Followers

Monday, March 07, 2016

இந்திய பெண்களின் மார்புக்கும் வரி வசூலித்த நம்பூதிரிகள்!புலையர் சாதி, சாணார் சாதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பார்பன நம்பூதிரிகள் கேரளாவில் செய்த கொடுமைகளை நாம் அறிவோம். கேரளாவிலும் கேரளாவை ஒட்டிய கன்யாகுமரி, நாகர் கோவில் போன்ற ஊர்களிலும் தாழத்தப்பட்ட மற்றும் நாடார் சாதி மக்களுக்கு 'முலை வரி' என்ற ஒன்றை வசூலித்தனர். ஒரு பெண்ணின் மார்பின் அளவுக்கேற்ப அந்த வரியானது போடப்படும். இதனை வசூலிப்பதற்கென்றே மானங்கெட்ட நம்பூதிரிகள் ஆட்களை நியமித்திருந்தனர். வரி கட்டாத பெண்களின் மார்புகள் அறுத்தெறியப்பட்டன. இதற்கு பயந்து கொண்டு தங்கள் உழைப்பில் பெரும் பகுதியை அக்கிரமக்கார நம்பூதிரிகளுக்கு கொடுத்து வந்தனர் தாழ்த்தப்பட்ட பெண்கள். உலகிலேயே இப்படி ஒரு கொடுமை நமது தமிழகத்திலும் கேரளாவிலும் தான் நடந்துள்ளது.

நாஞ்செலி என்ற அழகிய தாழ்த்தப்பட்ட பெண்ணுக்கு முலை வரி பாக்கி இருந்தது. இதனால் அந்த பணத்தை வசூலிக்க மானங்கெட்ட அதிகாரிகள் நாஞ்செலியின் வீட்டின் கதவை தட்டினர். 'முலை வரி' கட்ட அந்த பெண்ணிடம் பணம் இல்லை. உடனே உள்ளே சென்று ஒரு இலையை எடுத்து வந்து தரையில் பரப்பினார். தனது இறைவனை நெஞ்சுறுக வணங்கி விட்டு உடன் தனது இரு மார்பகங்களையும் அறுத்து அந்த இலையின் மீது வைத்து அந்த அதிகாரிகளுக்கு காணிக்கையாக்கினார். இந்த தகவல்களை கண்ணூரைச் சேர்ந்த ஓவியர் முரளி பத்திரிக்கையாளர்களிடம் விவரித்தார்.

கேரளாவில் உள்ள செர்தாலா என்ற இடத்தில் இந்த கொடுமை அரங்கேறியது. இது நடந்து நூறு ஆண்டுகள் ஆகி விட்டது. தற்போது அந்த இடம் 'முலச்சிபுரம்' என்ற பெயரில் பலராலும் அறியப்படுகிறது.

ஓவியர் முரளி மேலும் தொடர்கிறார் 'செர்தாலா என்ற இந்த கிராமத்தில் உள்ள அனைவரும் நாஞ்செலியின் சோக வரலாறை அறிவர். இந்த காட்சிகளை ஓவியமாக வடித்துள்ளேன்' என்கிறார்.

இதே கிராமத்தைச் சேர்ந்த அசிஸ்டன்ட் புரபஸர் தாமஸ் புலிக்கல் (53) கூறும் போது 'சிறு வயதிலிருந்தே இந்த கொடுமைகளை எனது குடும்பம் பார்த்து வந்துள்ளது. நெஞ்செலி போன்ற வீர மிக்க பெண்களை பெற்றது இந்த மண்' என்று நினைவு கூறுகிறார்.

பார்பன நம்பூதிரிகளின் கொடுமை திருவிதாங்கூர் மன்னனின் கொடுமை இவற்றை எல்லாம் தாங்காமல் பெரும்பாலான நாடார் சாதி மக்கள் கிருத்துவத்தை தழுவினர். இதனால்தான் இன்றும் கன்யாகுமரி, நாகர் கோவில் போன்ற ஊர்களில் கிருத்தவ மக்கள் அதிகமிருப்பதை காணலாம்.

மார்புகள் திறந்த அந்த பெண்களின் புகைப்படத்தை நான் பதிய விரும்பவில்லை. எனக்கே இந்த உணர்வு இருக்கும் போது அந்த பெண்களின் கூச்ச உணர்வை நினைத்து பார்கிறேன்.

ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டு பஞ்சம் பிழைக்க வந்த ஒரு கூட்டம் இந்திய நாட்டு மக்களை அடிமை படுத்தி அவர்களை என்னவெல்லாம் செய்தார்கள் என்பதற்கு இந்த சம்பவங்களெல்லாம் இன்றும் நமக்கு சாட்சி பகர்ந்து கொண்டுள்ளன.

