Followers

Thursday, March 10, 2016

தண்ணீர் தர மறுத்ததால் தலித் சிறுவன் கிணற்றில் விழுந்து இறப்பு!



இந்துத்வா பிஜேபி ஆட்சி செய்து வரும் மத்திய பிரதேசத்தின் தாமோ நகரின் கிராமம் காமாரியா களன். இங்குள்ள பள்ளியில் தலித் சிறுவர்கள் பள்ளியின் கை பம்பை பயன்படுத்த அனுமதியில்லை. பல காலமாக இந்த தீண்டாமை இருந்து வந்துள்ளது.

இறந்து போன தலித் மாணவன் வீரனின் சகோதரன் சேவாக் பத்திரிக்கையாளர்களிடம் கூறியது...

'நான் ஏழாம் வகுப்பு படிக்கிறேன். எனது தம்பி மூன்றாம் வகுப்பு படிக்கிறான். சென்ற செவ்வாய்க்கிழமை அன்று எனது தம்பி பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டு விட்டு தாகத்தால் பள்ளியில் உள்ள கைப்பம்பில் தண்ணீர் அருந்த சென்றுள்ளான். அங்குள்ள உயர் சாதி மாணவர்களும் சில ஆசிரியர்களும் அவனை அங்கிருந்து விரட்டியுள்ளனர். தாகம் தாங்காமல் எனது தம்பி அருகில் கிணற்றில் தண்ணீர் குடிக்க சென்றுள்ளான்.

தண்ணீர் இறைக்கும் போது சிறுவன் ஆனதால் பேலன்ஸ் தவறி கிணற்றில் விழுந்துள்ளான். சில நிமிடங்களில் அவனது உயிர் பிரிந்தது' என்று சோகமாக சொல்கிறான் அந்த தலித் சிறுவன்.

இந்த சம்பவத்தால் கிராமம் கொதித்தெழுந்தது. அதிகாரிகள் மூன்று ஆசிரியர்களை இடை நீக்கம் செய்துள்ளனர். சென்ற செவ்வாய் கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதனை படித்தவுடன் என்னையறியாமல் கண்ணீர் வந்து விட்டது. மூன்றாம் வகுப்பு படிக்கும் பாலகனை தாகத்துக்கு தண்ணீர் தராமல் கிணற்றில் நீரிறைக்கச் சொல்லியுள்ளனர் பாவிகள். சாதி வெறி பிடித்து எதையடா கொண்டு செல்ல போகிறீர்கள் அற்ப பதர்களே!

http://english.pradesh18.com/news/madhya-pradesh/denied-use-of-school-handpump-dalit-boy-drowns-in-well-while-fetching-water-878226.html

2 comments:

A.Anburaj Anantha said...


குரான் படித்து அரேபிய மத வழியில் தொழுகை செய்யும் காடையா்களின் திட்டம்.அசிங்கம்


ஐ.எஸ்.ஐ.எஸ். பிடியில் 31 ஆயிரம் கர்ப்பிணி பெண்கள்: அடுத்த தலைமுறை தீவிரவாதிகளை உருவாக்க திட்டம்
பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, மார்ச் 10, 3:04 PM IST
கருத்துக்கள்0 வாசிக்கப்பட்டது 6
Share/Bookmark
printபிரதி
ஐ.எஸ்.ஐ.எஸ். பிடியில் 31 ஆயிரம் கர்ப்பிணி பெண்கள்: அடுத்த தலைமுறை தீவிரவாதிகளை உருவாக்க திட்டம்
சிரியா மற்றும் ஈராக்கின் சில பகுதிகளை பிடித்து இஸ்லாமிய அரசாக அறிவித்துள்ள ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கிவருகிறது. ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது அமெரிக்க கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வருகிறது.

இந்நிலையில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் நடைமுறைகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் குறித்து குவில்லியம் அறக்கட்டளை 6 மாதங்களாக ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-

ஈராக்கின் மொசுல் நகரில் தீவிரவாதிகள் 8 வயது சிறுமியை கடத்தி வந்து ஒரு கட்டிடத்தின் ஹாலில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். வலியால் துடிக்கும் அந்த சிறுமி அலறியதை பிற சிறுமிகளை கட்டாயப்படுத்தி கேட்க வைத்துள்ளனர்.

