Followers

Wednesday, March 30, 2016

'ஆண்ட பரம்பரை' - என்று சாதித் திமிர் பிடித்தவர்களுக்காக!

இணையத்தில் பலமுறை சாதி பெருமை பேசக் கூடியவர்கள் 'நாங்கள் ஆண்ட பரம்பரை' 'நீங்கள் பேண்ட பரம்பரை' என்று பெருமை பேசி வருவதை பார்த்துள்ளோம். மொகலாயர்களும் ஆங்கிலேயர்களும் இந்த நாட்டுக்கு வருவதற்கு முன் தமிழகத்தின் பல பகுதிகளில் வறுமை தாண்டவமாடியது. தீண்டாமை கொடுமை தலைவிரித்தாடியது. சேர சோழ பாண்டிய மன்னர்கள் ஒருவரையொருவர் போரிட்டுக் கொண்டு காடு கழனிகளையெல்லாம் போரில் அழித்து வந்தனர். மதத்தின் பெயரால் தீண்டாமை சகல மட்டத்திலும் கடைபிடிக்கப்பட்டது.

மார்புக்கு வரி, மேலாடைக்கு வரி, தொட்டால் தீட்டு, இரட்டைக் குவளை முறை, என்று தலித்கள் ஒரு பக்கம் துன்புறுத்தப்பட்டனர். மற்றொரு பக்கம் சைவ மதத்தவர் சமணர்களையும் பவுத்தர்களையும் வன்முறையால் மதம் மாற்றிக் கொண்டிருந்தனர். இந்த கால கட்டத்தில்தான் மொகலாயர்கள் ஆட்சியை பிடிக்கின்றனர். கிட்டத்தட்ட 1000 ஆண்டுகள் அகண்ட பாரதத்தை ஆள்வது அதுவும் அந்த காலத்தில் என்பது அவ்வளவு லேசான காரியம் அல்ல. இதற்கு முன்னால் நடந்த இந்துக்களின் ஆட்சியை விட இஸ்லாமியரின் ஆட்சி பெரும்பான்மை மக்களுக்கு அரணாக இருந்ததின் காரணத்தினால்தான் இத்தனை ஆண்டு காலம் ஆட்சி செய்ய முடிந்தது. அதன் பிறகு வந்த வெள்ளையர்கள் நமது செல்வங்களை இங்கிலாந்துக்கு கொண்டு சென்றாலும் நமது நாட்டுக்கும் பல நல்லதுகள் செய்து வந்துள்ளனர்.

எனவே ஆண்ட பெருமை பேசிக் கொண்டு சில சாதி வெறியர்கள் தங்களின் ஆளுமையை பறை சாற்ற வேண்டாம். மக்களை இவ்வளவு வறுமையில் வைத்து ஆண்டு விட்டு அதனை பெருமையாக வேறு பேசித் திரிய வேண்டாம். இது நாம் தமிழர் கட்சிக்கும் பொருந்தும்.

1 comment:

Dr.Anburaj said...

இந்துக்களின் ஆட்சியை விட இஸ்லாமியரின் ஆட்சி பெரும்பான்மை மக்களுக்கு அரணாக இருந்ததின் காரணத்தினால்தான் இத்தனை ஆண்டு காலம் ஆட்சி செய்ய முடிந்தது.

பச்சைப் பொய்.
இயல்பாகவே இந்துக்கள் ஆன்மிக சிந்தனை கொண்டு லௌகிய வாழ்வின் முக்கியத்துவத்தை குறித்து அரசியல் சிந்தனையற்றவா்களாக முறையான சமய கல்வி இல்லாதவலா்களாக வாழந்து வந்தாா்கள்.அரேபிய வல்லாதிக்க காடையா்கள் எப்போழுதும் தனது எதிாிகளை மிகக் கொடூரமாககொலை செய்வதில் வல்லவா்கள்.அவர்களது தலைவா் முஹம்மதுவும் அப்படியே நடந்து கொண்டாா். எனவேதான்ப யந்து போய் அரேபிய மத காடையா்களின் ஆட்சிக்கு இந்துக்கள் அடிபணிந்து வாழ்ந்தாா்கள். ஆரம்பத்தில் சில நன்மைகள் இருந்திருக்கலாம்.அது பொருட்டல்ல. ஒரு போதும் அரேபிய காடையா்கள் நிம்மதியாக இந்தியாவை ஆளவில்லை. அரேபிய காடையா்களின் ஆட்சிக்கு வீர இந்துக்களால் சதா தொல்லைகள் இருந்து கொண்டே இருந்தது. அரேபிய காடையா்களின் கொடுங்கோல் ஆட்சிக்கு சாியான ஆப்பை பிாிட்டிஷ் சாம்ராஜ்ியம் வைத்தது. அவனுக்கு அவன் பரவாயில்ிலை போலிருக்கின்றது என்று எண்ணி இந்துக்ள் முஸ்லீம் ஆட்சியை வீழ்த்த வெள்ளைக்காரன் பக்கம் சாய்ந்தாா்கள். பின் அந்த பிசாசிடமிருந்து தப்ப கடும் போராட்டட் நடத்த்ப்பட்டது. ஆண்ட பரம்பரை என்று இன்றும் இறுமாந்து வாழந்து வருபவா்கள் முஸ்லீம்கள்தான்.படத்தில் உள்ள அபலங்களுக்கு அரேபிய காடையா்களின் கொடூஙகோல் ஆட்சிதான் காரணம்.


1000 ஆண்டுகள் இந்துஸ்தான் அரேபிய ,பிாிடடிஷ்காடையா்களால் நாசம் செய்யப்பட்டது என்பதுதான் உண்மை.இதில் உள்ளுா் சிறு மன்னா்களையும் சோ்த்துக் கொள்ள வேண்டும்.
1947 க்குப் பிற்குதான் இந்துக்கள் தங்களுக்கெனஒரு அரசை இந்தியாவில் உருவாக்கியுள்ளாா்கள்.அதற்கும்பாக்கிஸ்தான் ஒரு தொல்லையாக உள்ளது.சமய சாா்பின்மை என்பது இந்துக்களக்கு விரோதமான கொள்கையைபின்பற்றவுது என்ற கொள்கை பின்பற்றப்படுவதால் இந்து சமூக பிரச்சனைகளுக்கு தீா்வு காண்பதில்சுணக்கம் ஏற்படுகின்றது.