
ஆயுஷ் துறையில் யோகா பயிற்றுநர்களாக, ஆசிரியர்களாக முஸ்லிம்களை வேலைக்கு எடுக்ககக்கூடாது என்று மோடி தலைமையிலான மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.
ஆயுஷ் துறை (AYUSH – Ayurveda, Yoga and Naturopathy, Unani, Siddha and Homoeopathy Mission) என்பது ஆயுர்வேதா, சித்தா, யோகா, ஹோமியோபதி ஆகிய மருத்துவத்துறைகளை உள்ளடக்கியது. இத்துறையில் முஸ்லிம்களை வேலைக்கு எடுப்பதில்லை மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது மத்திய அரசின் கொள்கை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகள்
ஆயுஷ் துறையிடம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில கேள்விகள் கேட்கப்பட்டன. அதில், உலக யோகா தினம் 2015 அன்று, யோகா பயிற்சி அளிப்பதற்காக எத்தனை முஸ்லிம்கள் விண்ணப்பித்திருந்தனர் என்றும், இவை தவிர யோகா ஆசிரியர் பணிக்கு எத்தனை முஸ்லிம்கள் விண்ணப்பித்திருந்தனர் என்றும் கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்துள்ள ஆயுஷ் துறை, முஸ்லிம்கள் 711 பேர் யோகா பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பித்திருந்ததாகவும், இதுவரை யோகா ஆசிரியர் பணிக்கு முஸ்லிம்கள் 3841 பேர் விண்ணப்பித்திருந்ததாகவும் தெரிவித்தது. இதில் யாரையும் தேர்வு செய்யவில்லை என்றும், இது மத்திய அரசின் கொள்கை என்றும் ஆயுஷ் துறை விளக்கம் அளித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் எட்டாம் தேதி அனுப்பிய பதில் ஒன்றில் இத்தகவலை தெரிவித்துள்ளது. ஆயுஷ் துறையின் பதிலை இங்கே பாருங்கள்:


கடந்த ஆண்டு, டெல்லி ராஜபாதையில் பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சிக்கு மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது. பிரதமர் மோடி கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் துணைக் குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி அழைக்கப்படவில்லை.
இந்த விவகாரம் சர்ச்சையை எழுப்பியதை அடுத்து, ஹமீது அன்சாரிக்கு உடல்நிலை சரியில்லாததால் அவர் கலந்துகொள்ளவில்லை என பா.ஜ.கவின் தேசியச் செயலாளர் ராம் மாதவ் தெரிவித்தார். ஆனால் துணைக்குடியரசுத் தலைவர் அலுவலகம், அன்சாரிக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறியிருப்பது தவறு என்றும், யோகா நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்காததால்தான் ஹமீது அன்சாரி கலந்துகொள்ளவில்லை என்றும் விளக்கம் அளித்தது.
http://ippodhu.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/
3 comments:
சற்று சங்கடமான கேள்ளி தான். தங்கள் கருத்துபடி
தாங்கள் யோகாவை ஒப்புக் கொள்ளவில்லை.முழுமையான நமப்பிக்கையின்றி அரசு பணம் தருகின்றது என்ற ஒரே காரணத்திற்காக யோகா ஆசிரியராக முஸ்லீம்கள் சேருவது நியாயமல்ல. இருப்பினும் அரசின் இந்த முடிவு மறுபாிசீலனை செய்ய வேண்டும். ஒரு குறையை கண்டு படித்தவருக்கு எனது பாராட்டுக்கள்.
யோகா ஆசிரியா்களாக முஸ்லீம்களை நியமிப்பது நியாயமானது.கடந்த கால தவறுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். முஸ்லீம்களின் மன வருத்தம் போக்க வேண்டும்.
மதசாா்பின்மை என்று ரொம்பவும் அலட்டிக் கொள்ளும் காங்கிரஸ் திமுக வைகோ போன்றவா்களுக்கு இந்த தகவல் தொியுமா ? அவர்கள் வாய் ஏன் முடிக்கிடக்கின்றது.தொிந்தால் வேட்டி அவிழ்ந்து விழுந்தது கூட தொியாமல் குதி குதி என்று குதித்து விடுவாா்கள்.
Post a Comment