
உடுமலைப் பேட்டை சாதி வெறித் தாக்குதல் சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ள நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே, தலித்தை காதலித்தார் என்பதற்காக பிரியங்கா என்ற பெண், கடுமையாக தாக்கப்பட்டுள்ள செய்தி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. திவிக மதுரை மாவட்ட செயலாளர் மணிகண்டன் மா.பா தன்னுடைய முகநூல் பதிவில் இவ்வாறு பகிர்ந்துள்ளார்.
ஆணவ படுகொலை செய்யப்படவிருக்கும் பெண்ணின் உயிரை காக்க உதவுங்கள் …….. புதுக்கோட்டை ஆலங்குடி பகுதி பிரியங்கா – வினோத் இருவரும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். வினோத் தலித் , இதையறிந்த பிரியங்காவின் பெற்றோர் நேற்று முழுதும் பிரியங்காவை கட்டிவைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் பிரியங்காவிற்கு தலை மற்றும் கை கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை பிரியங்கா ரகசியமாக இந்த செய்தியை வினோத்திற்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.. அவரின் கிராமம் ஜாதி ஆதிக்கம் நிறைந்த பகுதி எங்களால் அங்கு நுழைய கூட முடியவில்லை. பிரியங்கா அவரின் உறவினர்களால் கொலை செய்யப்படலாம். அவரை காப்பாற்ற முடியாத கையறு நிலையில் வெட்கித் தலை குனிகிறோம்….ஆகையால் புதுக்கோட்டை பகுதி தோழர்களே ,நண்பர்களே , மனிதநேயமிக்கோரே வாருங்கள். உதவுங்கள். ………..
மா.பா.மணிகண்டன் 9600 408641 , கார்த்திகேயன் 97888 40257…..
No comments:
Post a Comment