவியங்களுக்கு புகழ்பெற்ற அவுரங்காபாத்தில், யூசுப்பின் சேவைக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. இதுகுறித்து 38 வயதாகும் யூசுப் கூறியதாவது:

ஏழைகள் குறிப்பாக முஸ்லிம்கள் பலர் ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் மிகவும் கஷ்டப்படுவதை பல ஆண்டுகளாக பார்த்திருக்கிறேன். பல குடும்பங்களில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால், ஒருவர் மட்டுமே சம்பாதிப்பவராக இருக்கிறார். அவர்களால் வயிறார உணவு உண்ண கூட வருவாய் கிடையாது. இது மிகவும் பரிதாபமான விஷயம்.

என் மனைவி கவுசர் மற்றும் திருமணமான 4 சகோதரிகள் சீமா ஷாலிமார், மும்தாஜ் மேமன், ஷாநாஸ் ஷபானி, ஹூமா பரியானி ஆகியோருடன் கலந்தாலோசித்தேன். அவர்கள் எல்லோரும் மனதார ஒப்புக் கொண்டு உதவ முன்வந்தனர். கடைசியில் நினைத்தபடி கடந்த 5-ம் தேதி ரொட்டி வங்கியை திறந்து விட்டோம். முதலில் 250 பேர் மட்டுமே உறுப்பினர்களாக சேர்ந்தனர்.

ரொட்டி வங்கியை திறந்த பிறகு, இந்த பக்கம் போவோர் வருவோர் எல்லாம் விசாரிக்க தொடங்கினர். மிக உன்னதமான சேவை என்று அவர்கள் பேசி சென்றனர். ரொட்டி வங்கியில் உறுப்பினராக சேர ஒரு படிவத்தை பூர்த்தி செய்து தர வேண்டும். அவர்களுக்கு நாங்கள் தனி கோட் நம்பர் தருவோம். மேலும் கோட் நம்பருடன் தனி பை ஒன்றும் தருகிறோம்.

உறுப்பினர்கள் தினமும் குறைந்தபட்சம் புதிதாக செய்யப்பட்ட 2 ரொட்டிகள் மற்றும் சைவ, அசைவ உணவு குழம்புகளை வங்கியில் கொடுக்க வேண்டும். தினமும் அவர்களுடைய வீட்டில் என்ன சமைக்கிறார்களோ அதை கொடுத்தால் போதும். அவ்வளவுதான். இதை நாங்கள் சொன்ன பிறகு, 15 நாட்களில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரித்து விட்டது. மேலும் மேலும் உறுப்பினர்களின் எண்ணிக்கை பல்கி பெருகும் வாய்ப்பு உள்ளது.

காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை ரொட்டி வங்கி செயல்படும். பொதுமக்கள் தாமாகவே முன்வந்து இங்கு ரொட்டிகளையும், சைவ, அசைவ உணவுகளையும் வழங்கி விட்டு செல்கின்றனர். சில வேளைகளில் எதிர்பார்ப்பதை விட அதிகளவு உணவு கிடைத்து விடுகிறது. சுமார் 500 பேருக்கு ரொட்டி வங்கி மூலம் தினமும் உணவு வழங்கி வருகிறோம்.

ரொட்டி வங்கி உணவு வழங்கும் உறுப்பினர்கள் மற்றும் உணவு பெற்று செல்லும் ஏழைகளில் மூன்றில் ஒரு பங்கினர் முஸ்லிம் அல்லாதவர்கள். எங்கள் ரொட்டி வங்கி பற்றி கேள்விப்பட்ட திருமண ஏற்பாட்டாளர்களும், கூடுதலாக உள்ள உணவு வகைகளை அனுப்பி தொடங்கி உள்ளனர். இதுபோல் 6 இந்து திருமண ஏற்பாட்டாளர்கள், 12 முஸ்லிம் திருமண ஏற்பாட்டா ளர்கள் மிகச்சிறந்த சைவ, அசைவ உணவுகளை அனுப்பி வைத்தனர்.

உணவு அதிகமாக வருவதால் அவை கெட்டு போகாமல் இருக்க மிகப்பெரிய பிரீஸரில் வைத்து பயன்படுத்துகிறோம். இதேபோல் பெரிய ரெஸ்டாரன்டுகள், டிலக்ஸ் ஓட்டல்கள், கார்ப்பரேட், தொழிற் சாலை கேன்டீன்கள், பயணிகள் விமான கிச்சன், மெகா நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் மிச்சமாகும் உணவு பொருட்களை அனுப்பி வைத்தால் ஏழைகளுக்கு வழங்க முடியும். மேலும், உணவு பொருட்களும் வீணாகாது.

வங்கிக்கு வரும் உணவு தரமான தாக, புதிதாக உள்ளதா என்பதை ஆய்வு செய்தே வாங்குகிறோம். ஏழை மக்கள், வயதானவர்கள், நோயுற்றவர்கள், வேலை இல்லாதவர்கள் போன்றோர் எந்த நேரத்திலும் வந்து அவர்களுக்கு தேவையான, விருப்பமான சைவ அல்லது அசைவ உணவுகளை பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் பட்டினி கிடக்கும் அவல நிலை ஏற்படாது. இவ்வாறு யூசப் கூறினார்.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
29-12-2015

இந்த சேவையை இஸ்லாமிய இயக்கங்கள் இந்தியா முழுக்க செயல்படுத்தினால் பல ஏழைகள் ஒரு வேளை உணவாவது வயிறார உண்ண வழி ஏற்படும்.

அல்லாஹ்வின் தூதர் அவர்கள், ''இன்று உங்களில் நோன்பு நோற்றிருப்பவர் யார்?'' என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்கர் (ரலி) அவர்கள் 'நான்' என்றார்கள்.

''இன்றைய தினம் உங்களில் ஜனாஸாவைப் பின்தொடர்ந்து சென்றவர் யார்?'' என்று கேட்டார்கள். அபூபக்கர் (ரலி) 'நான்' என்றார்கள்.

''இன்றைய தினம் ஓர் ஏழைக்கு உணவளித்தவர் உங்களில் யார்?'' என்று அவர்கள் கேட்க, அதற்கும் அபூபக்கர் (ரலி) அவர்கள் 'நான்' என்றார்கள்.

''இன்றைய தினம் ஒரு நோயாளியை உடல் நலம் விசாரித்தவர் உங்களில் யார்?'' என்று கேட்க, அதற்கும் அபூபக்கர் (ரலி) அவர்கள் 'நான்' என்றார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''எந்த மனிதர் இவை அனைத்தையும் மொத்தமாகச் செய்தோரோ அவர் சொர்க்கத்தில் நுழையாமல் இருப்பதில்லை'' என்றார்கள். அறிவிப்பவர்:

அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் (1865)

தாத்ரி - அக்லாக் வீட்டில் இருந்தது ஆட்டிறைச்சி!



மாட்டிறைச்சி வைத்திருந்ததாக அக்லாக் என்ற முதியவரை கொன்றது ஞாபகம் இருக்கலாம். தற்போது அந்த இறைச்சி சோதனை செய்து ரிபோர்டும் வந்துள்ளது. அக்லாக் வீட்டில் இருந்தது ஆட்டிறைச்சியாம். குர்பானி இறைச்சியை ஒரு வாரம் வரை கூட குளிர்சாதனபெட்டியில் வைத்து பயன்படுத்துவது இஸ்லாமியரின் வழக்கம்.

இந்த கொலையில் தொடர்புடைய 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விஷால் ராணா, சிவம், பிஜேபி தலைவர் சஞ்சய் ரானா போன்றோரும் இதில் அடங்குவர். அந்த முதியரின் உயிர் இனி திரும்ப வருமா? இந்த கொலையை செய்த நாய்களை நடு ரோட்டில் நிறுத்தி வைத்து கல்லால் அடித்து கொன்றால் தான் இனி இது போன்ற செயல்கள் நடக்காது. அகிலேஷ் அரசு என்ன செய்கிறது என்று பொறுத்திருந்து பார்போம்.

இந்துத்வாவாதிகளின் தலையீட்டால் ஒருகால் இவர்கள் விடுதலையாகலாம். ஆனால் மறுமை என்ற ஒரு வாழ்வில் பல முறை உயிர் கொடுக்கப்பட்டு இந்த கொடியவர்கள் அதை விட அதிக வலியை உணருவார்கள். அந்த நாளுக்காக நாமும் பொறுத்திருப்போம்.

தகவல் உதவி
ஹந்து ஆங்கில நாளிதழ்
28-12-2015

விபத்தில் இறந்தவருக்கு வீடு கட்டி கொடுக்கப்பட்டது!

மேலப்பாளையம் பள்ளிவாசலுக்குள் பூட்ஸ் காலுடன் நுழைந்து அப்பாவிகள் மீது பள்ளிவாசலுக்குள் தடியடி நடத்திய காவல் துறையினரைக் ...

Posted by Nazeer Ahamed on Monday, December 28, 2015

மேலப்பாளையம் பள்ளிவாசலுக்குள் பூட்ஸ் காலுடன் நுழைந்து அப்பாவிகள் மீது பள்ளிவாசலுக்குள் தடியடி நடத்திய காவல் துறையினரைக் கண்டித்து சென்னையிலும் மதுரையிலும் கண்டன ஆர்ப்பாட்டத்தை தவ்ஹீத் ஜமாஅத் நடத்தியது.

இப்போராட்டத்தில் பங்கேற்க வந்த திருப்பூரைச் சேர்ந்த நசீர் அவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இளைஞரான நசீர் அவர்களின் குடும்பம் அவருக்குப் பின் சிரமப்படக் கூடாது என்பதற்காக கொள்கைச் சகோதரர்களிடம் தவ்ஹீத் ஜமாஅத் நிதி திரட்டியது.

