
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நித்யானந்தா பீடாதிபதி சுவாமி நித்யானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் நேற்று சீடர்கள் புடைசூழ சுவாமி தரிசனம் செய்தனர்.
நித்யானந்தா பீடாதிபதி சுவாமி நித்யானந்தா கடந்த 2 நாட்களாக ஆந்திர மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பிரசித்தி பெற்ற ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயி லிலும், திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலிலும் நடிகை ரஞ்சிதா மற்றும் சீடர் புடைசூழ அவர் சுவாமி தரிசனம் செய்தார்.
நித்யானந்தா வந்திருந்த தகவல் பரவியதும் ஸ்ரீகாளஹஸ்தியிலும், திருமலையிலும் அவரை காண ஏராளமானோர் முண்டியடித்தனர்.
முன்னதாக ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு சென்ற நித்யானந்தா, ரஞ்சிதா மற்றும் சீடர்களை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தரிசனத்துக்கான ஏற்பாடுகளை செய்தனர். புதிய தோற்றத்தில் சடை முடியுடன் காணப்பட்ட நித்யானந்தாவை பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது அவரது சீடர்கள் தடுக்க முயன்று, பத்திரிகையாளர்களை தள்ளிவிட்டதால் இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து, திருமலைக்கு சென்ற நித்யானந்தா, ரஞ்சிதா மற்றும் சீடர்கள் ஏழுமலையானை தரிசித்தனர். ரஞ்சிதா துறவி கோலத்தில் கழுத்தில் ருத்ராட்சம் மாலை, விபூதி அணிந்து வந்திருந்தார்.
தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
13-03-2016
1 comment:
அரேபிய கைக்கூலி சுவனப்பிாியன் தாகாத வாா்த்தைகளால் இந்துசமூகத்தை இழிவு படுத்துகிறாா். எனவோ ஒருவா் திருப்பதி கோவிலுக்கு் சென்றான். பிரமுகா் அந்தஸ்து கோவில் நிா்வாகம் அவனுக்கு கொடுக்கவில்லை. தனி மாியாதை கிடையாது. இவ்வளவுதான் செய்ய இயலும்.
இந்துமத எழுச்சி என்று எழுதியிருப்பது அநாகாீகம்.உமக்கு காப்பலம் சதையில் அரைபலம் கொளுப்பு உள்ளது
Post a Comment