4 comments:

Dr.Anburaj said...


இசுலாமிய சமூகத்திற்கு அரேபிய அடிமைத்தனம் பயங்கரவாதம் பெரும் தலைவலியாக தீராத திருகு வலியாக உள்ளது.அதுபோல் தீண்டாமையும் இந்தியாவில் பெரும் தலைவலியாக உள்ளது.ஆதாம் -ஏவாள் கையில் எந்த வேதத்தையும் கொடுக்கவில்லை. எந்த வாழ்க்கை ஒழுக்கததையும்

மனிதனை காண்டு மிராண்டியாக படைத்தான் அல்லா என்ற இறைவன்.

மனிதன் கலாச்சார பாிணாமத்தை பெரும் விலை கொடுத்துதான் பெற்றான்.
நல்லது எது செய்தாலும் எதிா்ப்பு வரத்தான் செய்யும்.
இன்று இந்து சமூகத்தில் உள்ள அனைத்து சாதி மற்றும் பிாிவுகளும் காண்டுமிராண்டித்தனதிலிருந்து படிப்படியாக பாிணாமம் பெற்றவா்கள்தாம்.
ஆக தீண்டாமை என்ற அநீதியை எதிா்த்து லட்சக்கணக்கான மாமனிதா்களும் முனிவா்களும் -கௌதமா் உட்பட - இந்தியாவில் போராடி வருகின்றாா்கள். 100 கோடி இந்து மக்கள் தொகை கொண்டநமது நாட்டில் அனைவருக்கும் நல்ல செய்திகள் போய் சேருவது பிரச்சனையாக உள்ளது. அதற்கு காரணம் முஸ்லிம்களின் காடையத்தனமான ஆட்சிதான். பிறரை கொடுமை செய்யும் கலையை இந்தியாவில் விதைத்தவா்கள் அரேபிய அடிமைகள்தான்.
இந்து சமூகத்தில் சமூக கொடுமைகளை ஒழிக்க அன்றும் இன்றும் மனப்புா்வமான முயற்சிகள் நடைபெற்று வருகின்றது.அதில் பெரும் வெற்றியும் பெற்று வருகின்றது.
மூலை வாி பிரச்சனை தீா்க்கப்பட்டு வெகுகாலம் ஆகின்றது.

ஒட்டக்போரையும் முஹம்மதுவின் இறப்புக்குப்பின் நடந்த இரத்தக்களறியை மறைத்து எழுதும் ஈனத்தனங்கள் செய்யும் தாங்கள் இன்று அதை எழுதுவது பொல்லாத்தனம்.

Dr.Anburaj said...

இந்து மதத்தை டாக்டர்.அம்பேத்கர் நிராகரிக்கிறார். கடுமையாக விமர்சிக்கிறார். ஆனால் ’இந்து’ என்பது அதன் பரந்துவிரிந்த பொருளில் விராட ஹிந்துத்துவ பெயராக பயன்படுத்தப்படுவதை அவர் ஏற்கிறார். ஏற்பதுமட்டுமல்ல அதையே அவர் முன்வைக்கிறார். இவை பாபாசாகேப் அம்பேத்கரின் அடிப்படை நிலைபாடுகள்.
இனவாத கோட்பாட்டின் அடிப்படையில் இந்திய சமுதாயத்தை அணுகுவதை பாபாசாகேப் முழுமையாக நிராகரித்தார். பண்டைய இலக்கியங்களை அணுகி ஆராய்ந்து இதற்கான பதிலை விரிவாக முன்வைத்தார் டாக்டர். அம்பேத்கர். ஆரியர்கள் என்பது இன அடிப்படையிலான பாகுபாடு என்பதையும் அவர்கள் வெளியிலிருந்து வந்தவர்கள் என்பதையும் அவர் மறுத்தார். ஒரு பண்பாட்டு குழுமமாக அவர்களுக்கும் நாகர்களுக்கும் மோதல் இருந்திருக்கலாம் என அவர் கருதுகிறார். இங்கும் ஒரு விஷயத்தை பாபாசாகேப் கூறுகிறார். நாகர்-ஆரியர் என்கிற அடிப்படையில்கூட சாதிஅமைப்பு ஏற்படவில்லை. ஆரியர் பிராம்மணரென்றால் தீண்டப்படத்தகாதவர் என அழைக்கப்பட்டவர்களும் ஆரியரே. பிராம்மணர் நாகரென்றால் தீண்டப்படத்தகாதவர் என அழைக்கப்பட்டவர்களும் நாகரே. எனவே சாதியை இனகோட்பாட்டுடன் இணைக்க முடியாது என்பது அவரது நிலைபாடு. அண்மை கால மரபணு ஆராய்ச்சிகள் பாபாசாகேப் அம்பேத்கரின் கருத்து உண்மை என்பதை காட்டுகின்றன.