அவருக்கு சொந்த வீடு இல்லாதைக் கவனத்தில் கொண்டு அவரது குடும்பம் சொந்த வீட்டில் குடியிருக்க ஒரு வீடும், வாடகைக்கு விட்டு அந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்தவும் உதவும் வகையில் மூன்று வீடுகள் கட்டி ஓரிரு வாரங்களில் நசீரின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

அந்த வீட்டின் வீடியோவைத் தான் நீங்கள் காண்கிறீர்கள்.

இதன் மதிப்பு சுமார் பத்து லட்சம் ரூபாய்களாகும்.

அடையாளத்துக்காக சில ஆயிரம் ரூபாய்களைக் கொடுத்து விட்டு ஓயாமல் தூர நோக்குடன் சிந்தித்து நல்ல ஏற்பாட்டைச் செய்திருப்பது இந்த ஜமாஅத்தின் பொறுப்பான செயல்பாட்டுக்கு ஆதாரமாகும்.

போராட்டத்துக்கு அழைத்த உடன் அறிக்கை மூலம் அனுதாபம் தெரிவித்து உயிரிழந்தவரை மறந்து விடாமல் அவரது குடும்பத்தாருக்கு வாழ்வாதார ஏற்பாடு செய்துள்ளது பாராட்டுக்கு உரியது....

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கோவர்தனன் கைது!



முன்னால் ராணுவ வீரர் கோவர்தனன் பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐக்கு உளவு பார்த்ததாக ராஜஸ்தான் போக்ரானில் கைது செய்யப்பட்டுள்ளார். கோவர்தனன் தற்போது ராஜஸ்தான் பட்வாரியில் வேலை செய்து வருகிறார். முக்கிய ஆவணங்களை பாகிஸ்தானுக்கு அளித்த போது பிடிபட்டுள்ளார். விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

தகவல் உதவி
INDIATODAY
27-12-2015

http://indiatoday.intoday.in/story/rajasthan-ats-arrest-ex-armyman-suspected-for-spying-for-isi/1/556855.html

ஒரு இந்துத்வாவின் வாயிலிருந்து வந்த உண்மை!



Union Home Minister Rajanth Singh Sunday said that while all countries face the Islamic State threat, the organisation could not dominate in India due to the country’s “life values” and “family values”.

“Today the IS is being discussed a lot. But in the capacity of the Home Minister of India, I say that India is the only country where Muslim families stop their children when they get deviated from the right path. Only Indian Muslim families do this,” Rajnath said.
He was speaking at a conference, Taleem ki Taquat, organised by Maulana Azad National Urdu University of Hyderabad in Lucknow, on Sunday.

Indianexpress
28-12-2015

"நாட்டின் உள்துறை அமைச்சராக சொல்கிறேன். இந்திய முஸ்லிம்கள் தங்கள் குழந்தைகளை ஐஎஸ் தீவிரவாதத்தால் பாதிக்கப்படவதை அல்லது கவரப்படுவதை ஒரு நாளும் அனுமதிக்க மாட்டார்கள்."
ராஜ்நாத்சிங் மத்திய உள்துறை அமைச்சர்
ஒரு இந்துத்வாவின் வாயிலிருந்தே உண்மையை வரவழைத்த இறைவனுக்கே புகழனைத்தும்.


- See more at: http://indianexpress.com/article/india/india-news-india/islamic-state-can-never-have-supremacy-in-india-rajnath-singh/#sthash.CkJn6m8x.dpuf

Sunday, December 27, 2015

மோடியின் பாகிஸ்தான் விஜயம் குறித்து....





'நம்முடைய ஜவான்கள் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தால் கொல்லப்படுகிறார்கள். நமது பிரதமர் மன் மோகன்சிங் பாகிஸ்தான் பிரதமரோடு கோழிக் கறி சாப்பிட்டுக் கொண்டுள்ளார்'

தேர்தல் பிரசாரத்தில் சென்ற ஆண்டு மோடி...

தற்போது நிலைமை ஏதாவது மாறியுள்ளதா? அதை விட அதிக முறுகல் நிலைதானே உள்ளது? தற்போது நவாஸ் ஷெரீஃபோடு மோடி சிக்கன் பிரயாணி சாப்பிடுகிறாரே? நவாஸ் ஷெரீஃபின் பேத்தியின் கல்யாணத்துக்கும் சென்று வருகிறாரே? மன்மோகன் சிங்கை விட நெருக்கமாக உள்ள மோடியை யார் கேள்வி கேட்பது?

முன்பு கேட்டது எந்த வாய்? தற்போது சிக்கன் பிரியாணி சாப்பிடுவது எந்த வாய்?

---------------------------------------------

ஒரு கற்பனை கலந்துரையாடல்....

நவாஸ் ஷெரீஃப்: வாங்க மோடி ஜீ.... சாப்பாடெல்லாம் நல்லா இருந்ததா?

மோடி: ஓ.... பிரமாதம்.... அது கடவுள் இது கடவுள் என்று சொல்லி ஒன்னுத்தயும் சாப்பிட உட மாட்டேங்க்றாய்ங்க.. இப்போ தான் வயிறு நிரம்ப நிம்மதியா சாப்பிட்டேன்....

நவாஸ் ஷெரீஃப்: நல்லது... நாட்டின் பாதுகாப்பை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

மோடி: எந்த குறையும் இல்லை. இந்தியாவில் பாதுகாப்போடு செல்லும் நானே இங்கு சர்வ சுதந்திரமாக வந்துள்ளேன். இதிலேயே தெரியவில்லையா?

நவாஸ் ஷெரீஃப்: உங்க கட்சி ஆட்கள் பாகிஸ்தானை ஏகத்துக்கும் கலாய்க்கிறாங்களே.. நீங்க கொஞ்சம் கண்டிக்கக் கூடாதா?

மோடி: அதை எல்லாம் கண்டுக்காதீங்க... நம்ம இந்துத்வா பசங்களுக்கு உங்க நாட்டை பத்தி ஏதாவது சொன்னாத்தான் உணர்ச்சியே வருது.... 'பாரத் மாதாகீ ஜே' என்று அப்பதான் கத்துராய்ங்க... எங்களுக்கு சில மாநிலங்களில் ஓட்டு விழுவதே உங்க நாட்டு புண்ணியத்துல தான். அதனால இதெல்லாம் சீரியஸா எடுத்துக்காதீங்க...

நவாஸ் ஷெரீஃப்: சரியாக சொன்னீர்கள். எனக்கும் பிரச்னை வரும் போதெல்லாம் காஷ்மீர் பகுதியில் ராணுவத்தை அனுப்புவேன். உடன் மக்களின் அனைத்து கவனமும் உங்க நாட்டின் மீதுதான் இருக்கும். நாம் ரெண்டு பேரும் சேர்ந்து மக்களை மடையர்களாக்கிக் கொண்டே இருப்போம்.

மோடி: ஆஹா இந்த விஷயத்திலும் நாம ஒத்து போறோம். பலே பலே...

-------------------------

தொலைக் காட்சியில் நவாஸ் ஷெரீஃபும் மோடியும் பீஃப் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் நிகழ்வை பார்த்த சென்னி மலையும் ராம் நிவாஸூம் 'ஆஹா.. மோடிஜியின் என்ன ஒரு ராஜதந்திரம் பாரத்தாயா... போலோ... பாரத் மாதாகி ஜே' என்று புளங்காகிதம் அடைந்தனர் மோடி நிறையவே இவர்கள் காதில் பூ சுற்றியதை அறியாதவர்களாக!. :-)

Saturday, December 26, 2015

'கோர்ஸிகா' தீவில் பள்ளிவாசலை தாக்கிய விஷமிகள்!




ஃப்ரான்ஸூக்கு சொந்தமான கோர்ஸிகா தீவில் உள்ள முஸ்லிம்களின் வணக்கத் தலத்தை கும்பலாக வந்த விஷமிகள் உடைத்து நாசப்படுத்தியுள்ளனர். இது சென்ற வியாழக்கிழமை இரவு நடந்துள்ளது.

ஃப்ரான்ஸ் பிரதமர் மேனுவல் வேல்ஸ் இந்த தாக்குதலை கண்டித்துள்ளார். 'இது பொன்ற செயல்களை ஃப்ரான்ஸ் கண்டிப்பாக அனுமதிக்காது. சட்டத்தை மதிக்காதவர்கள் தண்டிக்கப்படுவர்' என்று அறிவித்துள்ளார்.

பள்ளி வாசலை இடிப்பதன் மூலம் இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுத்து விடலாம் என்று விஷமிகள் நினைக்கின்றனர். எங்கு எதிர்ப்பு இருக்கிறதோ அங்குதான் இஸ்லாம் அசுர வேகத்தில் வளர்ந்ததாக சரித்திரம்.

தகவல் உதவி
NDTV
26-12-2015

ஒரு தோட்டி பள்ளிவாசலின் இமாமாக முடியுமா?



ஃபரூக் கரீம் என்ற பங்களாதேஷைச் சார்ந்த நபர் குப்பை அள்ளும் பணிக்காக சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்துக்கு வந்துள்ளார். அழகிய குரல் வளம் உடைய இவர் குர்ஆனை மிக நேர்த்தியாக ஓதக் கூடியவர். இவரது திறமையை அறிந்த ஒரு சில சவுதி நாட்டவர் அவரை ஒரு பள்ளிக்கு இமாமாகவே நியமித்துள்ளனர். ஒரு தோட்டியை இறைவனை தொழும் இடத்துக்கு தலைவனாக மாற்றக் கூடிய சக்தி இஸ்லாத்துக்கு உண்டு.

O mankind, We have created you from a male and a female and have made you into nations and tribes for you to know one another. Truly, the noblest of you with Allah is the most pious. Truly, Allah is All-Knowing, All-Aware.

-Qur'an, 49:13

ஆரோக்கியதாஸ் என்ற நல்ல மனிதரின் அகால மரணம்!



வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்ட மோகன் சித்ரா தம்பதியர், தமது குழந்தைக்கு யூனுஸ் என்று பெயர் வைத்தார்களல்லவா! அந்த யூனுஸும் நானும் இன்று திருவொற்றியூரிலுள்ள ஆரோக்கிய தாஸ் வீட்டுக்கு சென்றோம்.

