Followers

Friday, March 25, 2016

இஷ்ரத் ஜஹானுக்கு லஸ்கர் தொய்பாவோடு தொடர்பு கிடையாது - ஹெட்லி



என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹானை தனக்கு நேரடியாக தெரியாது. அவர் லஷ்கர் தற்கொலைப் படை தீவிரவாதி கிடையாது என லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி டேவிட் ஹெட்லி பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார்.

முன்னதாக, கடந்த மாதம் அவர் அளித்த வாக்குமூலத்தில், குஜராத் போலீஸாரால் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட இஸ்ரத் ஜஹான் என்ற இளம்பெண் லஷ்கர் இ தொய்பாவின் தற்கொலைப் படையைச் சேர்ந்த தீவிரவாதி என தெரிவித்திருந்தார்.

மும்பை தாக்குதலின் முக்கிய குற்றவாளியான பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கர் டேவிட் ஹெட்லியை (55) அமெரிக்க புலனாய்வு துறையினர் கைது செய்த னர். அங்கு அவர் மீதான வழக்கில் 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் ஹெட்லி அப்ரூவராக மாறி அமெரிக்க சிறையில் இருந்தபடி, மும்பை நீதிமன்றத் தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் சாட்சியம் அளித்து வருகிறார். மும்பை தாக்குதலுக்கு சதி தீட்டம் தீட்டியது, உளவு பார்த்தது உள்பட பல்வேறு திடுக்கிடும் தகவல்களை அவர் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், இன்று (சனிக்கிழமை) அவர் கூறும்போது, "இஷ்ரத் ஜஹானை தனக்கு நேரடியாக தெரியாது. அவர் லஷ்கர் தற்கொலைப் படை தீவிரவாதி கிடையாது" என்றார்.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
26-03-2016

வாழ வேண்டிய வயதில் அந்த இள மங்கையை கொன்ற பாவிகள் கண்டிப்பாக தண்டனையை பெற்றுக் nhகள்வார்கள்.

இன்னும் நல்லா அடிச்சு இந்த நாயை கேளுங்க சார். மும்பை தாக்குதலுக்கு அமீத்ஷா போட்டுக் கொடுத்த திட்டங்களையும் சொல்லி விடுவான்.

2 comments:

Dr.Anburaj said...


முன்னதாக, கடந்த மாதம் அவர் அளித்த வாக்குமூலத்தில், குஜராத் போலீஸாரால் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட இஸ்ரத் ஜஹான் என்ற இளம்பெண் லஷ்கர் இ தொய்பாவின் தற்கொலைப் படையைச் சேர்ந்த தீவிரவாதி என தெரிவித்திருந்தார்.

இது ஏன் முடிவான உண்மையாக இருக்கக்கூடாது ?

பணத்திற்கு நாச வேலை செய்யும் ஒரு சண்டாளன் ரகசிய முஸ்லீம் குறித்து எழுதுவது சாக்கடையில் குளிப்பதற்கு சமம்.குஜராத் காவல்துறையினா் தகுதியானவா்கள். அவர்கள் மேற்படி பாக்கிஸ்தான்உ ளவாளியைக் கொன்றது நியாயமானது.

Dr.Anburaj said...

இந்நிலையில், இன்று (சனிக்கிழமை) அவர் கூறும்போது,
"இஷ்ரத் ஜஹானை தனக்கு நேரடியாக தெரியாது.

இவன் ஒரு கிறுக்கன்.


வாழ வேண்டிய வயதில் அந்த இள மங்கையை கொன்ற பாவிகள் கண்டிப்பாக தண்டனையை பெற்றுக் nhகள்வார்கள்.

வாழ வேண்டிய பெண்ணை நாசபயங்கரவாத செயல்களில் ஈடுபடத் தூண்டி, பயிற்சி அளித்த கயவா்கள்தான் தண்டிக்கப்படுவாா்கள். சுய புத்தியை விட்டு விட்டு அரேபிய மத வரலாற்றைப் படித்து விட்டு ஆவேசம் அடைந்த இஷ்ரத் பெற்ற தண்டனை நியாயமானது.