பாஸ்கர் நாராயண்கரே, ஜெயகர், மூஞ்சே, சாவர்க்கர் என அன்றைய முக்கிய இந்துத்துவ தலைவர்களுடன் அவருக்கு நல்லிணக்கம் இருந்தது. உபநிடதங்கள் மீது அவருக்கு பெரும்மதிப்பு இருந்தது. அத்வைத மகாவாக்கியங்களே ஜனநாயகத்தின் ஆன்மிக அடிப்படையை அளிக்க முடியும் என கருதியவர் அவர். இந்தியாவின் எல்லைகள் குறித்து அவருக்கு கவலை இருந்தது. வலுமையான ராணுவம் தேவை என்பதை முழுக்க உணர்ந்தவர் பாபாசாகேப். இஸ்லாமிய பாகிஸ்தான் மாவோயிச சீனா ஆகியவை இந்தியாவின் மீது ஆக்கிரமிப்பு எண்ணத்துடன் கண் வைப்பதை அவர் உணர்ந்திருந்தார். ஹிந்து ஒற்றுமைக்கு (இந்துசங்கதான்) சாதியம் அழிய வேண்டுமென்பதை சமரசமற்ற தீர்வாக முன்வைத்தார்.

இந்துமதத்தின் சாதியத்தை விமர்சித்த பாபாசாகேப் எந்த ஒரு கட்டத்திலும் இந்துமக்களின் பாதுகாப்பு என வரும்போது சிறிதளவு சமரசம் கூட செய்தது இல்லை. பாகிஸ்தானில் அகப்பட்டு கொண்ட இந்துக்களின் நிலையாகட்டும். காஷ்மீரில் ஹிந்து-பௌத்த-சீக்கியர்களின் வருங்காலம் ஆகட்டும் அவர் விராட இந்து சமுதாயத்தின் பாதுகாப்பு என்பதை எப்போதும் வலியுறுத்தி வந்தார்.
பெற்ற சுதந்திரத்தை பேணிக் காப்பதென்பது இந்துக்களின் பாதுகாப்புதான் என்பதை எப்போதும் வலியுறுத்தி வந்தவர் பாபாசாகேப். “ஸ்வராஜ்ஜியத்தை காப்பாற்றுவதைவிட பெற்ற சுவராஜ்ஜியத்தில் ஹிந்துக்களை பாதுகாப்பதென்பது முக்கியமானது. தங்களை காப்பாற்றும் வலு இல்லாமல் ஹிந்துக்கள் பெறும் சுதந்திரம் இறுதியில் அடிமைத்தளையாக மாறிவிடும்” என்பதைதொடர்ந்துவலியுறுத்திவந்தார்பாபாசாகேப்அம்பேத்கர்.

Dr.Anburaj said...


சமூக சீா்திருத்தத்திற்கு பிறாமணா்கள் செய்த பங்களிப்பை தொடா்ந்து இருட்டடைப்பு செய்யப்படுகிறது. பாரதியாா் ஒரு பிறாமணமன்.

Dr.Anburaj said...


முண்டா என்பவா் விடுதலை செய்யப்படடதற்கு தாங்கள் எழுதியுள்ள உரை.

இறைவா! இஸ்லாமியர்களை அநியாயமாக பழி வாங்கிக் கொண்டிருக்கும் இந்த அக்கிர கார கூட்டத்துக்கு தக்க தண்டனையை வழங்குவாயாக! எங்கள் கண்ணெதிரிலேயே இந்த அநியாயக்காரர்களை அழித்தொழிப்பாயாக!

இசுலாமிய தேச பயங்கரவாதிகள் குறித்து இப்படி என்றாவது சொன்னதுண்டா ?

இசுலாமிய தேச காடையா்களின் முகாம் களில் செக்ஸ் அடிமைகளாக அடைபட்டு அவதிப்படும் சிாியாவின் யெஷ்டி இன பெண்கள் நலன் குறித்து என்றாவது அக்கறை கொண்டதுண்டா ?

பிறமதத்தவா்களை குரான் படித்தவன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
தாங்கள் ஒரு மனிதன்தானா ? நீயும் ஒரு மனிதன்தானா ?