யார் அந்த ஆரோக்கியதாஸ்?

திமுகவின் நகரத் துணைச் செயலாளர். இருமுறை கவுன்சிலராக இருந்தவர். மக்கள் சேவகர். விஷ பூச்சி கடித்து பலியான இம்ரானின் அண்டை வீட்டுக்காரர். இம்ரானை மருத்துவமனையில் சேர்த்தது முதல் இம்ரான் மரணத்தை வெகுமக்களின் கவனத்துக்கு கொண்டுவந்தது வரை அனைத்தையும் உடனிருந்து செய்தவர். அத்துடன் நிற்கவில்லை அவர். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை வரவழைத்து இம்ரானின் பெற்றோருக்கு ஆறுதல் சொன்னதோடு, தனது மகளின் நகையை அடகுவைத்து 50,000 ரூபாய் நிதியும் வழங்கினார். கடந்த 17-ஆம் தேதி தலைவர் திருமாவளவன் அவர்கள் இம்ரான் இல்லத்துக்குச் சென்றபோது முழுவதும் உடனிருந்தார், ஆரோக்கியதாஸ். அத்தகைய பொது நலத் தொண்டர், அன்று மாலையில் தனது வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்து அகால மரணம் அடைந்தார்.

பெரிய கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருந்தபோதும், கவுன்சிலர் பதவியை இருமுறை வகித்தபோதும் எளிய வாழ்க்கை வாழ்ந்துள்ளார். அவரது வீடே அதற்கு சாட்சியாய் உள்ளது. அவரின் மூன்று பெண் மக்களுக்கும் இன்னும் திருமணமாகவில்லை. குடும்பமே கண்ணீர் வடிக்கிறது.

நண்பர் யூனுஸ் இன்று, ஆரோக்கிய தாஸ் குடும்பத்துக்கு ஆறுதல் நிதி வழங்கினார். மனிதநேயம் என்பது ஒருவழிப்பாதை அல்ல என்பதை நிரூபிக்கிறார் யூனுஸ்!

நன்றி
சகோ Aloor shanawas

இறந்த ஆரோக்கியதாஸின் குடும்பத்துக்கு திமுக சிறந்த ஒரு உதவியை செய்து தரும் என்று எதிர்பார்போம். பொது மக்களும் நிதி திரட்டி அந்த குடும்பம் சிரமப்படாமல் இருக்க ஆவண செய்யலாம்!

Friday, December 25, 2015

முஸ்லிமாக நடித்து உளவு பார்த்த ஐபிஎஸ் அதிகாரி!

இந்துத்வாவாதி: சார்.... நீங்கள் 5 வருடம் பாகிஸ்தானில் முஸ்லிமாக நடித்து உளவு பார்த்துள்ளீர்கள். அது பற்றிய அனுபவங்களை ...

Posted by Nazeer Ahamed on Friday, December 25, 2015

சார்.... நீங்கள் 5 வருடம் பாகிஸ்தானில் முஸ்லிமாக நடித்து உளவு பார்த்துள்ளீர்கள். அது பற்றிய அனுபவங்களை பகிரலாமே?

அஜீத் தோவல் ஐபிஎஸ்:

ஐந்து வருடம் அல்ல ஏழு வருடம் உளவு பார்த்துள்ளேன். பாகிஸ்தானின் லாகூரில் ஒரு மிகப் பெரிய தர்ஹா உள்ளது. நிறைய ஆட்கள் அந்த தர்ஹாவுக்கு வருவதும் போவதுமாக இருந்தனர். நானும் ஒரு முஸ்லிமாக அந்த கூட்டத்தோடு கூட்டமாக வலம் வந்து கொண்டிருந்தேன். அந்த தர்ஹாவின் ஒரு மூலையில் நீண்ட வெள்ளை தாடியோடு ஒரு மகானைப் போல ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் என்னை சைகையால் அழைத்தார். அழைத்து அவர் என்னிடம் கேட்டார்..

'நீ இந்துவா?'

'இல்லை... நான் இந்து அல்ல' என்று மறுத்தேன்.

'என்னோடு வா...' என்று என்னை அழைத்துக் கொண்டு ஒடுக்கமான சந்துகளின் வழியாக என்னை அழைத்துச் சென்றார். மறு பேச்சு பேசாமல் அவரோடு சென்றேன். அவருடைய வீடு வந்தவுடன் என்னை உள்ளே அழைத்துச் சென்று கதவை தாளிட்டார். கதவை தாளிட்டவுடன் என்னிடம் அவர் திரும்பவும்

'நீ இந்துதானே' என்று கேட்டார். நான் குழம்பிப் போய்

'ஏன் என்னைப் பார்த்து இப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறீர்கள்?' என்று கேட்டேன்.

'ஏனென்றால் உனக்கு காது குத்தியிருக்கிறது. முஸ்லிம்கள் காது குத்த மாட்டார்கள்' என்றார்.

'ஆம்... நான் முன்பு இந்து. இப்போது முஸ்லிமாக மதம் மாறியுள்ளேன்' என்று சொன்னேன்.

'இல்லை... பொய் சொல்கிறாய்... இப்போதும் நீ இந்துவாகத்தான் இருக்கிறாய். பயப்படாமல் சொல் நீ இந்துதானே'

'ஆம் நான் இந்துதான்'

'உடனே காதுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து ஓட்டையை அடைத்து விடு. பாகிஸ்தானில் உளவாளியாக இவ்வாறு திரிவது பெரிய ஆபத்தில் போய் முடியும்.'

'சரி நான் மறைத்துக் கொள்கிறேன்.'

'நீ இந்து மதத்தைச் சேர்ந்தவன் என்று எப்படி கண்டு பிடித்தேன் என்பது உனக்கு தெரியுமா?'

'தெரியாது நீங்களே சொல்லுங்கள்'

'ஏனென்றால் நானும் ஒரு இந்துதான்' (சபையில் கைத் தட்டல்) இந்த மக்கள் எனது முன்னோர்களை நிறைய கொன்றுள்ளார்கள். அதற்கு நான் இப்பொழுது பழிக்குப் பழி வாங்கிக் கொண்டுள்ளேன். உங்களைப் போன்ற உளவாளிகளைக் காணும் போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது.' என்று சொல்லிக் கொண்டே அந்த அறையின் அலமாரியை திறந்து எனக்கு காண்பித்தார்.

'இதோ பார் சிவனின் சிலை... அருகில் துர்காவின் சிலை.... நான் இதைத்தான் தினமும் வணங்கி வருகிறேன். வெளியே சென்றால் நான் ஒரு இஸ்லாமிய சூஃபி மகானாக மதிக்கப்படுகிறேன். தர்ஹாவில் எனக்கு மிகுந்த மரியாதையும் கிடைக்கிறது.' என்றார்.

அந்த பெரியவரை அதற்கு பிறகு நான் சந்திக்க முடியவில்லை. அவருக்கு அரசு தரப்பிலிருந்து உதவி ஏதாவது செய்யலாம் என்று நினைத்தேன். அது என்னால் முடியாமல் போய் விட்டது'

------------------------------------------------

ஒரு இந்திய ஐபிஎஸ் அதிகாரி தனது அனுபவங்களை பகிர்ந்ததைத்தான் காணொளியாக நாம் பார்தோம். ஹிந்தி தெரியாதவர்களுக்காக இதனை மொழி பெயர்த்தேன்.

பாகிஸ்தானில் தினமும் அரங்கேறி வரும் குண்டு வெடிப்புகளின் சூத்திதாரிகள் யார் என்பது இப்போது விளங்கியிருக்கும். ஷியா மசூதியில் குண்டு வெடிப்பதும் அடுத்த வெள்ளிக் கிழமை அதற்கு பதிலடியாக சன்னி முஸ்லிம்களின் பள்ளியில் குண்டு வெடிப்பதும் தொடர்கதையாக இருந்ததை படித்திருப்போம். ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் 100, 150 என்று முஸ்லிம்கள் இறப்பதற்கு முக்கிய காரணம் யார் என்தை நாம் விளங்கியிருப்போம். 'ஒரு மனிதனைக் கொன்றவன் ஒட்டு மொத்த மனிதனையும் கொன்றவனாவான்' என்று குர்ஆன் கூறியிருக்க ஒரு உண்மையான இஸ்லாமியன் இவ்வாறான கொலை பாதக செயல்களில் ஈடுபடுவானா என்பதை நாம் சிந்திக்க கடமைபட்டுள்ளோம்.

மாறு வேஷத்திலிருக்கும் அந்த சூஃபி ஞானியைப் போல் எத்தனை பேர் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் உலா வருகிறார்களோ அதனை அந்த இறைவனே அறிவான்.

இதை எல்லாம் படித்துப் பார்த்த போது எனக்கு ஒரு குர்ஆன் வசனம்தான் ஞாபகத்துக்கு வந்தது.

‘அவர்களும் சூழ்ச்சி செய்தார்கள். இறைவனும் சூழ்ச்சி செய்தான்; சூழ்ச்சி செய்பவர்களிலெல்லாம் சிறந்த சூழ்ச்சி செய்பவன் இறைவனேயாவான்’

(அல்-குர்ஆன் 3:54)

நமது இந்திய நாட்டின் மீது வெறுப்போடு செயல்படும் பாகிஸ்தானிய அரசும் அதன் ராணுவமும்தான் நமக்கு எதிரிகள். அந்த நாட்டு சாதாரண குடி மக்கள் நமக்கு எதிரிகள் அல்ல என்பதை நாம் பிரித்துப் பார்க்க தெரிந்திருக்க வேண்டும். நமது நாட்டில் இந்து பெருங்குடி மக்களையும் இந்துத்வாவாதிகளையும் எவ்வாறு நாம் தரம் பிரித்து பார்க்கிறோமோ அதே அடிப்படையையே இங்கும் நாம் கையாள வேண்டும்.

