'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Thursday, March 17, 2016
முகிலனை கொலை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை திருவல்லிக்கேணியில் வாலிபரை கொலை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொண்டர்
சென்னை திருவல்லிக்கேணி பகுதிக்குட்பட்ட பல்லவன் சாலை காந்திநகரை சேர்ந்த முகிலன்(வயது 25) நேற்று முன்தினம் இரவு கொலை செய்யப்பட்டார். அவருடைய அண்ணன் சிலம்பரசன்(27), நண்பர் செல்வகுமார் ஆகியோர் கத்திக்குத்து காயமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முகிலனை கொலை செய்தது அதே பகுதியை சேர்ந்த ராகேஷ்(19), தயா என்கிற தயாநிதி(20), வேலு(22) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் நேற்றுமுன்தினம் இரவோடு இரவாக போலீசார் கைது செய்தனர்.
கோஷ்டி தகராறு
கொலைக்கான காரணம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல் வருமாறு:–
கொலை செய்யப்பட்ட முகிலன்(25) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தொண்டர் ஆவார். திருவல்லிக்கேணி ஆதம் மார்க்கெட்டில் உள்ள மருந்துக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அவருடைய அண்ணன் சிலம்பரசன் குடிபோதைக்கு அடிமையானவர். அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராகேசுக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது.
ராகேஷ் சென்டிரல் ரெயில் நிலையத்தில் சுமை தூக்கும் வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று சிலம்பரசனிடம் ராகேஷ் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கி உள்ளார். இதுகுறித்து தனது தம்பி முகிலனிடம் சிலம்பரசன் தெரிவித்துள்ளார். இதையடுத்து முகிலன், சிலம்பரசன், அவருடைய நண்பர் நரசிம்மன் ஆகியோர் ராகேசை தேடி சென்றனர்.
சிறையில் அடைப்பு
அங்கு உள்ள ஒரு டீ கடையில் ராகேஷ், தன்னுடைய நண்பர்கள் தயாநிதி, வேலு ஆகியோருடன் அமர்ந்து இருந்தார். அப்போது இருதரப்பினருக்கும் இடையே கடுமையான வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இந்தநிலையில் தான் வைத்திருந்த ‘ஸ்கூரு டிரைவரை’ எடுத்து முகிலன் கழுத்தில் ராகேஷ் குத்தினார். அதன்பின்னர் அவரது உடல் முழுவதும் சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் முகிலன் இறந்தார். சிலம்பரசன், நரசிம்மன் படுகாயமடைந்தனர். அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட கொலையாளிகள் 3 பேரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
தனவல் உதவி
தினத் தந்தி
17-03-2016
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment