Followers

Sunday, March 13, 2016

ஆண்டியும் அரசனும் ஒன்றுதான் இங்கு!

ஆண்டியும் அரசனும் ஒன்றுதான் இங்கு!



இன்று மதியம் நான் பணி புரியும் அலுவலகத்துக்கு சற்று தொலைவில் உள்ள பள்ளிக்கு தொழுகைக்கு சென்றேன். அங்கு ஒரு அழகிய காட்சியைக் கண்டேன். சவுதி அரேபியாவின் துப்புறவு பணியில் ஈடுபடும் நபர்கள் மஞ்சள் உடையில் வலம் வருவதை நாம் அறிவோம். அவ்வாறு மஞ்சள் உடையில் ஐந்து பங்களா தேசத்தவர் எந்த அசூசையும் இன்றி தோளோடு தோள் உரசி மற்ற முஸ்லிம்களோடு ஒன்றாக தொழுத காட்சியை கண்டேன். உடன் எனது செல் போனை எடுத்து ஒரு க்ளிக் செய்து கொண்டேன். அங்கு தொழ வந்த எந்த நபரும் அவர்களை தடுக்கவில்லை.

இதே நிலையை தமிழகத்தில் நினைத்து பார்த்தேன். ஒரே மதம் என்கிறோம்: ஆனால் சாதிகளின் அடிப்படையில் சிலருக்கு மாத்திரம் சலுகைகளை கொடுக்கிறோம். துப்புறவு தொழிலாளர்களை கோவிலுக்குள் அனுமதிப்பதில்லை. தலித்களை அனுமதிப்பதில்லை. பெரியார், அம்பேத்கார், காந்தி, பாரதியார் என்று எவ்வளவோ தலைவர்கள் முயன்றும் இன்றும் எந்த மாற்றத்தையும் கொண்டு வந்து விட முடியவில்லை. ஆனால் ஏக இறைவனை ஏற்றுக் கொண்டு முகமது நபியை இறைத் தூதராகவும் ஏற்றுக் கொண்ட ஒருவருக்கு இது சாத்தியப்படுகிறது. நபிகள் நாயகம் கொண்டு வந்த மிகப் பெரிய புரட்சியானது எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் உலகம் முழுக்க தினம் ஐந்து வேளை நடந்து கொண்டுள்ளது.

ஆனால் கர்ப்பப் பை சுதந்திரம் வேண்டும் என்று கேட்டு பலருடனும் தனது படுக்கையை பகிர்ந்து கொண்ட தஸ்லிமா நஸ்ரின் ஐந்து வேளை தொழுகையை ஒரு வேளையாக குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். உலக முஸ்லிம்களில் யாராவது இந்த விபசாரியிடம் சென்று கோரிக்கை வைத்தார்களா? இந்துத்வாவாதிகளிடம் பாராட்டு பெற வேண்டும். இதன் மூலம் பொருளாதார உதவிகள் பெற வேண்டும். என்ற மலிவான காரணத்துக்காக தற்போது இது பொன்ற கருத்துக்களை உதிர்க்க ஆரம்பித்துள்ளார்.

இன்று உலக அளவில் இஸ்லாமியரிடத்தில் தீண்டாமை ஒழிக்கப்பட்டதன் முக்கிய காரணமே இந்த ஐவேளை தொழுகைதான். ஐந்து வேளையும் பள்ளிக்குச் சென்று தொழ வேண்டும். தொழும் போது இடைவெளி விடாது தோளோடு தோள் ஒட்டி நிற்க வேண்டும். இவ்வாறு செய்யா விட்டால் உனக்கு இறப்புக்கு பின்னால் தண்டனை உண்டு என்று இஸ்லாம் இதனை கட்டாய கடமையாக்குகிறது. எனவே தான் எந்த வேளை இருந்தாலும் அனைத்தையும் தூரமாக்கி விட்டு பள்ளி வாசலை நோக்கி ஓடுகின்றனர் முஸ்லிம்கள். அங்கு சென்று யாராவது விலகி நின்றால் தனது கையால் பிடித்து இழுத்து தோளோடு தோள் சேர்த்து நிறுத்திக் கொள்வார்கள். இடைவெளி விட்டு தொழுதால் இருவரின் தொழுகையும் பாழாகி விடும்.

