'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Sunday, March 06, 2016
தேசபக்தி என்பது இதுதான்:
தேசபக்தி என்பது இதுதான்:
நாக்கை அறுப்பதல்ல தேசபக்தி: கழுவில் ஏற்றுவதல்ல தேச பக்தி:' பாரத் மாதா கீ ஜே' என்று கோஷம் போடுவதல்ல தேச பக்தி: சூத்திரன் படித்தால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்று என்பதல்ல தேச பக்தி: வந்தே மாதரம் பாடுவதல்ல தேச பக்தி: குஜராத்தில் கர்பிணியின் வயிற்றை கீறி குழந்தையை நெருப்பில் இட்டாயே அதுவல்ல தேச பக்தி: பள்ளி வாசல்களில் குண்டு வைத்து அதற்கு முஸ்லிம்களை காரணமாக்கினாயே அதுவல்ல தேச பக்தி:
தாய் மொழியான தமிழை நீச மொழி என்றும் செத்த மொழியான சமஸ்கிரதத்தை தேவ மொழி என்றும் பசப்புவதல்ல தேச பக்தி:
அரை டவுசர்களான இந்துத்வாவாதிகளே தெரிந்து கொள்ளுங்கள்.....
சக மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும், தனது நாட்டுக்காரன் சென்னையில் வெள்ளத்தில் தவித்தபோது தனது உயிரையும் துச்சமாக மதித்து பல இந்து சகோதரர்களை காப்பாற்றினானே இஸ்லாமியன்! அதுதான் உண்மையான தேச பக்தி.
பாஷை தெரியாத அரபு நாட்டில் தூதரகமே கைவிட்ட போது மணிகண்டனை தாயைப் பொல் உணவு ஊட்டி வீடு வரை கொண்டு சேர்த்திருக்கிறார்களே இஸ்லாமியர்கள்... இதற்கு பெயர் தான் தேச பக்தி.
சிறுபான்மையினராக இருந்தாலும் கடந்த பத்து வருடங்களாக இரத்த தானம் செய்வதில் தமிழகத்தில் முண்ணனியில் இருக்கிறார்களே இஸ்லாமியர்கள்: இதில் பலன் பெறுவது அதிகள் இந்துக்களே... குருதிக் கொடை கொடுத்த அந்த இஸ்லாமியரிடம் இருக்கிறது தேச பக்தி.
தமிழகம் முழுக்க ஆம்புலன்ஸ் இலவசமாக கொடுத்து சாதி மத பேதம் இன்றி பணியாற்றி வருகிறார்களே இஸ்லாமியர்கள்: அவர்களிடம் பாருங்கள் தேச பக்தியை...
இந்துத்வாவாதிகளே... மேலும் சொல்கிறேன் கேளுங்கள்.
நாட்டு மக்களை துண்டாடி அதன் மூலம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றியிருக்கும் அமீத்ஷாவிடமும் மோடியிடமும் சென்று தேச பக்தி பாடம் எடுக்காதீர்கள். தனது நாட்டு மக்கள் துயரும் போது சாதி மதம் பார்க்காமல் ஓடி வந்து உதவுகிறானே அந்த இஸ்லாமியனிடத்தில் தேச பக்தி பாடம் எடுங்கள். அப்போதுதான் முன்பு நீங்கள் செய்த பாவங்கள் குறைய கொஞ்சமாவது வாய்ப்பிருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment