Followers

Sunday, May 29, 2016

மோடியால் இந்து மதத்தை விட்டும் இந்தியாவை விட்டும் வெளியேறுகிறேன்!



குஜராத் மாநிலத்தில் வசித்து பின்னர் கனடா நாட்டில் குடியேறிய ரோஷன் ஷா என்பவர் இந்த நாட்டை ரவுடிகளின் நாடு எனவும் மோடி அரசின் கீழ் நீதித்துறை ஊழல் கரை படிந்ததாகிவிட்டது எனவும் மேலும் தான் இங்கு காண்பது தான் இந்து மதம் என்றால் அதை விட்டு தான் வெளியேறுவதாகவும் அறிவித்துள்ளார்.

இந்திய ஜனாதிபதி, இந்திய தலைமை நீதிபதி, குஜராத் காவல்துறை நிர்வாக இயக்குனர், மற்றும் குஜராத் தலைமை நீதிபதி ஆகியோருக்கு எழுதிய கடிதத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கனடா நாட்டில் வசித்து வந்த ரோஷன் ஷா மோடியின் குஜராத் மாடலில் 2000 ஆம் ஆண்டு முதலீடு செய்ததாகவும் ஆனால் பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் தன்னை மோசடி செய்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இவர்களால் தானும் தனது குடும்பமும் தங்களுடைய சொத்துக்கள் அனைத்தையும் இழந்துவிட்டதாகவும் இது குறித்து நீதிமன்றத்தில் குற்றவாளிகள் மீத வழக்கு தொடுத்தும் எந்த பயனும் இல்லை என்று கூறியுள்ளார்.

16 வருடங்கள் தான் நீதிக்காக காத்திருந்ததாகவும் தனது தரப்பிலான ஆதாரங்கள் வலுவாக இருந்தும் அதனை சற்றும் கருத்தில் கொள்ளாத நீதிபதி குற்றம் சாட்டப்பட்டவர்கள் பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ். நபர்கள் என்பதால் அவர்களை விடுவித்துவிட்டார் என்று கூறியுள்ளார். இது இந்திய நீதித் துரையின் மீது தனக்கு இருந்த நம்பிக்கையை அடியோடு சாய்த்துவிட்டது என்றும் இனியாவது நீதிமன்ற விசாரணைகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இன்னும் நீதித்துறையில் மோடியின் ஆதிக்கம் அதிகாமாக இருக்கின்றது என்றும் இவரின் கொள்கைகளை தான் இந்து மதம் போதிகின்றது என்றால் தான் இன்றே இந்து மதத்தை விட்டு வெளியேறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தான் ஏமாற்றப்பட்டது போல மற்றவர்கள் ஏமாந்துவிடவேண்டாம் என்று கூறும் அவர் தனது குழந்தைகளை இந்தியா திரும்ப தான் விரும்பவில்லை என்றும் இந்தியாவில் முதலீடு செய்பவர்கள் நன்று யோசித்து முடிவு எடுக்குமாறும் இங்கே அரசியல் ஆதிக்கம் அதிகாமாக இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

நன்றி - புதிய விடியல் மற்றும் Wafiq Sha
http://www.puthiyavidial.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E

3 comments:

Dr.Anburaj said...

இன்னும் நீதித்துறையில் மோடியின் ஆதிக்கம் அதிகாமாக இருக்கின்றது என்றும் இவரின் கொள்கைகளை தான் இந்து மதம் போதிகின்றது என்றால் தான் இன்றே இந்து மதத்தை விட்டு வெளியேறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பச்சை பொய்.பொதுவாக கிறுக்கன்களின் பதிவுகளுக்கு அதுவும் இந்தியாவின் சமயம் கல்வி அரசு அமைப்பு ஆகியவற்றிற்கு எதிரான கருத்துக்களை மிக்க ஆா்வத்துடன் பதிவு செய்யும் அரேபிய அடிமையான தாங்கள் வேறு என்ன செய்வீா்கள்.

Unknown said...

எங்கே, சில மாதங்களாக 'டாக்டரை'க் காணோம்? பின்னூட்டங்களிட்டு, அவருக்கே அலுத்துப் போய்விட்டதா? அல்லது, நீங்கள் பின்னூட்டங்களை மட்டுறுத்தல் செய்துள்ளீர்களா?

Dr.Anburaj said...

பாட்டையா அவர்களைத்தான் காணோம். கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லையே. இறையில்லா இஸ்லாம் செங்கொடி இணையதள கட்டுரைகளுக்கு மறுப்பு எழுத வக்குள்ளதா ?