இஸ்லாமியர்களை கருவறுத்துக் கொண்டிருக்கும் சூழ்ச்சிக்கார்கள் என்றுமே வெற்றியடைய போவதில்லை. அதனை வருங்கால வரலாறு உணர்த்தும்.

#இந்தியா #இந்துத்வா #பாகிஸ்தான்

தேர்தலில் தோற்றதால் இஸ்லாத்தை தழுவ போகிறேன்!



உத்தர பிரதேசத்தில் உள்ள பிஜ்னோர் முனிசிபாலிடி. இங்கு சமீபத்தில் கிராம பஞ்சாயத்து தேர்தல் நடந்தது. 1300 குடும்பங்கள் அடங்கிய இந்த ஊரில் 800 குடும்பம் முஸ்லிம்கள். 300 குடும்பம் இந்துக்கள். தேர்தலில் தலைவருக்காக ஹர்பல் சிங் என்பவர் போட்டியிட்டார். கிராம மக்களுக்கு இவர் மேல் நம்பிக்கை இல்லாததால் இவரை தலைவராக தேர்ந்தெடுக்கவில்லை. எனவெ இந்துக்கள் இவருக்கு ஓட்டளிக்கவில்லை. தேர்தலில் தோல்வியுற்றார்.

ஹர்பல் சிங்குக்கு வந்ததே கோபம். பத்திரிக்கையாளர்களை அழைத்து அதிர்ச்சிகரமான ஒரு செய்தியினை வெளியிட்டார். 'எனது மக்கள் என்னை நிராகரித்து விட்டனர். எனவே நான் இந்து மதத்தில் இருக்க பிரியமில்லை. எனது குடும்பத்தவர் 13 பெரோடு ஒட்டு மொத்தமாக இஸ்லாத்துக்குள் சென்று விட இருக்கிறோம்' என்றார் காட்டமாக! பத்திரிக்கையாயளர்களுக்கும் ஒரே அதிர்ச்சி.

இஸ்லாத்தை ஏற்க முதலில் ஏக இறைவனை ஒத்துக் கொள்ள வேண்டும். முகமது நபியை இறைத் தூதராக ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த அடிப்படையாவது இல்லாமல் ஒருவர் தேர்தலில் தோற்றதற்கெல்லாம் இஸ்லாத்துக்குள் வர முடியாது என்று சென்னி மலை, டாக்டர் அன்பு ராஜ், ராம் நிவாஸ் போன்றவர்கள் ஹர்பல் சிங்குக்கு விளக்குவார்களாக... :-)

தகவல் உதவி
சியாஸத்
24-12-2015

The man named Harpal Singh after losing the gram pradhan election was upset by his community not voting for him therefore, wants to convert to Islam; the decision which shock the whole village

http://www.siasat.com/news/betrayed-hindu-voters-man-want-revert-whole-family-islam-890952/

Thursday, December 24, 2015

நெகிழ வைத்த ஒரு நிகழ்வு - ரியாத் பேரூந்து நிலையத்தில்



நெகிழ வைத்த ஒரு நிகழ்வு - ரியாத் பேரூந்து நிலையத்தில்

கம்பெனி வேலையாக ஒரு வாரம் தபூக் மாநகருக்கு வரும் ஞாயிறன்று செல்கிறேன். அதற்காக டிக்கெட் முன் பதிவு செய்ய ரியாத் பேரூந்து நிலையத்துக்கு சென்று வரிசையில் காத்திருந்தேன். அப்போது எனக்கு பின்னால் ஒரு இந்தியர் திரு திரு என்று ஒரு பயம் கலந்த தொனியில் நின்று கொண்டிருந்தார். என்னிடம் ஏதோ சொல்ல வருவதை உணர்ந்து கொண்டு நான் கேட்டேன்...

'எந்த ஊரு?'

'ஆந்திரா... கர்நூல்' அந்த இந்து நண்பருக்கு உருதுவும் சரியாக வரவில்லை. தட்டுத் தடுமாறி பேசினார். தனது கையில் உள்ள ஒரு துண்டு சீட்டை என்னிடம் நீட்டினார். அதில் ஹஃப்ரல்பாதின் என்ற ஊர் பெயரும் - மற்றும் டெலிபோன் நம்பரும் எழுதப்பட்டிருந்தது. புதிதாக சவுதி வருகிறார். விமான நிலையத்திலிருந்து பேரூந்து நிலையம் வந்து விட்டார். இங்கு ரியாத்திலிருந்து அவர் வேலை செய்யும் இடமான ஹஃப்ரல் பாதின் 250 கிலோ மீட்டருக்கும் அதிக தூரத்தில் உள்ளது. அங்கு பஸ் பிடித்து இவர் செல்ல வேண்டும்.

எனது முறை வரவே நான் டிக்கெட் எடுத்து விட்டு அவரது பாஸ்போர்டை கொடுத்து 'ஹஃரல் பாதினுக்கு ஒரு டிக்கெட் கொடுங்கள்' என்று கவுண்டரில் உள்ளவரிடம் கேட்டேன். அவர் பெயரை பதிவு செய்து விட்டு '110 ரியால்' என்று என்னிடம் கேட்டார். நான் அந்த இந்து நண்பரிடம் '110 ரியால் பஸ் டிக்கெட்டுக்கான ரியாலை கொடுங்கள்' என்றேன். அவர் தனது கையில் இருந்து முழு பணத்தையும் என்னிடம் தந்தார். எண்ணிப் பார்த்தால் வெறும் 35 ரியால்தான் இருந்தது. 'என்ன இது? மீதி பணம் எங்கே?' என்றேன். தான் விமான நிலையத்திலிருந்து பேரூந்து நிலையம் வர 50 ரியால் கொடுத்ததாகவும் கொஞ்சம் இந்திய ரூபாய் இருப்பதாகவும் வேறு பணம் இல்லை என்றும் பரிதாபமாக சொன்னார். டிக்கெட் கவுண்டரில் உள்ள சவுதி நாட்டவரோ பணம் இல்லை என்றவுடன் சற்று கோபத்துடன் அடுத்த ஆளை கூப்பிட்டார்.

எனது தகுதிக்கு 10 ரியால் கொடுத்து மற்றவர்களிடமும் வசூல் பண்ணி கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் அவரை அழைத்துக் கொண்டு நகர ஆரம்பித்தேன். எங்கள் வரிசையில் நின்ற இரண்டு சவுதி நாட்டவர் இதனை கவனித்து விட்டு என்னிடம் 'என்ன பிரச்னை?' என்று கேட்டனர். நான் முழு விபரத்தையும் சொன்னேன். உடனே அந்த இருவரும் தங்கள் பையிலிருந்து 50 ரியாலையும் மற்றவர் 50 ரியாலையும் என்னிடம் கொடுத்து 'போதுமா' என்றனர். தற்போது 135 ரியால் சேர்ந்து விட்டது. நான் போதும்' என்றேன். அதே நபர் மேற்கொண்டு 20 ரியாலை அந்த இந்து நண்பரின் கையில் கொடுத்து 'வழியில் சாப்பிட வைத்துக் கொள்' என்று கொடுத்தார். அந்த இந்து நண்பருக்கு முகத்தில் ஏக மகிழ்ச்சி. அவர்கள் இருவருக்கும் நான் நன்றி சொன்னேன். அந்த இந்து நண்பரையும் நன்றி சொல்ல சொன்னேன். அவரும் அந்த சவுதிகளின் கைகளை பிடித்து நன்றி கூறினார். இது ஒரு சிறிய உதவிதான். ஆனால் மொழி தெரியாமல், சாப்பிடாமல் ஒரு அந்நிய தேசத்தில் அல்லாடிக் கொண்டிருக்கும் அந்த நேரத்தில் இந்த நூறு ரியால் என்பது வள்ளுவர் சொல்வது போல் 'ஞாலத்தின் மாணப் பெரிது' அல்லவா?

காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது

-திருக்குறள்

விளக்கம் : மிகவும் தேவைப்படும் நேரத்தில் ஒருவருக்கு செய்யப்படும் உதவி சிறிதாக இருந்தாலும், அது உலகத்தை விடப் பெரிதாக மதிக்கப்படும்.

நான் அவர் ஒரு இந்தியர் என்ற காரணத்தினால் உதவ போனேன். ஆனால் அந்த இரண்டு சவுதிகளும் யாரென்றே தெரியாத அந்த இந்து நண்பருக்கு உதவிய மனிதத் தன்மையை நினைத்து நெகிழ்வுற்றேன். இது போல் சவுதியில் ஆங்காங்கு பல நிகழ்வுகள் தினமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. உலகம் முழுக்கவும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. நமது இந்திய நாட்டில் இந்துத்வாவாதிகளால் தினமும் எங்காவது ஒரு மூலையில் இஸ்லாமியர்கள் கொடுமைபடுத்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த இந்துத்வாவாதிகள் செய்யும் அந்த கொடூரங்கள் என்னை இந்த இந்து நண்பருக்கு உதவி செய்ய தடுத்து விடவில்லை. அந்த இரண்டு சவுதிகளும் டிக்கெட்டுக்கு பணத்தையும் கொடுத்து சாப்பாட்டு செலவுக்கு மேற்கொண்டும் பணத்தை கொடுத்த அந்த மனித நேயத்தை இன்றும் நினைத்துப் பார்க்கிறேன்.

சில நாட்களுக்கு முன்பு பால்தாக்கரேயையும், சிவாஜியையும் தரக்குறைவாக விமரிசித்ததாக கூறி அதனை முஸ்லிம்கள் செய்ததாக வதந்தி பரப்பி கலவரத்தை காவிகள் மும்பையில் அரங்கேற்றினர். சற்றும் சம்பந்தம் இல்லாத ஒரு கணிணி வல்லுனர் காவிகளால் அடித்தே கொல்லப்பட்டார். அந்த நேரத்தில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள கிராமங்களில் இந்துக்களை யாரும் தாக்கி விடாமல் முஸ்லிம்கள் காவல் காத்தார்களாம். இதனை நெகிழ்வாக ஒரு இந்து நண்பரே பேட்டியாக கொடுத்துள்ளார். இதனைத்தான் குர்ஆன் முஸ்லிம்களுக்கு போதிக்கிறது.

