குழந்தையின் ஞாபக சக்தி நம்மை வியக்க வைக்கிறது!
--------------------------------------------------------
குர்ஆனின் வசனங்களை தாய் ஓத அதன் அடுத்த வசனத்தை குழந்தை எந்த தடுமாற்றமும் இன்றி ஓதுகிறது. 'ஆலுமா டோலுமா' என்று நம் குழந்தைகள் சினிமா பாடல்களை எடுத்து விட்டால் ஏகத்துக்கும் சந்தோஷத்தில் குதிக்கிறோம். பின்னாளில் கல்லூரியில் படிக்கும் போது எவனோடாவது ஓடி விட்டால் கவலைபடுகிறோம். இதற்கெல்லாம் காரணம் பெற்றோர் இஸ்லாத்தை சரி வர தங்கள் குழந்தைகளுக்கு போதிக்காததே.
ஒரு மனிதனுடைய வாழ்வு இந்த உலகோடு முடிந்து விடுவதில்லை. மறு உலக வாழ்வும் உண்டு. உலக கல்வியும் மிக அவசியம்தான். ஆனால் அந்த உலக கல்வியானது மார்க்க கல்வியின் அடித்தளத்தில் அமைய வேண்டும். சிறு வயதிலேயே குழந்தையை மார்க்க பற்றோடு வளர்த்தால் எந்த காலத்திலும் வழி தவற மாட்டார்கள். இந்த தாயைப் போன்று நாமும் நம் குழந்தைகளை குர்ஆனைக் கொண்டும் அதன் அரத்தங்களை விளக்கியும் வளர்ப்போமாக!
No comments:
Post a Comment