

5 ஏக்கர் பந்தல் - அதாவது 2 லட்சம் சதுர அடி - வாகன நிறுத்தம் - 10 ஏக்கர் - மேடை 80 ஜ் 40 = 2400 சதுர அடி - மேடையின் பின்புறம் ஓய்வறை 2 - 40 ஜ் 20 = 800 சதுர அடி
கண்காட்சி அரங்கம்: 10 ஜ் 10 - பத்து அரங்குகள் ஒவ்வொன்றிலும் பல்வேறு சிறப்புக் கண்காட்சி அம்சங்கள்.
கழிவறை பெண்களுக்கு - 50 - ஆண்களுக்கு 100 - குளியல் அறை ஆண்களுக்கு 30, பெண்களுக்கு 20 தனித்தனியே.
28 ஸ்டால்கள்: உணவு, தேநீர், குளிர்பானம், இளநீர், புத்தகக் கடைகள் மற்றும் பல இடம் பெறும். அலுவலகம் 60 ஜ் 40 = 2400 சதுர அடிகள். (பெரியார் உலகப் பணியின் நீட்சியாக இது நிரந்தரத் தன்மையுடன் உருவாக்கப்பட்டுள்ளது).
தண்ணீர் வசதி நாள் ஒன்றுக்கு 10 லட்சம் லிட்டர் (3 மின் மோட்டார்கள் இணைப்பு) மின் விளக்குகள் 2000 தீயணைப்பு வாகனம் - 3; எல்.சி.டி. - திரை - 12.
இவ்வளவும் என்ன என்று கேட்கிறீர்களா? சிறுகனூரில் இன்றும் நாளையும் (சனி, ஞாயிறு) திருச்சி - பெரியார் உலகம் சிறுகனூரில் நடத்தவிருக்கும் திராவிடர் கழக மாநில மாநாடு, சமூகநீதி மாநாடுகளுக்கான ஏற்பாடாகும்.
தந்தை பெரியாரிடம் கடவுள் சம்பந்தமாக நமக்கு மாற்றுக் கருத்து இருந்தாலும் தமிழகத்தில் பார்பனியத்தை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்ததில் பெரியாரின் பணி மகத்தானது. மாட்டுக் கறி, பாரத் மாதா, வந்தே மாதரம் ராமர் கோவில் என்ற போலி தேசப் பற்று வட நாட்டில் போணியானது போல் தமிழகத்தில் இந்துத்வாவுக்கு கை கொடுக்காமல் போனதில் பெரியாரின் பங்கும் உண்டு.
இது போன்ற மாநாடுகளுக்கு இஸ்லாமியர்களும் சென்று சமூக நீதிக்கு பெரியார் ஆற்றிய பணியை கண்டு வர வேண்டும். பார்பனிய ஆதிக்கம் இருந்த அந்த நாளிலேயே 'இன இழிவு நீங்க இஸ்லாமே மருந்து' என்று சொன்னவர் பெரியார். 80 சதவீதம் இஸ்லாமியராகவே வாழ்ந்து மரித்தவர். வாய்ப்பு வசதியுடைவர்கள் இம் மாநாட்டுக்கு சென்று வரவும்.
2 comments:
திராவிடா் கழகம் நடத்தும் இம்மாநாடு பஞ்சாயத்து அளவில் தமிழ்நாட்டில்
தீண்டாமைகொடுமை செய்யும் சாதியை அடையாளம் கண்டு தீண்டாமை கடும் போக்கு சமூக
அநீதியை பட்டியல் போட்டு பிரச்சனை தீா்க்க ஆவன செய்யும் என்று எதிா்பாா்க்கின்றேன்.
மதுரை சிவகங்கை தஞசை மாவட்டங்களில் உ்ள தேவா் சாதி ஆதிக்கத்தை எதிா்க்கும்
விதமான என்ன செய்ய போகின்றாா்கள் ?
கடவுள் இல்லை
கடவுள் இல்லை
கடவுள் இல்லவே இல்லை
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்
கடவுளைப் பரப்பினவன் அயோக்கியன்
வணங்குகிறவன் காட்டுமிராண்டி
Post a Comment