திருக்குர்ஆன் கூறுவதைக் கேளுங்கள்:

'நம்பிக்கை கொண்டோரே! இறைவனுக்குக் கட்டுப்பட்டு நீதிக்கு சாட்சிகளாக ஆகி விடுங்கள். ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள். அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள். இறைவன் நீங்கள் செய்வதை நன்கு அறிந்தவன்'
-குர்ஆன் 5:8

(இது ஒரு மீள் பதிவு)

விஜய் டிவியின் சூப்பர் சிங்கரை நேற்றும் தொடர்ந்தேன்!







விஜய் டிவியின் சூப்பர் சிங்கரை நேற்றும் தொடர்ந்தேன்!

23-12-2015 ஆம் தேதி ஒளிபரப்பான சூப்பர் சிங்கரில் வெளியான சில தகவல்கள்.....

பெல்ஜியம் நாட்டை சேர்ந்த பீட்டர் என்ற கிருத்துவர் 10 வருடங்களுக்கு முன்பிலிருந்து சென்னையிலேயே தங்கி பொதுப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார். 'சென்னை மக்கள் அன்பானவர்கள். அவர்களின் அன்பு என்னை இங்கேயே தங்க வைத்து விட்டது' என்று பெருமை பொங்க சொல்கிறார். கிட்டத்தட்ட 250 பேர்களின் உயிர்களை இவர்கள் குழுமம் காப்பாற்றியுள்ளது. உயிர்களை காப்பாற்றிதோடு நில்லாமல் சாக்கடைகளை சுத்தப்படுத்தி கழிவு நீர் தடையின்றி செல்ல மிகவும் உதவியிருக்கிறார். இவரை அழைத்து கவுரப்படுத்தி பூச்செண்டுகளும் கொடுத்தது சூப்பர் சிங்கர் குழுமம்.

அடுத்த ஹீரோ முஹம்மது யூனுஸ்...

இவரைப் பற்றி நாம் முன்பே பத்திரிக்கைகள் வாயிலாகவும் இணையம் வாயிலாகவும் நிறையவே கேள்விப் பட்டிருப்போம். இவரும் நேரிடையாக நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அவர் தனது அனுபவங்களை பகிரும் போது....

'எங்களுக்கு சென்னையில் இரண்டு வீடு இருந்தது. ஒரு வீட்டை நாங்கள் உபயோகித்துக் கொண்டு மற்ற வீட்டை வீடிழந்தவர்களை தற்காலிகமாக தங்க வைக்கலாம் என்று முடிவு செய்தோம். அதனை இணையத்திலும் அறிவிப்பாக வெளியிட்டேன். நிறைய கால்கள் வந்தது. பல நண்பர்களும் தங்கள் வீடுகளை தர முன் வந்தனர். பல நூறு குடும்பங்களை இவ்வாறு தங்க வைத்தோம்.'

பாவனா: 'கர்ப்பிணி பெண்ணை காப்பாற்றியது சம்பந்தமாக...'

யூனுஸ்: அவர் கர்பிணி என்பது முதலில் தெரியாது. தண்ணீரின் வேகம் மிக அதிகமாக இருந்தது. ஒரு முறை நானே தவறி குழியில் விழப் போனேன். இவரைப் போன்ற பல குடும்பங்களைக் காப்பாற்றினோம். பிறகுதான் அவருக்கு குழந்தை பிறந்த செய்தி தெரிய வந்தது. இன்னும் நான் அவரை நேரில் சந்திக்கவில்லை. இனிமேல்தான் சந்திக்க வேண்டும். இந்த நேரத்தில் மீனவர்களின் பணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. அவர்களின் படகு இல்லை என்றால் பல உயிர்களை இழந்திருப்போம்.

பாவனா: இவருடைய சேவையை நினைத்து அந்த குடும்பம் பிறந்த குழந்தைக்கு இஸ்லாமிய பெயரான 'யூனுஸ்' என்ற பெயரை தேர்ந்தெடுத்துள்ளது...

(பலத்த கைத்தட்டல்)

அடுத்து பீஹாரைச் சேர்ந்த கூலி தொழிலாளி அலாவுதீனின் மனைவியையும் படகில் காப்பாற்றியுள்ளனர். காப்பாற்றியவர் பெயர் குறிப்பிடப்படவில்லை. மனித நேயமிக்க பல பணிகள் நடந்து பல உயிர்களை காப்பாற்றியுள்ளது. மீதியை நாளையும் தொடர்வோம்.

Wednesday, December 23, 2015

ரஷ்யாவிலும் சென்று அவமானப்பட்ட மோடி!

ரஷ்யாவிலும் சென்று அவமானப்பட்ட மோடி!ரஷ்யா சென்ற நரேந்திர மோடிக்கு நமது நாட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதை ஏற்றுக் ...

Posted by Nazeer Ahamed on Wednesday, December 23, 2015

ரஷ்யாவிலும் சென்று அவமானப்பட்ட மோடி!

ரஷ்யா சென்ற நரேந்திர மோடிக்கு நமது நாட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்ல இவர் பாட்டுக்கு தேசிய கீதம் இசைக்கப்படும் போது அதற்கு மரியாதை செய்யாமல் வேக வேகமாக போட்டோவுக்கு போஸ் கொடுக்க செல்கிறார். இவரின் கிறுக்குத் தனத்தை பார்த்த ரஷ்ய தலைவர் அவரது கையை பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்து தேசிய கீதத்துக்கு மரியாதை செய்ய வைக்கிறார். உலக அளவில் மஹா கோமாளி யார் என்றால் நரேந்திர மோடிதான். உலகமே சிரிக்கிறது.

பிணத்தை தோளில் சுமந்து செல்லும் சவுதி மன்னர்!



இறந்த உடலை சுமந்து செல்பவர் யாரென்று தெரிகிறதா? உலகமே உற்று நோக்கும் சவுதி அரேபியாவை ஆண்டு கொண்டிருக்கும் மன்னர் சல்மான்தான் இறந்த உடலை சுமந்து செல்கிறார்.

நம் நாட்டில் இறந்த உடலை தூக்குவதற்கும், அதனை எரிப்பதற்கும் குறிப்பிட்ட சாதியை நியமித்துள்ளோம். அவர்களை கோவிலுக்குள்ளும் அனுமதிப்பதில்லை. நமது வீட்டுக்குள்ளும் அனுமதிப்பதில்லை.

இறந்த உடலை தூக்கி செல்பவருக்கும் அந்த உடலை அடக்கம் பண்ண உதவுவருக்கும் மகத்தான நன்மைகள் எழுதப்படுவதாக இஸ்லாம் அறிவுறுத்துகிறது. அந்த நன்மைகளை பெறுவதற்கு மன்னரும் போட்டி போடுகிறார். சாதாரண மக்களும் போட்டி போடுகின்றனர்.

இந்த காலத்திலும் இஸ்லாமிய சட்டங்களை பின்பற்ற ஏன் ஆர்வமோடு உள்ளீர்கள் என்று இஸ்லாமியர்களைப் பார்த்துக் கேட்பவர்களுக்கு இந்த படமானது பதிலைக் கொடுத்துக் கொண்டுள்ளது.

'நம்பிக்கையுடனும், மறுமை நன்மையை எதிர்பார்த்தும் இறந்த உடலைப் பின் தொடர்ந்து சென்று, தொழுகை நடத்தி, அடக்கம் செய்யும் வரை உடன் இருப்பவர் இரண்டு கீராத் நன்மையுடன் திரும்புகிறார். ஒரு கீராத் என்பது உஹத் மலையளவு நன்மை. இறந்த உடலைப் பின் தொடர்ந்து சென்று தொழுகையில் கலந்துவிட்டு அடக்கம் செய்வதற்கு முன் திரும்புபவர் ஒரு கீராத் நன்மையுடன் திரும்புகிறார்' என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 47, 1235

SAVAM



ஹைதராபாத்தில் 60 வயதுடைய #எலக்ட்ரீசியன் #பாலா #ராஜு #முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் பகுதியில் வசித்து வந்தபோது. நோய்வாய்ப்பட்டு மரணித்து விட்டார். தகனம் செய்ய வசதி இல்லாததால், அங்கே உள்ள முஸ்லிம்கள் அனைவரும் பணம் கொடுத்து, #ஹிந்து முறைப்படி தகனம் செய்ய அனைத்து உதவிகளையும் செய்து, சடலத்தை தூக்கிச் சென்ற இஸ்லாமியர்களை பார்த்தவர்களுக்கு, பெரும் #ஆச்சரியம்! வளர்ப்பு மகள் #ரேவதி தீயூட்ட, இறுதி சடங்கு முடிந்தது.
ஒருவருக்கொருவர் உதவி, ஒற்றுமையாக வாழ்ந்து, வேற்றுமையிலும் #ஒற்றுமை காண்பது தானே #மனிதநேயம்?

Tuesday, December 22, 2015

யுவன் சங்கர் ராஜா அப்பாவாகப் போகிறார்!



யுவன் சங்கர் ராஜா அப்பாவாகப் போகிறார்!

யுவன் சங்கர் ராஜா தற்போது மிகவும் உற்சாகத்தில் உள்ளார். அவரது மனைவி தற்போது கர்பமாக இருப்பதாக தினத் தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. முதல் இரண்டு திருமணத்தில் கிடைக்காத குழந்தை செல்வம் மூன்றாம் திருமணத்தில் கிடைத்துள்ளது. இந்த குழந்தையானது தம்பதியருக்கிடையில் மேலும் இன்பத்தையும் நெருக்கத்தையும் ஏற்படுத்தட்டுமாக!

இரண்டு இனங்கள் கலந்து ஒரு கலப்பினம் உருவாகப் போகிறது. இவ்வாறுதான் இந்தியாவில் இஸ்லாம் பல்கிக் பெருகியது.

