'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Saturday, March 05, 2016
கன்ஹயாவின் நாக்கை அறுப்பவருக்கு ஐந்து லட்சமாம்!
ஜாமீனில் வெளிவந்துள்ள கண்ணய்யாவை சுட்டுக் கொல்வோருக்கு ரூ. 11 லட்சம் வெகுமதி என்று அறிவித்து நாடாளுமன்ற வளாகத்தின் அருகில், ரபிமார்க் பகுதியில் இருக்கும் டெல்லி பத்திரிகையாளர் மன்ற சுவரில் 3 சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
‘வந்தே மாதரம்’ என்ற தலைப்பில் உள்ள அந்த சுவரொட்டியில் தேசத் துரோகி கண்ணய்யா குமாரை சுட்டுக் கொல்வோருக்கு பூர்வாஞ்சல் சேனா சார்பில் ரூ. 11 லட்சம் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் இதற்கு கீழே, ஆதர்ஷ் சர்மா, பூர்வாஞ்சலின் மகன், பூர்வாஞ்சல் சேனா என்று குறிப்பிட்டு மொபைல் எண்ணும் தரப்பட்டுள்ளது. இது குறித்து டெல்லி போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
பாஜக நிர்வாகி பதவி பறிப்பு
முன்னதாக, கண்ணய்யாவின் நாக்கை அறுத்து எடுத்து வருவோருக்கு ரூ. 5 லட்சம் அளிப்பதாக குல்தீப் வார்ஷ்னே என்பவர் அறிவித்தார். மேற்கு உ.பி.யின் பதாயூ மாவட்ட பாரதிய ஜனதா யுவமோர்ச்சா (இளைஞர் அணி) தலைவராக இவர் பதவி வகித்து வந்தார். குல்தீப் அறிவிப்பால் சர்ச்சை எழுந்ததை அடுத்து அவரை 6 ஆண்டுகளுக்கு தலைவர் பதவியில் இருந்து பாஜக நீக்கியுள்ளது.
தேச பக்தி போர்வையில் இது போன்ற கிறுக்கன்களுக்கு கொலை மிரட்டல்கள் விட எப்படி தைரியம் வருகிறது. நமக்கு மேலே மோடியும், அமீத்ஷாவும் அமர்ந்துள்ளார்கள். நமக்கு ஏதும் ஆகாமல் பார்த்துக் கொள்வார்கள் என்ற தைரியமே இவனைப் போன்றவர்களைப் பேச வைக்கிறது.
இந்த நாடு தற்போது எமர்ஜென்ஸியை விட மோசமான நிலைக்கு போய்க் கொண்டுள்ளது. அந்த பெருமை அரை டவுசர்களான ஆர்எஸ்எஸூக்கே செல்லும். இவர்களின் டேஷ் பக்தி இதுதான்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
முன்னதாக, கண்ணய்யாவின் நாக்கை அறுத்து எடுத்து வருவோருக்கு ரூ. 5 லட்சம் அளிப்பதாக குல்தீப் வார்ஷ்னே என்பவர் அறிவித்தார். மேற்கு உ.பி.யின் பதாயூ மாவட்ட பாரதிய ஜனதா யுவமோர்ச்சா (இளைஞர் அணி) தலைவராக இவர் பதவி வகித்து வந்தார். குல்தீப் அறிவிப்பால் சர்ச்சை எழுந்ததை அடுத்து அவரை 6 ஆண்டுகளுக்கு தலைவர் பதவியில் இருந்து பாஜக நீக்கியுள்ளது.
தேச பக்தி போர்வையில் இது போன்ற கிறுக்கன்களுக்கு கொலை மிரட்டல்கள் விட எப்படி தைரியம் வருகிறது. நமக்கு மேலே மோடியும், அமீத்ஷாவும் அமர்ந்துள்ளார்கள். நமக்கு ஏதும் ஆகாமல் பார்த்துக் கொள்வார்கள் என்ற தைரியமே இவனைப் போன்றவர்களைப் பேச வைக்கிறது.
------------------------------------------------------------------------------
முறைகேடாக பேசுபவா்களுக்கு தண்டனை வழங்கி விட்டாா்கள்.மாண்புமிகு நமது பிரதமா் திரு.நரேந்திர மோடியும் அவர்களும் திரு.அமிா்ஷா அவர்களையும் நாம் மனமாரப் பாராட்ட வேண்டும். பொது நிா்வாகத்திற்கு சிறந்த உதாரணம். எனது பாராட்டுக்கள்.
Post a Comment