


புளியங்குடி அருகே பரிதாபம்..!
02:03:16 புதன் புளியங்குடி அருகே உள்ள திருவேட்டநல்லூரில் மாரியப்பன் என்பவர் வேலைக்கு சரியாக செல்லாமல் இருந்ததை தட்டிக்கேட்ட தனது சொந்த மாமியார் மற்றும் மனைவி பிள்ளைகளை அதிகாலை 4 மணியளவில் தூங்கிக்கொண்டிருந்த அனைவர்மீதும் பெட்ரோல் ஊற்றி தீவைத்து விட்டு தப்பியோடிவிட்டார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் ஐந்து பேரும் புளியங்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது வேதனையில் தீக்காயம்பட்ட குழந்தைகள் கதரி அழுததை பார்த்ததும் பரிதாபமாக இருந்தது. படுகாயமடைந்த மாமியார் மருத்துவமனையில் இறந்து விட்டார் மீதமுள்ள அனைவரும் நெல்லை ஹைகிரவுண்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
தீயில் வெந்த அந்த நபர்களின் அருகில் செல்லகூட தயங்கியவர்களுக்கு மத்தியில் அவர்களை அன்போடும் பக்குவமாகவும் சேவை மனப்பான்மையோடு விரைவாக பணி செய்த இஸ்லாமிய சகோதரர்களை அங்கிருந்த அனைவரும் பாராட்டினர்.
ஜாதிவேறுபாடு எங்களுக்கு கற்றுக்கொடுக்கப்படவில்லை அனைவரும் ஒரு தாய் தந்தைக்கு பிறந்த சகோதரர்கள் என்பதை மீண்டும் கூறிக்கொள்கிறோம்.
களத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிவிரைவு ஆம்புலன்ஸ்
மற்றும் தொண்டர்கள்.
தகவல் புளியங்குடி மீரான்கனி
1 comment:
ஜாதிவேறுபாடு எங்களுக்கு கற்றுக்கொடுக்கப்படவில்லை அனைவரும் ஒரு தாய் தந்தைக்கு பிறந்த சகோதரர்கள் என்பதை மீண்டும் கூறிக்கொள்கிறோம்.
நன்றி
அரேபிய வல்லாதிக்க கருத்துக்கள் எடுபடாது என்று துணிந்து தூர போட்டு விட்டீர்கள்.நன்றி. தொண்டுகள் சிறக்கட்டும். அன்பு மலரட்டும்.
Post a Comment