Followers

Sunday, May 29, 2016

'வஹாபிகள் நல்லவர்கள்தான்: ஆனாலும் நல்லவர்கள் இல்லை' :-)



'வஹாபிகள் நல்லவர்கள்தான்: ஆனாலும் நல்லவர்கள் இல்லை' :-)

"Wahhabis do everything with a lot of expectations. They will do good, but in the long run, their motivation is to convert, they hate other religions,, even sects within Islam. That's the problem. All the evidence will show they did good, but no, they are not good for humanity"


'வஹாபிகள் நல்ல காரியங்கள் நிறைய செய்கிறார்கள். ஆனால் மத மாற்றத்தில் ஈடுபடுகிறார்கள். அவர்களால் மனித குலத்துக்கு ஆபத்து'


முதலில் வஹாபிகள் பல நல்ல காரியங்கள் செய்வதாக ஒத்துக் கொண்டதற்கு நன்றி. :-)

மத மாற்றம் என்பது அவ்வளவு சுலபமாக நடந்துவிடக் கூடியதல்ல. முதலில் அவனது மனம் மாற வேண்டும். குஜராத்தில் முஸ்லிம்கள் இத்தனை கொடுமைகளை அடைந்தும் ஒருவராவது இந்து மதம் திரும்பினரா? மோடிக்கள் அமீத்ஷாக்கள் சங் பரிவாரங்கள் என்று திட்டமிட்டு கொலைகள் நடத்தியும் எதனையும் சாதிக்க முடியவில்லை. 'கர் வாபஸி' க்கு ஐந்து லட்சம் பணம் தருவதாக சொல்லியும் எவரும் இஸ்லாத்தை விட வில்லை. இந்து மதம் மாறவில்லை.

ஆனால் எந்த பண முடிப்பும் கொடுக்காமல் இந்திய அரசின் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஒருவன் இஸ்லாத்தை ஏற்கிறான் என்றால் அதற்கான காரணத்தை ஆய்வு செய்யுங்கள். வர்ணாசிரமக் கொடுமை அவனை அந்த அளவு பாடாய் படுத்துகிறது.

எல்லோரும் படித்து விட்டால் சாதி ஒழிந்து விடும் என்றீர்கள். ஆனால் படிக்காத பாமரனனை விட படித்தவர்களிடம் தான் சாதி பார்ப்பது அதிகரித்துள்ளது.

கலப்புத் திருமணம் செய்தால் சாதி ஒழிந்து விடும் என்றீர்கள். ஆனால் சங்கர், கோகுல் ராஜ், என்று வரிசையாக காதலித்த இளைஞர்கள் கொலை வெறிக்கு ஆளாகி தண்டவாளத்தில் வீசப்பட்டார்கள்.

ஒரு மனிதனுக்கு பட்டம், பதவி, செல்வம், அந்தஸ்து என்பதை எல்லாம் விட சுய மரியாதை முக்கியம். அது ஒரு சமூகத்தில் தரப்படவில்லையானால் மற்ற சுகங்களால் எந்த பலனும் இல்லை. சுய மரியாதை தேடி அலையும் போது அவனது அருகில் உள்ள இஸ்லாமியர்களை பார்க்கிறான். அன்பு, பண்பு, சகோதரத்துவம் அனைத்தும் அவர்களிடத்தில் மிளிர்வதைக் காண்கிறான். இங்கு சென்றால் நிம்மதி கிடைக்கும் என்று வருகிறான்.

அவன் எதிர்பார்த்ததை விட மரியாதை இஸ்லாமிய மார்க்கத்தில் அவனுக்கு கொடுக்கப்படுகிறது. தான் மட்டுமல்லாமல் தனது மனைவி, தனது குழந்தைகளோடு 'இஸ்லாத்தை சொல்லிக் கொடுங்கள்' என்று பள்ளி வாசலில் காத்து நிற்கிறான். நிம்மதி தேடி வருபவனை நாங்களும் அரவணைத்துக் கொள்கிறோம்.

பூர்வீக மதத்தவராகிய நீங்கள் கொடுக்காத நிம்மதியை இஸ்லாமியராகிய நாங்கள் கொடுக்கிறோம். 'எங்கிருந்தாலும் சந்தோஷமாக வாழ்க' என்று பெருந்தன்மையுடன் நீங்கள் மதம் மாறியவர்களை வாழ்த்த வேண்டும். ஆனால் அதனை செய்வதில்லை. பெண்ணுக்காக மாறினான், காசுக்காக மாறினான் என்று அவனை கேவலப்படுத்துகிறீர்கள். அத்தனை ஏசல்களையும் தாங்கிக் கொண்டு இன்று கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை நோக்கி வருகின்றனர். இது அவர்களாக எடுத்த முடிவு. உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளாத வரை இந்த மத மாற்றம் நிற்கப் போவதில்லை என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறோம்.

















1 comment:

Dr.Anburaj said...

பெருந்தன்மையுடன் நீங்கள் மதம் மாறியவர்களை வாழ்த்த வேண்டும். ஆனால் அதனை செய்வதில்லை

ஒரு முஸ்லீம் இந்துவாக மதம் மாறினால் ஒரு அரேபிய மத பெண்மணி இந்துவை திருமணம் செய்து இந்துவாக மாறினாலும் இதை நீங்கள் கூறினால் நீா் யோக்கியன்தான்.