யுவன் சங்கர் ராஜா செல்வத்தை தேடி இங்கு வரவில்லை

அது அவரிடம் நிறையவே உள்ளது.

யுவன் சங்கர் ராஜா புகழைத் தேடி இங்கு வரவில்லை..

அதுவும் அவரிடம் நிறையவே உள்ளது...

யுவன் சங்கர் ராஜா அமைதியைத் தேடி இங்கு வந்தார்

அது அவருக்கு கண்டிப்பாக கிடைத்துள்ளது... அதோடு

மறு உலக வாழ்வுக்கான ஆயத்தங்களையும்

செய்து கொண்டிருக்கும் யுவனை நாமும் வாழ்துவோம்.

விஜய் டிவி நேற்றைய எமது பதிவைப் பார்த்து மிரண்டு விட்டதோ!





விஜய் டிவி நேற்றைய எமது பதிவைப் பார்த்து மிரண்டு விட்டதோ!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வெள்ள பாதிப்பு தொகுப்பில் இஸ்லாமியரின் பெயர் வேண்டுமென்றே விடுபபட்டுள்ளதோ என்ற எனது சந்தேகத்தை நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அந்த பதிவுக்கு ஏக வரவேற்பு. 500 ஷேர்களுக்கு மேல் போனதால் மிரண்டு போன விஜய் டிவி நிர்வாகம் இன்றைய எபிசோட்டில் பல உண்மைகளை உரக்கச் சொன்னது. :

நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே 'ஒன்றே குலம் என்று பாடுவோம்! ஒருவனே தேவன் என்று போற்றுவோம்' என்ற இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையை பறை சாற்றுவதோடு நிகழ்ச்சியை தொடங்கியது. அதையும் ஒரு இஸ்லாமியனான சியாதை விட்டு பாடச் சொன்னது. அந்த பாடல் முடிந்த கையோடு இஸ்லாமியர் தங்கள் பள்ளிவாசலில் அiனைத்து மதத்தினரையும் தங்க வைக்கச் சொன்ன நிகழ்வுகளை நம்ம பாவனா அக்கா விலாவாரியாக விளக்கிக் கொண்டிருந்தார். தொழுகை நேரத்தில் முஸ்லிம்கள் இடமில்லாததால் ரோட்டில் தொழுது கொண்டதையும் குறிப்பிட மறக்கவில்லை.

அடுத்து காப்பாற்றப் போன இம்ரான் பூச்சிக் கடியால் இறந்த துயரமான அந்த நிகழ்வை இம்ரானின் தந்தை விளக்கினார். பலரது கண்களில் கண்ணீர். ஒரு நிமிடம் மவுன அஞ்சலியும் செலுத்தினர்.

அதே போல் காப்பாற்றப் போன இடத்தில் சாக்கடைப் பள்ளத்தில் தவறி விழுந்து இறந்து போன சகோதரர் பரத்தைப் பற்றியும் ஒளிபரப்பினார்கள். இன்றைய நாள் நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது.

ஆனாலும் ஒரு குறை....

வெள்ள பாதிப்பில் ஆரம்பம் முதல் இன்று வரை பல உயிர்களைக் காப்பாற்றிய தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தைப் பற்றியும், தமுமுக, பாபுலர் ஃப்ரண்ட் பற்றியும் சிறிய குறிப்பு கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். மலைபோல் குவிந்து கிடந்த குப்பைகளை கார்பரேஷன் காரர்களே கை வைக்க பயந்தபோது தவ்ஹீத் ஜமாத் முதலில் களமிறங்கி சென்னையை தூய்மையாக்கியது. இவர்களை பார்த்து வைகோவும் திருமாவளவனும் களத்தில் இறங்கி துப்புறவு பணியை கையிலெடுத்தனர். பாவனா அக்கா நாளைய எபிசோடில் இதனையும் சேர்த்துக் கொள்வாராக! :-)

-----------------------------------------------------

'என்ன பாய் இது! இது உங்களுக்கே ஓவரா தெரியல... உங்க பதிவை பார்த்து மிரண்டு விட்டது விஜய் டிவி நிர்வாகம் என்பதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு' என்று நீங்கள் கேட்பது தெரிகிறது.

'துணை முதல்வர் பதவியை விட்டுத்தர தயாராக இருக்கிறேன்' என்று அன்பு மணி ராமதாஸ் சொன்னா மறு பேச்சு பேசாம நம்புவீங்க....

'தமிழகத்தை அடுத்த ஐந்து ஆண்டு ஆளப் போவது பிஜேபிதான்' என்று சவுண்டு சரோஜா சொன்னா மறு பேச்சு பேசாம நம்புவீங்க....

'என்னோட பதிவை பார்த்து விஜய் டிவி முடிவை மாத்திக்கிச்சு' என்று நான் சொன்னா மட்டும் நம்ப மாட்டீங்களா? .... இது நியாயமா? :-)

ஏர்வாடி கொலை - நடுநிலை சமுதாயம் என்பதை நிரூபிப்போம்!





ஏர்வாடியில் நேற்று சகோதரர் ஹாஜா மைதீன் சிலரால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். ஆட்டோ ஓட்டுனரான இவர் இயக்க பணிகளில் தீவிரமாக இருந்தவர் என்று தெரிகிறது. கொலை செய்த கயவர்களை கைது செய்யச் சொல்லி ஏர்வாடியில் மிகப் பெரும் ஆர்பாட்டம் நடைபெற்றது. குற்றவாளிகளை கைது செய்து விடுகிறோம் என்று சொன்னதன் பேரில் கூட்டத்தினர் கலைந்து சென்றுள்ளனர்.

பாவிகள் உடம்பை மிகக் குரூரமாக சிதைத்துள்ளனர். இத்தனை கொடூரமாக இந்த கொலையை செய்தவர்கள் கண்டிப்பாக மனிதர்கள் அல்ல... மிருகங்கள் என்றே சொல்வேன். வாழ வேண்டிய வயதில் இறந்த அந்த இளைஞனை பிரிந்து வாடும் அவரின் குடும்பத்தவருக்கு இறைவன் சாந்தியையும் சமாதானத்தையும் தந்தருள்வானாக!

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் - "நாங்கள் இறைவனுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடமே திரும்பச் செல்பவர்கள்"

இந்த கொலை முன் பகை காரணமாக நடந்ததா? அல்லது இந்துத்வாவாதிகளின் வெறிச் செயலா என்பது விசாரணையில் இரண்டொரு நாளில் தெரிந்து விடும். அதுவரை இஸ்லாமியர்களாகிய நாம் பொறுமை காப்போம். குடும்ப பிரச்னை, கந்து வட்டி பிரச்னை, பெண் பிரச்னை போன்ற காரணங்களால் முன்பு கொல்லப்பட்ட பல இந்துத்வாவாதிகளை முஸ்லிம்கள் செய்தார்கள் என்று சொல்லி கடைகளை உடைப்பதும் பஸ்ஸை கொளுத்துவதுமாக முன்பு இந்துத்வாவாதியினர் கலவரம் செய்தனர். ஆடிட்டர் ரமேஷ் கொலை முதல் பல இந்துத்வாவினர் கொலைகளில் வெறியாட்டத்தைப் பார்தோம். முடிவில் கொலை செய்தது அவர்கள் ஆட்களே என்பது தெரிய வந்தது. எனவே உண்மை முழுவதுமாக தெரியும் வரை யாரும் உணர்ச்சி வசப்பட வேண்டாம்.

நம்மோடு அண்ணன் தம்பிகளாக பழகி வரும் இந்துக்கள் என்றுமே நம்முடைய சகோதரர்களாக தொடர்வர். அதற்கு எந்த பாதகமும் வந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முஸ்லிம்களின் மேல் கட்டவிழ்த்து விடப்பட்ட தீவிரவாத முத்திரை மழை வெள்ளத்தால் காணாமல் போனதில் இந்துத்வாவாதிகள் பைத்தியம் பிடித்து அலைகிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு ஆம்பூரில் தேவையில்லாமல் இஸ்லாமியர்களை வம்புக்கிழுத்ததை நாம் அறிவோம். அதே போல் தற்போது நடந்த கொலையும் இருக்கலாம். இறைவனே அறிவான். எனவே இந்துத்வாவினர் வலையில் நாம் விழுந்து விட வேண்டாம். காவல்துறை வசம் நம்மிடம் உள்ள ஆதாரங்களை சமர்பித்து உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் சிக்க வைக்க முயலுவோம். எக்காரணத்தை முன்னிட்டும் அப்பாவிகளை துன்புறுத்துவதோ, பேருந்துகளை உடைப்பதோ, கடைகளை அடைக்கச் சொல்லி வற்புறுத்துவதோ நிகழக் கூடாது. நமக்கும் இந்துத்வாவாதிகளுக்கும் உள்ள வித்தியாசத்தை இந்த நிகழ்விலும் நாம் மக்களுக்கு நிரூபிப்போம். நாம் ஒரு முன் மாதிரி சமுதாயம் என்பதை உலகுக்கு மீண்டும் காட்டுவோம்.

'நம்பிக்கை கொண்டோரே! இறைவனுக்குக் கட்டுப்பட்டு நீதிக்கு சாட்சிகளாக ஆகி விடுங்கள். ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள். அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள். இறைவன் நீங்கள் செய்வதை நன்கு அறிந்தவன்'
-குர்ஆன் 5:8

Monday, December 21, 2015

பெண் ஓவியர் ஹேமா உபாத்யாய் - கொலை செய்தது கணவர்!



மும்பையில் பெண் ஓவியர் ஹேமா உபாத்யாய், அவரது வழக்கறிஞர் ஹரீஷ் பம்பானி ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஹேமாவின் கணவர் சிந்தன் உபாத்யாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 5-வது நபர் சிந்தன். கண்டிவலி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை இரவு முதல் விடிய விடிய சிந்தனிடம் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு அவர் கைது செய்யப்பட்டார்.

