Followers

Sunday, May 08, 2016

தேசிய விருதை புறக்கணித்த இளையராஜா நாட்டை விட்டு வெளியேற வேண்டும்!



தேசிய விருதை புறக்கணித்த இளையராஜா நாட்டை விட்டு வெளியேற வேண்டும்!

இதைச் சொல்வது வேறு யாருமல்ல. இவரது தம்பி கங்கை அமரனேதான். இளையராஜாவின் புகழாலும் திறமையாலும் இன்று காசு பார்த்து ஒரு நல்ல இடத்தைப் பெற்றுக் கொண்ட கங்கை அமரன் இவ்வாறு சொல்வது வடி கட்டிய திமிர் என்றுதான் சொல்வேன்.

தேசிய விருதை வாங்காமல் இருப்பதற்கு இளையராஜாவிடம் பல காரணங்கள் இருக்கலாம். அதே விழாவில் தனுஷூம் விருது வாங்க போகவில்லை. விருது வாங்க செல்வதும் செல்லாததும் அவரவர் விருப்பம்.

சில மாதங்களுக்கு முன் நாட்டில் சகிப்புத் தன்மை குறைந்து விட்து என்றும் மோடி ஆட்சியில் அதிருப்தியுற்று பல கல்வியாளர்கள் வாங்கிய விருதுகளையே திருப்பிக் கொடுக்கவில்லையா?

கங்கை அமரன் தற்போது பிஜேபியில் ஐக்கியமாகி உள்ளார். பிஜேபியில் இணைந்து விட்டாலே பாசிசம் தானாகவே மண்டையில் ஏறி விடும். போலி தேச பக்தியும் குடி கொண்டு விடும். எனவே தவறு கங்கை அமரனிடம் இல்லை. அவர் சேர்ந்துள்ள பிஜேபியிடம் உள்ளது. சொந்த அண்ணனையே நாட்டை விட்டு வெளியேறலாம் என்று சொல்லும் அளவுக்கு திமிரும் ஏறுகிறது.

அடுத்து எதற்கெடுத்தாலும் வந்தவன் போனவன் எல்லாம் நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று சொல்கிறார்களே! அந்த அளவு பொருளற்று போய் விட்டதா இந்த வார்த்தை? நரேந்திர மோடியும் ஸ்மிருதி ராணியும் போலியாக கல்லூரி சான்றிதழ் தயாரித்துள்ளார்களே! இது மிகப் பெரிய தேச துரோகம் இல்லையா? அதுவும் பதவியில் பிரதமராகவும் அமைச்சராகவும் உள்ளவர்கள் செய்யலாமா? உண்மையான தேச பக்தியுள்ளவர்கள் இந்த இருவரையும் அல்லவா நாட்டை விட்டு வெளியேறு என்று சொல்ல வேண்டும்? கங்கை அமரன் மோடியிடம் கேட்பாரா?










1 comment:

Dr.Anburaj said...



ஒருவரை நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று பேசுவது தவறு.