


ஏழைகளின் வரிப்பணம் 7000 கோடியை ஏப்பம் விட்டு இன்று பல பெண்களோடு உல்லாவமாக உலா வருகிறான் விஜய் மல்லையா. அவனை பிடிக்க இந்த அரசுக்கு தெம்பில்லை. திராணியில்லை.
இரண்டு இலட்சம் கல்வி கடன் வாங்கி அதில் ஒரு இலட்சத்தை ஒழுக்கமாக செலுத்தி மீதமுள்ள தொகைக்கு அவகாசம் கேட்ட நீலகிரி கிருஷ்ணன் மற்றும் பொறியியல் பயிலும் அவரது மகளின் புகைப்படத்தை பேனர் அடித்து முச்சந்தியில் வைத்து கேவலப்படுத்தியுள்ளது வங்கி நிர்வாகம்........
பாப்பாநாடு விவசாயி...... பாலன் தனியார் நிதி நிறுவனத்தில் ( கந்து வட்டிக் கடை) வாங்கிய டிராக்டருக்கு 80% கடனை வட்டியுடன் செலுத்தி மீத தொகைக்கு சற்று அவகாசம் கேட்டதால்
வட்டிக்கடை குண்டர்களுடன் காவல் துறையும் சேர்ந்து அடித்து உதைத்துளனர்......
வசதி படைத்தவனுக்கு ஒரு சட்டம், வசதி இல்லாதவனுக்கு ஒரு சட்டம் என்பது இந்த நாட்டின் எழுதப்படாத விதியாகி விட்டது.
வந்தே மாதரம் பாடாததற்கு பொங்கும் இந்துத்வா.....
மாட்டுக் கறி சாப்பிட்டால் கொல்லும் இந்துத்வா....
'பாரத் மாதா கீ ஜே' என்று கூவும் இந்துத்வா...
விஜய் மல்லையாவுக்கு எதிராக ஏன் கிளம்பவில்லை?
உண்மையான தேச பக்தி உடையவன் இது போன்ற கொடுமைகளுக்கு எதிராக தனது பலத்தை காட்ட முயற்சிப்பான். போலியான தேச பக்தி வேடம் போடும் இந்துத்வாக்களிடம் இதனை நாம் எதிர்பார்க்க முடியாது.
1 comment:
இது நமது நாட்டின் பொது பிரச்சனை
Post a Comment