ஹேமா உபாத்யாய்(43) புகைப்படங்கள், சிறு சிற்பங்களை தனி பாணியில் கட்டமைப்பதன் மூலம் ஓவியங்களை உருவாக்குவதில் புகழ்பெற்றவர். குஜராத் லலித் கலா அகாடமி உட்பட பல விருதுகளை வென்றவர். அவரின் வழக்கறிஞர் ஹரீஷ் பம்பானி(65).

கடந்த 12-ம் தேதி இரவு அவர் வீடு திரும்பாததையடுத்து, ஹேமாவின் வீட்டு பணியாளர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இந்நிலையில் ஹேமா மற்றும் ஹரீஷின் சடலம் சாக்கடை அருகே அட்டைப்பெட்டிக்குள் திணிக்கப்பட்டு வீசப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த கொலை வழக்கு தொடர்பாக 4 பேரை பிடித்து மும்பை போலீஸார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், ஹேமாவின் கணவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
22-12-2015

நேற்றைய விஜய் டிவியின் 'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சி சம்பந்தமாக!

நேற்றைய விஜய் டிவியின் 'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சி சம்பந்தமாக!நேரம் கிடைக்கும் போது அவ்வப்போது விஜய் டிவியின் 'சூப்பர்...

Posted by Nazeer Ahamed on Monday, December 21, 2015

நேரம் கிடைக்கும் போது அவ்வப்போது விஜய் டிவியின் 'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சியை பார்ப்பது உண்டு. அந்த வகையில் நேற்றும் அந்த நிகழ்சியை பார்தேன். சென்னை கடலூர் வெள்ள பாதிப்பில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது மக்களை காப்பாற்றிய ஒரு சிலரை பேட்டி எடுத்தனர். அதில் காவல் துறை அதிகாரி சைலேந்திர பாபு தலைமையில் ஒரு டீம் சிறப்பாக செயல்பட்டு பல உயிர்களை காப்பாற்றியதை நாமும் அறிவோம். அவர்களை அழைத்து சிறப்பித்தனர் விஜய் டிவி 'சூப்பர் சிங்கர்' குழுமத்தினர்.

இவர்களில் விஷ்ணு, ஜமீல் என்ற இரண்டு பேர் சென்னை வெள்ளத்தில் 'சைலேந்திர பாபு டீமில்' கலந்து கொண்டு தண்ணீரில் இறங்கி பல உயிர்களை காப்பாற்றியுள்ளனர். கோவையிலிருந்து மீட்புப் பணிக்காக வந்தவர்கள். நன்கு பயிற்சி பெற்ற வீரர்கள்.

இந்த நிகழ்ச்சியை தொகுத்தளித்த ஆங்கர் பாவனா 'விஷ்ணு உங்க அனுபவத்த சொல்லுங்க' என்று விஷ்ணுவிடம் கேட்கிறார். அவரும் தனது அனுபவத்தை சொல்லி முடிக்கிறார். அடுத்து ஜமீல் என்ற இஸ்லாமியரின் அனுபவத்தை பகிரும்போது அவர் பெயர் சொல்லப்படாமல் நேரிடையாக தனது அனுபவத்தை சொல்ல வைக்கப்படுகிறார். ஜமீல் என்ற இஸ்லாமியரின் பெயரை சாமர்த்தியமாக எடிட் செய்து ஒளிபரப்புகிறார்கள். காப்பாற்றியவர் ஒரு இஸ்லாமியர் என்பது மற்றவர்களுக்கு தெரிந்து விடக் கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறார்கள். நேற்றைய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பார்த்தவர்களுக்கு இது தெரிந்திருக்கும். இது தற்செயலாக எடிட் ஆனதா? அல்லது இஸ்லாமியரின் பெயர் வெளியில் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக திட்டமிட்டு எடிட் செய்யப்பட்டதா? என்பதை இறைவனே அறிவான்.

விஜய் டிவி மறைத்தால் என்ன? நம்மிடம்தான் 'முகநூல்' என்ற அருமையான ஊடகம் உள்ளதே... அதன் மூலம் மக்களிடம் உண்மையை எடுத்து வைப்போம்.

மாற்று மத நண்பரின் உள்ளக் குமுறல்......

Sunday, December 20, 2015

இந்து சகோதரர் விகடனுக்கு அளித்த நெகிழ வைத்த பேட்டி!

இந்து சகோதரர் விகடனுக்கு அளித்த நெகிழ வைத்த பேட்டி!'எங்க ஏரியா சென்னை கொருக்குப் பேட்டைங்க... யாருமே உதவிக்கு வரல... எ...

Posted by Nazeer Ahamed on Sunday, December 20, 2015

இந்து சகோதரர் விகடனுக்கு அளித்த நெகிழ வைத்த பேட்டி!

'எங்க ஏரியா சென்னை கொருக்குப் பேட்டைங்க... யாருமே உதவிக்கு வரல... எல்லா பக்கமும் தண்ணிதான்... நான் ஒரு இந்து... ஆனால் இங்க உதவிக்கு என்று வந்ததில் 99 சதவீதம் இஸ்லாமியர்கள்தான்.... நீங்க ஷூட் பண்ணுன இடத்துல எல்லாம் அந்த காட்சியைத்தான் பார்த்துருப்பீங்க... அந்த கம்யூனிட்டிலேருந்து யாராவது பப்ளிக்கா வந்து நின்னா பாக்க டீஷன்டா இருக்கும்'

ஆனந்த விகடனுக்கு ஒரு இந்து சகோதரர் கொடுத்த பேட்டிதான் இது. உங்கள் எண்ணம் நிறைவேறட்டும். நாங்கள் முக்கிய பதவிக்கு வருவதை விட முக்கியத்துவம் வாய்ந்தது தற்போது பேயாட்சி ஆண்டு கொண்டிருக்கும் இந்துத்வாவை மத்தியிலிருந்து தூக்க வேண்டும். அதற்கு பெரும்பான்மை சமூகத்தின் ஆதரவை திரட்டுங்கள். அதுதான் தற்போது நம் முன் உள்ள தலையாய கடமை.

இறைவா! உலக முடிவு நாள் வரை இதே போன்ற சகோதரத்துவத்தை எனது நாட்டிலும் உலகமெங்கிலும் தழைத்தோங்கச் செய்வாயாக!

ஓவியக் கண்காட்சியில் மனம் நெகிழச் செய்த படம்!



சென்னை கடலூர் பகுதிகள் வெள்ளம் மற்றும் மழையினால் எந்த அளவு பாதிக்கப்பட்டது என்பதை நாம் அறிவோம். இந்த பாதிப்புகளை அடிப்படையாக வைத்து சென்னை வேலம்மாள் பள்ளி ஒரு ஓவியக் கண்காட்சியை நடத்தியது. நான்கு வயதிற்குட்பட்டவர்களுக்கான போட்டி இது.

இந்த போட்டியில் அக்ஷரா ஸ்ருதி என்ற இந்து மதத்தைச் சார்ந்த சிறுமி வரைந்த ஓவியத்தைத்தான் நாம் பார்க்கிறோம். நம் கண் முன்னால் ஒரு நிகழ்வு தொடர்ந்து நடந்து வந்தால் அதுவே ஆழ் மனதில் பதிந்து நீங்காத இடத்தைப் பெற்று விடும் என்பதற்கு இந்த படம் ஒரு சாட்சி.

செய்யும் மனிதாபிமான உதவிகளை ஏன் விளம்பரப்படுத்துகிறீர்கள் என்று கேட்பவர்களுக்கு இந்த படமானது சிறந்த பதிலை தந்துக் கொண்டிருக்கிறது.

லண்டனில் கதீஜா என்ற சிறுமியின் அழைப்புப் பணி!

லண்டனில் கதீஜா என்ற சிறுமியின் அழைப்புப் பணி!இந்த சிறிய வயதில் என்ன ஒரு பணிவு... என்ன ஒரு ஆர்வம்! எல்லா புகழும் இறைவனுக்கே!

Posted by Nazeer Ahamed on Saturday, December 19, 2015

லண்டனில் கதீஜா என்ற சிறுமியின் அழைப்புப் பணி!

இந்த சிறிய வயதில் என்ன ஒரு பணிவு... என்ன ஒரு ஆர்வம்!

எல்லா புகழும் இறைவனுக்கே!

கெஜ்ரிவால் மகளை கற்பழிப்பவருக்கு 1 லட்சம் பரிசாம்!



டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் மகளை கற்பழிப்பவருக்கு ஒரு லட்சம் ரூபாயும் ஒரு இரு சக்கர வாகனமும் பரிசாக அளிக்கப்படும் என்று ட்விட்டரில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. கற்பழிப்பவனின் வயதும் 17லிருந்து 18க்குள் இருக்க வேண்டுமாம்.மைனர் என்று சொல்லி சட்டத்தின் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ள இந்த வயது வரம்பாம். @garrysingh954 கேர்ரி சிங் என்பவனால் இது ட்விட்டரில் பதியப்பட்டுள்ளது. அதிகாரவர்க்கமோ உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அசால்டாக சொல்கிறது.

இந்த தைரியம் இவனுக்கு எப்படி வந்தது? இந்துத்வாவாதிகள் முன்பு முஸ்லிம்களையும் முஸ்லிம் பெண்களையும் இழிவாக பேசிய போது பெரும்பாலான இந்தியர்கள் நமக்கென்ன வந்தது என்று அலட்சியமாக இருந்ததன் விளைவே இத்தகைய பாலியல் மிரட்டல். இன்று இந்துத்வாவாதிகள் இந்து மக்களையும் அவர்களின் பெண்களையும் இழிவு படுத்தும் அளவுக்கு சென்றுள்ளார்கள். மோடியின் தலைமையில் இதற்கெல்லாம் தண்டனை கிடைக்காது என்பது நமக்கு தெரியும். ஏனெனில் ஒரு குற்றவாளி மற்றொரு குற்றவாளியை எந்த காலத்திலும் தண்டிக்க முடியாது என்பது இயல்பு. இனி என்ன செய்ய போகிறார்கள் நாட்டு நலனில் அக்கறை உள்ள சமூக ஆர்வலர்கள்?

