நேற்று வரை பார்பனர்கள் கூலி வேலை செய்து பார்த்ததுண்டா? வயலில் இறங்கி பார்த்ததுண்டா? என்று கேட்டு விட்டு தமிழன் முன்னேறாமல் இருக்க பார்பனர்களின் வர்ணாசிரமம் என்று சொல்லி வந்தார். இடையில் இந்துத்வாவாதிகளின் மிரட்டலோ அல்லது பிஜேபியின் பண முடிப்போ என்ன காரணமோ தெரியவில்லை. இன்று பார்பனர்கள் தமிழர்களாகி விட்டனர் சீமானின் பார்வையில்.
இரண்டு நாள் முன்பு நடந்த தந்தி பேட்டியில் கூட பாண்டே 'தமிழனின் தாழ்வுக்கு வர்ணாசிரமம் என்கிறீர்கள். அதனை போதித்தது பார்பனர்கள்தானே. இன்று அவர்களை தமிழர்கள் என்கிறீர்கள். முன்பு இருந்த நிலைப்பாட்டில் இருந்து மாறி விட்டீர்களே' என்று கிடுக்கிப் பிடி போட்டபோது 'தம்பி... நான் சொல்றதை நீங்க புரிஞசுக்கல்ல..' என்று தத்து பித்து என்று உளர ஆரம்பிக்கிறார். நாளுக்கொரு நிலைப்பாட்டை எடுக்கும் சீமானுக்கு பின்னால் நிற்கும் அப்பாவி இளைஞர்களை நினைத்துதான் பாவமாக இருக்கிறது.
சுப்ரமணியம் சுவாமியைப் போல சீமானையும் ஒரு அரசியல் கோமாளியாக பார்த்து விட்டு போக வேண்டியதுதான். வேறு வழியில்லை
1 comment:
சீமானின் கருத்துககள் அவரது சொந்த முடிவில் வெளிப்படுகின்றது.இதற்கு பிஜெபி ஆா் எஸ்எஸ் என்று எவரும் காரணம் அல்ல.
சீமானுக்கு அள்ளிக் கொடுக்க பணம் ஒன்றும் ஆா்எஸ்எஸ காாியாலயத்தில் கொட்டிக் கிடக்கவில்லை.
ஆவேசமானப் பேசுகின்றவா்களால் என்றும் தீமைதான் விளையும். உங்கள் மனதில் ஆழ்பகுதி வரையிலும் நாடி நரம்புகளிலுல் சாந்தம் அமைதி நிலவும் போது உங்களின் செயல் உன்னதமாக இருக்கும்.உத்தமமான பயன்கள் விளையும். ஆகவே மனச் சாந்தியை போற்றுங்கள். கைகொள்ளங்கள். ஆவேசம் அழிவையே தரும். .....முஹம்மதுவின் ஆவேசம் உலகில் பல பகுதிகளில் இரத்த ஆறு ஒட காரணமாக உள்ளது.ஆகவே நல்லது செய்யக்கூட ஆவேசம் கூடாது என்கிறாா் சுவாமி விவேகானந்தா்.
சீமான் ஆவேசம் கொண்டவராக பொது மேடைகளில் காட்டிக் கொள்கின்றாா். போதிய உலக அறிவு இல்லாத விடலைகளின் கைதட்டலைப் பெற ஏதேதோ பேசுகின்றாா்.
தள்ளுங்கள் சுவனப்பிாியன்.சீமானும் தங்களைப் போன்றவா்தான்.தாங்கள் அரேபிய கலாச்சாரத்திற்கு உழைக்கின்றீா்கள். சீமான் தமிழ் பண்பாட்டிற்கு உழைக்கின்றாா்கள்.
இருவரும் பிறரை வெறுக்கின்றீாகள்.
Post a Comment