இதே போன்று ஒரு நாளுக்கு ஐந்து முறை ஒருவன் பயிற்சி எடுத்தால் அவனிடம் தீண்டாமை இருக்குமா? மிக சாதாரணமான ஒரு சட்டத்தின் மூலம் மிகப் பெரும் புரட்சியை ஒரு நாளுக்கு ஐந்து முறை நாங்கள் செய்து வருகிறோம். இத்தகைய ஒரு அழகிய ஏற்பாட்டை ஏற்படுத்திக் கொடுத்து தீண்டாமையை ஒழித்த அந்த ஏக இறைவனுக்கே புகழனைத்தும்.

3 comments:

Dr.Anburaj said...


ஒரு இந்துவின் தியாகம்.
இந்து குடும்பத்தின் தியாகம் இதுபோன்ற தியாகத்தை
முஸ்லீம்களிடம் காண முடியுமா ?காணக் கிடைக்கவில்லை. இருந்தால் தொிவிக்கலாம்.

கோவையை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 20). சாலை விபத்தில் படுகாயம் அடைந்த இவர் கோவை பீளமேடு பகுதியில் உள்ள கே.எம்.சி.எச். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் ரமேஷ் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவருடைய உடல் உறுப்புகளை தானம் செய்ய உறவினர்கள் முன்வந்தனர்.

இதன்படி சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 14 வயது சிறுவனுக்கு பொருத்துவதற்கு இதயமும், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 33 வயது நபருக்கு பொருத்துவதற்கு கணையமும் தானமாக கொடுக்க முன்வந்தனர்.
சிறுவனுக்கு இதயம் நேற்று கோவையில் இருந்து புறப்பட்டு தனி விமானம் மூலம் இதயம் 10.35 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. அங்கிருந்து 10.37 மணிக்கு புறப்பட்டு 15 நிமிடத்தில் அடையாறு தனியார் மருத்துவமனைக்கு இதயம் பத்திரமாக கொண்டுவரப்பட்டது.

இதற்காக விமான நிலையம் முதல் அடையாறு மருத்துவமனை வரை உள்ள சிக்னல்கள் தடையில்லாமல் வாகனம் செல்லும் வகையில் (கிரீன் காரிடர்) மாற்றப்பட்டிருந்தது. இதையடுத்து உக்ரைன் நாட்டை சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு இதயம் அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது.
கணையம்

ரமேஷ் உடலில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட கணையமும் விமானம் மூலம் கோவையில் இருந்து புறப்பட்டு, பிற்பகல் 1.27 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. பின்னர் அங்கிருந்து 1.47 மணிக்கு புறப்பட்டு 1 மணி 59 நிமிடம் 40 நொடிகளுக்கு அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது.

சென்னை விமான நிலையம் முதல் ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனை வரை உள்ள 18 கி.மீ. தூரத்தை ஆம்புலன்ஸ் டிரைவர் சிவ சங்கரன் சரியாக 12 நிமிடம் 40 நொடிகளில் கடந்து கொண்டுவந்தார். இதையடுத்து டாக்டர் அனில் வைத்யா தலைமையில் இளங்குமரன் உள்ளிட்ட டாக்டர்கள் குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் கணையத்தை பொருத்தினர்.
இந்தியாவிலேயே முதல் முறையாக..

இதுகுறித்து டாக்டர் இளங்குமரன் கூறுகையில், பொதுவாக கணையம் சிறுநீரகத்துடன் சேர்ந்து உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து பொருத்தப்பட்டு வந்தது. உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் கணையம் மட்டும் பொருத்துவது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறையாகும் என்றார்.
12:40 AM

Dr.Anburaj said...

முஸ்லீம்கள் பின்பற்றும் தீண்டாமைதான் காபீா் என்று சொல்லிக் கழுத்தறுப்பது.

இன்றும் ஷியா -சன்னி-அஹமதியா சண்டையில் இரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்கின்றது.

இஸ்லாத்தின் பிறப்பிடத்தில் என்றாவது சமாதானம் அமைதி இருந்ததுண்டா ?

தொளுகையில் சமத்துவம் என்பது ஒரு போலியான நடிப்பு. தள்ளுபடி செய்ய வேண்டும்.

Dr.Anburaj said...

முஸ்லீம்கள் பின்பற்றும் தீண்டாமைதான் காபீா் என்று சொல்லிக் கழுத்தறுப்பது.

இன்றும் ஷியா -சன்னி-அஹமதியா சண்டையில் இரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்கின்றது.

இஸ்லாத்தின் பிறப்பிடத்தில் என்றாவது சமாதானம் அமைதி இருந்ததுண்டா ?

தொளுகையில் சமத்துவம் என்பது ஒரு போலியான நடிப்பு. தள்ளுபடி செய்ய வேண்டும்.