இது போன்ற செய்திகளை எல்லாம் தின மலரோ, தின மணியோ செய்திகளாக பிரசுரிக்காது. நாம்தான் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

தகவல் உதவி
ஜீ ந்யூஸ்
20-12-2015

New Delhi: Tweeting brazenly can sometimes land you in trouble. In a direct attack on Arvind Kejriwal, a man on Saturday took to Twitter and provoked the Twitterati to rape Delhi Chief Minister's daughter and also offered rewards for the same.

Garry, from his Twitter handle @garrysingh954, tweeted, “Someone rape Kejriwal daughter but rapist age 17-18 I offer 1 lakh rupees cash and one new bike (sic).”

http://zeenews.india.com/news/delhi/man-provokes-twitterati-to-rape-arvind-kejriwals-daughter-dcw-member-takes-notice_1836444.html

Saturday, December 19, 2015

கிருத்துவ கொடையாளி: பொருத்தியது இந்து டாக்டர்: பயனாளி ஒரு முஸ்லிம்..





கிருத்துவ கொடையாளி: பொருத்தியது இந்து டாக்டர் : பயனாளி ஒரு முஸ்லிம் :

மனிதம் செத்துவிடவில்லை என்பதை உலகுக்கு உணர்த்தும் நிகழ்வு... ஆப்கான் ராணுவ தளபதி அப்துல் ரஹிம் கந்தஹாரில் ஏற்பட்ட ராணுவ நடவடிக்கையில் தனது இரு கைகளையும் இழந்திருந்தார். அவருக்கு நமது இந்திய மக்கள் கை கொடுத்தனர். மூளை சாவில் இறந்த ஜோசப் என்பவரின் கரங்கள் அவருக்கு பொருத்தப்பட்டது. இந்த ஆபரேஷனானது கொச்சியில் நடைபெற்றது.
ஜோசபின் மனைவியையும் மகளையும் அந்த பொருத்தப்பட்ட கரங்களைக் கொண்டு நன்றி தெரிவிக்கிறார் அப்துல் ரஹிம். அவருடன் நீல நிற சட்டை அணிந்து இருக்கும் டாக்டர் சுப்பிரமணியன் இந்த கரங்களை பொருத்திய மருத்துவராவார்

தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
18-05-2015

ஒரு பக்கம் மனித உயிர்களை மிருகங்களுக்காக காவு கேட்கும் மிருகங்கள் வாழும் நமது இந்திய நாட்டில்தான் இது போன்ற மனித நேயமிக்க நல்ல உள்ளங்களும் வாழ்கின்றன.

Hospital medical director Dr. Prem Nair said the family of the accident victim was counselled for the donation and they agreed after confirming that the hands will be replaced by prosthetic limbs to reduce deformity of the dead. Prof Subramania Iyer, head of the plastic surgery department, said each hand required connecting two bones, two arteries, four veins and 14 tendons. He said the Afghan native has regained considerable amount of function of both hands. He would require intensive physiotherapy for next 10 months, which would be done in Kochi.

indianexpress.com/article/india/india-others/kerala-twin-hand-transplant-succesfully-performed-on-ex-army-captain-from-afghanistan/#sthash.sNmmrhLU.dpuf

தவ்ஹீத் ஜமாத் தலைவர் அல்டாஃபியின் பேட்டி!


'லஸ்கர் இ தொய்பா' உறுப்பினர் பெயர் சுபாஷ் ராமச்சந்திரன்!



ஒடிசா ரயிலில் குண்டு வைத்த தீவிரவாதியின் பெயர் சுபாஷ் ராமச்சந்திரன். ஆனால் அவன் 'லஸ்கர் தொய்பா' இயக்கத்தோடு தொடர்புடைவன் என்று காவல் துறை கூறுகிறது. அதனை மாலை மலரும் செய்தியாக வெளியிடுகிறது. 'இந்தியன் முஜாஹிதின்' 'லஸ்கர் இ தொய்பா' போன்ற இயக்கங்களை இயக்குபவர்கள் யாரென்று இப்போது விளங்கியிருக்கும். இவனை ஒரு முஸ்லிமைப் போல தோற்றத்தை மாற்றியிருப்பதைக் கவனியுங்கள். அமீத்ஷா தனது வேலையை ஆரம்பித்து விட்டதாகவே எண்ணுகிறேன். தேர்தல் நெருங்க நெருங்க இது போன்ற தீவிரவாத செயல்கள் நிறைய எதிர்பார்க்கலாம். பொது மக்கள் நாம் தான் கவனமாக இருக்க வேண்டும். சந்தேகப்படும்படி எவனும் உலவினால் உடன் காவல்துறை வசம் ஒப்படையுங்கள்.

Friday, December 18, 2015

ஆம்பூரில் இஸ்லாமியர் தாக்கப்பட்ட சம்பவம் உணர்த்துவது!





டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் அலுவலகத்தை சோதனையிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மியினர் பிஜேபி அலுவலகம் முன் இந்தியாவெங்கும் ஆர்பாட்டம் நடத்தினர். அதே போல் ஆம்பூரிலும் பிஜேபி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இதனை பிஜேபியினர் எதிர்க்க ஆரம்பித்து அது சிறிய தள்ளு முள்ளாக மாறியது. காவல் துறையும் அங்கு உள்ளது.

இந்த நேரத்தில் அந்த வழியாக ஒரு முஸ்லிம் குடும்பம் காரில் வந்துள்ளது. அங்கு சென்ற பிஜேபியினர் சம்பந்தமேயில்லாத அந்த வாகனத்தில் இருந்த முஸ்லிமை கீழே தள்ளி தாக்குதல் நடத்தியுள்ளனர். காரின் கண்ணாடியையும் உடைத்துள்ளனர். தேவையில்லாமல் முஸ்லிம்களை வம்புக்கிழுப்பதின் பிண்ணனி என்ன?

இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வருகிறது. இந்து முஸ்லிம் வெறுப்பை விதைத்துதான் பிஜேபி தேர்தலை சந்தித்துள்ளது. சென்னை, கடலூர் மழை வெள்ள பாதிப்பானது இந்துக்களையும் முஸ்லிம்களையும் நெருங்கி வர வைத்துள்ளது. இந்த நெருக்கமானது பிஜேபியினரை அச்சமடைய வைத்துள்ளது. எனவே அவர்கள் காரணத்தை தேடி அலைகின்றனர். எந்த வகையிலாவது ஒரு கலவரத்தை உண்டு பண்ண திட்டமிடுகின்றனர்.

இந்து முண்ணனியோ அல்லது பிஜேபியோ முஸ்லிம்களிடம் வம்புக்கு வந்தால் உடன் எதிர் வினை ஆற்றாமல் சட்டத்தின் உதவியை நாடுங்கள். தனி ஆளாக செல்லாமல் டிஎன்டிஜே, தமுமுக போன்ற அமைப்புகளின் மூலமாக அவர்களை எதிர் கொள்ளுங்கள். ஓடி விடுவார்கள்.

வட மாநிலங்களில் கலவரத்தில் ஓட்டு அள்ளியதுபோல் தமிழகத்திலும் செய்து பார்க்க அமீத்ஷா முயலுகிறார். அதற்கு நாம் பலியாகி விடக் கூடாது. ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் தமிழகம் ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். இந்துக்கள் வேறு: இந்துத்வா வேறு என்பதை நாம் எப்போதும் நினைவில் வைத்து செயல்பட வேண்டும். நம்முடைய போராட்டத்தில் இந்து பிற்படுத்தப்பட்ட மக்ளையும் தலித்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஆர்எஸ்எஸ் அரை டவுசர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறோம்...

தமிழகத்தில் ரத்த தானம் கொடுப்பதில் முண்ணனியில் இருக்கிறோம். வெள்ள பாதிப்பில் உயிரைக் கொடுத்து இந்துக்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளோம். இது இந்து மக்களான எங்களின் தொப்புள் கொடி உறவுக்கு நாங்கள் செலுத்தும் அன்பு காணிக்கை. இதனை இஸ்லாமும் ஊக்குவிக்கிறது.

அதே இஸ்லாம் தான் 'உனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் உயிரைக் காக்க ஆயுதத்தை தூக்கு' என்கிறது. எனவே கோழைகளைப் போல் இஸ்லாமியர் அடங்கி ஒடுங்கி விடுவார்கள் என்று கனவிலும் நினைக்க வேண்டாம் இந்துத்வா வெறியவர்களே! 'சாது மிரண்டால் காடு கொள்ளாது' என்பதையும் நினைவில் வையுங்கள்.

ஜூம்ஆ தொழுகையை நிறைவேற்ற வந்த யுவன்!



சிங்கப்பூரில் உள்ள சுல்தான் மசூதிக்கு இன்றைய ஜூம்ஆ தொழுகையை நிறைவேற்ற வந்த யுவன் சங்கர் ராஜா. அருகில் இருப்பவர் மஹாதிர்.

எல்லா புகழும் இறைவனுக்கே!

மனித நேயப் பணி என்பது இதுதான்!

'எங்களின் வாழ்நாளில் முஸ்லிம்கள் செய்த இந்த உதவியை மறக்கவே மாட்டோம். தண்ணீரைப் பார்த்து என்ன செய்வதென்று பயந்து போய் இரு...

Posted by Nazeer Ahamed on Friday, December 18, 2015

'எங்களின் வாழ்நாளில் முஸ்லிம்கள் செய்த இந்த உதவியை மறக்கவே மாட்டோம். தண்ணீரைப் பார்த்து என்ன செய்வதென்று பயந்து போய் இருந்த போது எங்கிருந்தோ வந்த முஸ்லிம்கள் தங்கள் தோள்களைக் கொடுத்து நாங்கள் கீழே இறங்க உதவினார்கள்.'