Followers

Wednesday, March 09, 2016

'ராணி லக்ஷூமி பாய்:' விருது பெற்ற நாஜியா!



உத்தர பிரதேசத்தில் உள்ள ஷாகிர் ஃபாத்திமா கல்லூரியில் நாஜியா என்ற முஸ்லிம் பெண் படித்து வருகிறார். இவருக்கு வயது பதினைந்து. வழக்கம் போல் கல்லூரியிலிருந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு இளம் பெண்ணின் கதறல் கேட்கிறது. கல்லூரியிலிருந்து 100 மீட்டர் தொலைவில் இந்த சம்பவம் நடக்கிறது. இரு சக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள் ஒரு இளம் பெண்ணை பலாத்காரம் செய்து கொண்டுள்ளனர். நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த நாஜியா தனது உயிரையும் பொருட்படுத்தால் அந்த சிறுமியை காப்பாற்ற ஓடி வந்தார். அந்த இளைஞர்களிடம் கிட்டத்தட்ட இரு நிமிட போராட்டத்துக்குப் பிறகு அந்த சிறுமியை மீட்கிறார் நாஜியா. பிறகுதான் தெரிகிறது அந்த சிறுமி அதே கல்லூரியில் படித்து வரும் டிம்பி என்பது. அவர் ஒரு இந்து பெண். அழுது கொண்டிருந்த அந்த பெண்ணை மீட்டு அவர்களின் பெற்றோரிடத்தில் ஒப்படைத்தார் நாஜியா. பள்ளி நிர்வாகம் இந்த சம்பவத்தை பற்றி காவல் துறையில் புகார் செய்தது.

இந்து முஸ்லிம் பிரச்னை அதிகம் உள்ள இந்த ஊரில் இப்படி நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. டிம்பியின் இந்து பெற்றோர் நாஜியாவை தங்கள் வீட்டுக்கு அழைத்து உபசரித்து அனுப்பினர். தங்களின் மற்றொரு மகளாகவும் தத்தெடுத்துக் கொண்டனர்.

இது பற்றி டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு பேட்டியளித்த நாஜியா கூறும் போது...

'மதியம் 12:30 மணி இருக்கும். ஒரு இளம் பெண்ணின் கதறல் எனக்கு கேட்டது. அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள் ஒரு பெண்ணை பலவந்தமாக இழுத்துக் கொண்டிருந்தார்கள். நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த நான் ஓடிச் சென்று அந்த இளைஞர்களிடம் போராடினேன். கிட்டத்தட்ட இரண்டு நிமிட நேரம் இந்த போராட்டம் நடந்தது. நான் பின் வாங்காமல் தைரியமாக போராடுவதைக் கண்ட அந்த இருவரும் பயத்தில் அந்த பெண்ணை விட்டு விட்டு ஓட்டமெடுத்தனர். பிறகு தான் தெரிந்தது அவள் எங்கள் கல்லூரியில் படிக்கும் டிம்பி என்பது. அவள் எனது ஜூனியர். பயத்தில் அழுது கொண்டிருந்த அவளை அவளது பெற்றோரிடம் ஒப்படைத்தேன்.' என்கிறார்.

இந்த இஸ்லாமிய பெண்ணின் வீர தீர செயலை கௌரவிக்கும் முகமாக முதல்வர் அகிலேஷ் யாதவ் 'ராணி லக்ஷூமி பாய்' விருது அளித்து கவுரவித்தார். ஒரு லட்ச ரூபாய் பணமுடிப்பும் கொடுக்கப்பட்டது.

இந்த கல்லூரியின் தாளாளர் கூறும்போது 'இந்துக்களும் முஸ்லிம்களும் சகோதரர்களாக பழகி வருகின்றனர். பல இஸ்லாமியர்கள் சமஸ்கிரதம் படிக்கின்றனர். சில இந்துக்கள் உருது மொழியையும் விருப்ப பாடமாக எடுத்துள்ளனர். ஒரு சில அரசியல்வாதிகளே மக்களை பிரிக்கின்றனர்' என்கிறார்.

தகவல் உதவி
டைம்ஸ் ஆஃப் இந்தியா
08-03-2016

முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு போய் விடச் சொல்லும் இந்துத்வாவாதிகள் இந்த சம்பவத்தை சற்றே சிந்தித்துப் பார்க்கட்டும். நாஜியாவும் பாகிஸ்தானுக்கு சென்றிருந்தால் டிம்பி என்ற இந்து பெண் அந்த கயவர்களால் சீரழிக்கப்பட்டிருப்பாள். இந்துத்வாவாதிகள் வர்ணாசிரம வெறியிலிருந்து வெளியே வந்து மனிதர்களாக வாழ பழகட்டும். இந்துத்வாவாதிகளுக்கும் ஆபத்தென்றால் முதலில் ஓடி வந்து காப்பாற்ற வருவது இஸ்லாமியர்களாகத்தான் இருக்கும். சுனாமியிலும், சென்னை வெள்ளத்திலும் அதனைத்தான் நாம் பார்தோம்.

இது போன்ற செய்திகளை நமது மீடியாக்கள் வெளியிடாது. மனித நேயமிக்க இந்த செய்தியை அனைவரிடமும் கொண்டு சேர்ப்போம்.

மகளிர் தின சிறப்பு பதிவாக இதனை பதிகிறேன்.

timesofindia.indiatimes.com/city/agra/Teen-Muslim-girl-gets-bravery-award-for-saving-Hindu-classmate-from-kidnappers/articleshow/51314889.cms

2 comments:

Dr.Anburaj said...

நான் ஏற்கனவே ஆங்கிலத்தில் பதிவு செய்ததை தமிழில் வெளியிட்டுள்ளீா்கள். நல்ல விசயங்களைப் பதிவு செய்வதில் நானே முந்திக் கொள்கிறேன். காரணம் தங்கள் புத்தியில் நிறைய ” கோட்டம் ” உள்ளது. இந்துத்துவா அரை டவுசா் என்று சதா யாரையும் இகழ தேவையில்லை.
அரேபியா்களை விட சிறந்தவா்கள் இந்துத்துவா வாதிகள்.

Dr.Anburaj said...


முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு போய் விடச் சொல்லும் இந்துத்வாவாதிகள்

ஏன் இப்படி முட்டாள்தனமாக உளறிக் கொண்டிருக்கின்றாய் ? உமக்கு கிறுக்கா ? அரேபியன் கெர்டுக்கும் இனத்தனமான பிச்சைக்கு எவ்வளவு சேவகம் செய்யப் போகின்றாய் ?