பாரத் மாதா என்று இந்த பெண்ணைச் சொல்லலாம்!-------------------------------------------------------------------கடைவீதிய...
Posted by Nazeer Ahamed on Wednesday, March 30, 2016
பாரத் மாதா என்று இந்த பெண்ணைச் சொல்லலாம்!
-------------------------------------------------------------------
கடைவீதியில் தினமும் மாமூல் வாங்கும் ஒரு கான்ஸ்டபிளை ஒரு இஸ்லாமிய பெண்மணி துவைத்து எடுப்பதை பாருங்கள். அநீதிக்கு எதிராக கொதித்தெழும் இவர்தான் உண்மையான பாரத மாதா!
'காவல் துறையில் உள்ள நீங்களே இப்படி ஏழைகளிடம் திருடினால் உங்களிடம் எப்படி நாங்கள் புகார் செய்ய முடியும்? ஏழை மக்களான இவர்களிடமிருந்து தண்ணீர் வாங்குகிறாய், மளிகை சாமான்கள் வாங்குகிறாய். எதற்கும் பணம் கொடுப்பதில்லை. கேட்டால் மிரட்டுகிறாய்.'
'நான் கேட்கவில்லை.... அவர்களாகத்தான் கொடுத்தார்கள்'
'சுப்.... வாயை மூடு. வேலையில் சேரும் போது லஞ்சம் வாங்க மாட்டேன் என்று உறுதி மொழி கொடுத்தாயே... அந்த உறுதி மொழி எங்கே? இந்த கொடுமையை பொதுமக்களாகிய நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்.'
இந்த இஸ்லாமிய பெண்மணியின் கோபத்தைக் கண்டு அந்த கடைவீதியே அதிர்ச்சியில் உறைந்து போனது. இது போன்று இந்திய தாய்மார்கள் களமிறங்கினால் லஞ்சமும் திருட்டும் நம் நாட்டில் என்றோ மறைந்திருக்கும்.
கற்பனை உருவத்தை வரைந்து வைத்துக் கொண்டு 'பாரத் மாதா கீ ஜே' என்று கூவி வரும் அரை டவுசர்களே! உண்மையான பாரத மாதா இவர்தான். இவருக்கு ஜே போடு. குற்றங்களாவது நாட்டில் குறையும்.
1 comment:
ஜெய்ஹிந்த என்று சொன்னால் போதுமானது.
Post a Comment