கன்ஹயா குமாரின் ஆணித்தரமான அடுத்த ஒரு பேட்டி!நாளுக்கு நாள் கன்ஹயாவின் பேட்டியில் ஒரு பொறுப்புணர்வும் முதிர்ச்சியும் தெ...
Posted by Nazeer Ahamed on Sunday, March 13, 2016
நாளுக்கு நாள் கன்ஹயாவின் பேட்டியில் ஒரு பொறுப்புணர்வும் முதிர்ச்சியும் தென்படுகிறது. இந்திய நாட்டின் உண்மையான தேச பக்தன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சிறந்த இலக்கணமாக தெரிகிறார் கன்ஹயா. இந்த பேட்டியில் நான் விரும்பிய சில இடங்களை மொழி பெயர்க்கிறேன். முழு பேட்டியும் ஹிந்தியில் உள்ளது. அவசியம் பொறுமையாக பார்த்து அதிகம் ஷேர் செய்யுங்கள்.
கேள்வி:
அரசியலில் நேரிடையாக ஈடுபடும் எண்ணம் உண்டா?
கன்ஹயா:
தற்போது நேரிடையாக ஈடுபட மாட்டேன். நாட்டின் முன்னேற்றத்தில் உண்மையான ஆர்வமுள்ள இளைஞர்கள் தேர்தலில் நின்றால் அவர்களை ஆதரிப்பேன்.
கேள்வி:
பிஹெச்டி க்கு படித்துக் கொண்டே வறுமையில் உள்ள குடும்பத்தையும் கவனிப்பது சிரமமாக தோன்றவில்லையா?
கன்ஹயா:
எனது குடும்பம் ஏழ்மையில் உள்ளதை அனைவரும் அறிவர். ஒரு விவசாயியின் குடும்பம் எந்த சிக்கலையும் சமாளித்து விடும். நாங்கள் ஏழைகள்தான். ஆனால் இருப்பதை உண்டு சந்தோஷமாக உள்ளோம். எனது பெற்றோர் என்னிடம் 'எங்களுக்கு இந்த வாழ்க்கையே நிம்மதியாக உள்ளது. நீ ஒரு நல்ல மனித நேயமிக்க மனிதனாக சாழ் அது போதும் எங்களுக்கு' என்று தான் கூறுகின்றனர்.
எனது தந்தைக்கு வயிற்றில் ஆபரேஷன் பண்ண வேண்டிய சூழல் வந்தபோது ஜேன்யூவின் உறுப்பினர்கள், அனைவரும் சந்தா வசூலித்து ஒண்ணரை லட்சம் ரூபாய் தந்தனர். அந்த உதவி மூலம் எனது தந்தையின் ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்தது. எனது அண்ணனுக்கு திருமணமாகி சந்தோஷமாக உள்ளார். எனது தம்பி ஐஏஎஸ்ஸூக்கு படிக்கிறான். வருமானத்துக்கு பள்ளிக் குழந்தைகளுக்கு ட்யூஷன் எடுக்கிறான்.எனது சகோதரி திருமணமாகி கணவரோடு செட்டில் ஆகி விட்டார்.
இதோ எதிரில் நிற்கும் எனது நண்பன் இத்ரீஸ் எனக்கு போட்டுக் கொள்ள சட்டைகள் தருகிறான். படிப்பதற்கு அரசாங்கம் தரும் உதவித் தொகை 5000 மாதா மாதம் கிடைத்து விடுகிறது. ஒரு சமோஷா டீயில் நண்பரின் பார்டியும் முடிந்து விடும். தேவைகளை நாங்கள் சுருக்கிக் கொண்டோம். எனவே பொருளாதார சுமை எங்களுக்கு இல்லை. நமது தேவைகளை சுருக்கிக் கொண்டால் எந்த இக்கட்டான நிலைமையிலும் சந்தோஷமாக வாழ்ந்து விடலாம். எனவே நான் சந்தோஷமாகத்தான் உள்ளேன்.
ஜேன்யூ கேம்பஸீக்குள் நீங்கள் ஒரு இந்துவாக ஒரு முஸ்லிமாக ஒரு கிறித்துவராக ஒரு நாத்திகராக வலம் வரலாம். இப்படித்தான் இருக்க வேண்டும், இந்த உணவைத்தான் உண்ண வேண்டும்: என்று எந்த கட்டுப்பாடும் இங்கு கிடையாது. யாரை காதலிக்க வேண்டும்: எந்த மதத்தவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று யாரையும் நாங்கள் கட்டுப்படுத்த மாட்டோம். ஒரு மதசார்பற்ற நாட்டுக்கு இதுதான் தேவை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்று நாடு ஒரு சிலரால் பல சவால்களை எதிர் நோக்க வேண்டியுள்ளது.
மிக சிறந்த பேட்டி.... உண்மையான தேச பக்தி என்றால் என்ன என்பதை நமது இந்துத்வா டேஷ் பக்தர்கள் கன்ஹயாவிடம் கற்றுக் கொள்ளட்டும்.
1 comment:
இந்த உணவைத்தான் உண்ண வேண்டும்: என்று எந்த கட்டுப்பாடும் இங்கு கிடையாது.
யாரை காதலிக்க வேண்டும்
எந்த மதத்தவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும்
என்று யாரையும் நாங்கள் கட்டுப்படுத்த மாட்டோம்.
கன்ஹாகுமாருக்கு இதுவா வேலை ? படிக்கும் வேலையை விட்டு வீட்டு வீண் வேலைகளைஅஇவா்ஏன் செய்ின்றாா். அரசு வழங்கும் உதவித் தொகை ரூ.5000 வாங்கும் திமிால் மாணவருக்கான பொருப்புக்களை மறந்து தகுதி மீறி பேசுகின்றாா்.கசடன்.
முஸ்லீம் பெண்ணுக்கும் ஆணுக்கும் இப்படி ஒரு சுதந்திரத்தை அளிக்க
சுவனப்பிாியனும் , அரேபிய மத ஜமாத் தலைவா்களும்
முன் வருவாா்களா ?
திருமணங்கள் சமய சாா்பற்று நடக்க முஸ்லீம்களுக்கு சம்மதம் கிடையாது.
இக்கருத்து தங்களுக்கு உடன்பாடா ?
Post a Comment