Followers

Thursday, March 17, 2016

ஜாவித் அக்தருக்கு பீரிட்டெழுந்த தேச பக்தி!



ஜாவித் அக்தருக்கு பீரிட்டெழுந்த தேச பக்தி!

நேற்று பாராளுமன்றத்தில் ஜாவித் அக்தர் பேச ஆரம்பித்தார். நமது நாட்டின் பெருமைகளை பேசிக் கொண்டு வந்தவர் திடீரென்று...

'சில நாட்களுக்கு முன் ஹைதரபாத்தின் உவைசி 'பாரத் மாதாகீ ஜே' என்று சொல்ல மாட்டேன். அரசியலமைப்பு சட்டத்தில் எனக்கு கட்டளையிடப்படவில்லை. என்ன செய்ய முடியும் உங்களால்' என்று கேட்கிறார். அவர் உடுத்தியிருக்கும் ஷேர்வானியும் தொப்பியும் அரசியலமைப்பு சட்டத்தில் சொல்லப்படவில்லை. ஆனால் அவர் அதனை உடுத்தவில்லையா? நான் சொல்கிறேன். 'பாரத் மாதா கீ ஜே' பாரத் மாதா கீஜே''

அவர் பேசியதன் சுருக்கம் இதுதான்.

இனி விவாதத்துக்கு வருவோம்....

'பாரத் மாதாகீ ஜே' என்று சொல்வது எவருக்கும் பிரியம் என்றால் அதனை நாங்கள் தடுக்கவில்லை. ஆனால் முஸ்லிம்களும் சொல்ல வேண்டும். அப்படி சொல்லாதவர் பாகிஸ்தானுக்கு சென்று விட வேண்டும்' என்று சொல்வதுதான் பிரச்னையை உண்டு பண்ணுகிறது.

'பாரத் மாதா கீ ஜே' என்று உதட்டளவில் சொல்வதல்ல தேசபக்தி. இந்த நாட்டு மக்களை நேசிக்க வேண்டும். ஏழைகளை, தலித்களை, சிறுபான்மையினரை அரவணைத்து செல்ல வேண்டும். தேச விரோத செயல்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். இதுதான் தேச பக்தி.
அசாதுதீன் உவைஸி பணம் சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை. கோடிக்கணக்கான தங்களின் சொந்த பணத்தை ஏழை மக்களுக்காக செலவிட்டு வருகின்றனர். குறைந்த செலவில் மருத்துவமும், கல்வியும் கொடுத்து வருகிறார் உவைஸி. இதன் பலனை பெரும்பாலான தலித்களும் பெற்று வருகிறார்கள். இந்த நாட்டை நேசிப்பதால்தான் இத்தனையும் அவரால் செய்ய முடிகிறது.

ஜாவித் அக்தரும் அவரது குடும்பமும் செய்து வரும் தேசத் தொண்டு என்ன?

சினிமாவில் ஆபாச பாடல்களை எழுதி பணம் சம்பாதிக்கிறார் ஜாவித். இவரது மனைவி ஷபனா ஆஸ்மி லெஸ்பியன் படத்தில் நடித்து தேசத் தொண்டாற்றி வருகிறார். இவரது மகன் ஃபர்ஹான் அக்தர் ஆபாசமாக நடிகைகளோடு நடித்து இளைஞர்களை கெடுத்து வருகிறார். முடிவில் பாரத் மாதா கீ ஜே என்று சொல்லி விட்டால் இவர்கள் மனிதப் புனிதர்களாக மாறி விடுகின்றனர்.

உவைஸி ஷேர்வானியும் தொப்பியும் போட்டுக் கொள்கிறார். அதனை அவர் மோகன் பகவத்தும் போட்டுக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப் படுத்தவில்லை.

இஸ்லாத்தை பொருத்த வரை கற்பனைகளுக்கு இடமில்லை. 'பாரத் மாதா' என்ற ஒருவர் எங்கும் வாழவில்லை. இவர்களாக ஒரு பெண்ணை கற்பனை செய்து கொண்டு அதனை புனிதப்படுத்தி 'வந்தே மாதரம்' என்று பாடிக் கொண்டு அதன் மூலம் தேச பக்தியை வெளிப்படுத்துகிறார்கள். அது அவர்களின் உரிமை.

முஸ்லிம்கள் இந்தியாவை நேசிக்கின்றனர். இந்திய சட்டத்தை மதிக்கின்றனர். தலித்களிலிருந்து அனைத்து மக்களையும் தனது சகோதரனாக பாவிக்கின்றனர். தேசிய கீதத்தை பாடுகின்றனர். இனி வருங்காலங்களிலும் இந்திய தேசத்துக்கு தங்களின் உயிரையும் கொடுப்பர் முஸ்லிம்கள். எந்த இந்துத்வாவாதியும் இஸ்லாமியருக்கு தேசபக்தி பாடம் எடுக்க வேண்டாம் என்று சொல்லிக் கொள்கிறோம்.

இந்துத்வாவாதிகள் முதலில் இந்திய மக்கள் அனைவரையும் சமமாக நடத்தட்டும். இந்திய சட்டத்தை மதிக்கட்டும். சாதி வெறியை விட்டு வெளியே வரட்டும். பிறகு மற்றவர்களுக்கு தேச பக்தி பாடம் எடுக்கட்டும்.

இந்து மதத்தைப் பொருத்த வரை காணும் எல்லாமே கடவுள். ஆனால் இஸ்லாம் கடவுளின் பக்தி, தேசத்தின் பக்தி, தாய் தந்தையரின் பக்தி என்று ஒவ்வொன்றுக்கும் ஒரு அளவு வைத்துள்ளது. அந்த அளவு என்ன என்பது முஸ்லிம்களுக்கு தெரியும். கார்கில் போரில் அதிகம் உயிரிழந்தது இஸ்லாமியர் என்பதையும் மறக்க வேண்டாம். பிறந்த நாட்டின் மீத பற்று என்பது இயற்கையாகவே ஒரு மனிதனுக்குள் இருப்பது. அதனை கோஷம் போட்டு நிரூபி இல்லை என்றால் நீ தேச விரோதி என்பது சிறு பிள்ளைத்தனம். இனியும் போலி தேச பக்தியால் இந்துத்வாவாதிகள் மக்களை ஏமாற்ற முடியாது என்றும் சொல்லி வைக்கிறோம்.

2 comments:

Mohamed Farook.M said...

இந்து மதத்தைப் பொருத்த வரை காணும் எல்லாமே கடவுள். ஆனால், இஸ்லாத்தை பொருத்த வரை கற்பனைகளுக்கு இடமில்லை போலி தேச பக்தியால் இந்துத்வாவாதிகள் மக்களை ஏமாற்ற முடியாது. எந்த இந்துத்வாவாதியும் இஸ்லாமியருக்கு தேசபக்தி பாடம் எடுக்க வேண்டாம் என்று சொல்லிக் கொள்கிறோம்.

Mohamed Farook.M said...

இந்து மதத்தைப் பொருத்த வரை காணும் எல்லாமே கடவுள். ஆனால், இஸ்லாத்தை பொருத்த வரை கற்பனைகளுக்கு இடமில்லை போலி தேச பக்தியால் இந்துத்வாவாதிகள் மக்களை ஏமாற்ற முடியாது. எந்த இந்துத்வாவாதியும் இஸ்லாமியருக்கு தேசபக்தி பாடம் எடுக்க வேண்டாம் என்று சொல்லிக் கொள்கிறோம்.