ஐஎஸ்ஐஸ் தீவிரவாதிகள் என்னை மூன்று நாட்களாக ஒரு அறையில் அடைத்து வைத்து தினமும் மூன்று முறை பலாத்காரம் செய்தனர் என்று அவர்களின் பிடியில் இருந்து தப்பி வந்துள்ள பெண் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகள் சிறுமிகள், பெண்களை தொடர்ந்து பலாத்காரம் செய்வார்கள். சில நாட்கள் கழித்து அந்த சிறுமிகள், பெண்கள் உடலில் சக்தி இல்லாமல் நடை பிணம் போன்று காணப்படுவார்கள் என்கிறார் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர்.

தீவிரவாதிகளின் பிடியில் உள்ள பெண்களில் 31 ஆயிரம் பேர் தற்போது கர்ப்பமாக உள்ளனர். அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே பயிற்சி அளித்து ஒரு ராணுவத்தையே உருவாக்க தீட்டமிடப்பட்டுள்ளது.

வாழ்க குரான். ஓங்குக முஹம்மதுவின் புகழ். குறைக உலகின் ஜனத்தொகை.

A.Anburaj Anantha said...


இசுலாமிய அழகிய உதாரணம்.இசுலாமிய தொண்டு வாழகவே வாழ்கவே

கொடூரமான உணவுப் பஞ்சம்; பசியைப் போக்க கால்நடை தீவனத்தை தின்னும் சிரியா குழந்தைகளின் அவலநிலை
பதிவு செய்த நாள் : புதன்கிழமை, மார்ச் 09, 3:02 PM IST
கருத்துக்கள்0 வாசிக்கப்பட்டது 17
Share/Bookmark
printபிரதி
கொடூரமான உணவுப் பஞ்சம்; பசியைப் போக்க கால்நடை தீவனத்தை தின்னும் சிரியா குழந்தைகளின் அவலநிலை
டமாஸ்கஸ், மார்ச் 9-

உள்நாட்டுப் போரில் சிக்கி சின்னாபின்னமாகிக் கிடக்கும் சிரியா நாட்டில் நிலவிவரும் கடுமையான உணவுப் பற்றாக்குறையால் பச்சிளம்தளிர்கள் பட்டினியால் இறந்து வருவதாகவும், இந்த பட்டினி மரணத்தை தவிர்ப்பதற்காக பல குழந்தைகள் ஆடு, மாடுகளுக்கான கால்நடை தீவனங்களை தின்று உயிர் வாழ்வதாகவும் நெஞ்சைப் பிழியும் செய்திகளை மேற்கத்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

சிரியாவில் அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதிக்குள் போராளிகளை நுழையவிடாமல் ராணுவத்தினரும், போராளிகளின் ஆதிக்கத்தில் உள்ள இடங்களை அரசுப் படைகள் மீண்டும் ஆக்கிரமித்து விடாதபடி புரட்சிப் படையினரும் தாங்கள் கைப்பற்றிய இடங்களை சுற்றி அரண் அமைத்து காவல் காத்து வருகின்றனர்.

சிரியாவில் கடந்த மாதம் இருதரப்பினருக்கும் இடையில் போர்நிறுத்தம் அமலுக்கு வந்தபின்னர் ஐக்கிய நாடுகள் அகதிகள் முகமையின் சார்பில் ஏராளமான உணவு மற்றும் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டபோதும் அவை வெகுதொலைவில் உள்ள மக்களை சென்றடைவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அப்பகுதியில் கடுமையான உணவுப்பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஒரு கிலோ அரிசி சுமார் பதினைந்தாயிரம் ரூபாய்க்கு கள்ளச் சந்தையில் விற்கப்படுகிறது. சரியான உணவு சாப்பிடாததால் கைக்குழந்தைகளுக்கு பாலூட்டும் சக்திகூட இல்லாமல் இங்குள்ள பெண்கள் வேதனையில் வெம்பித் துடிகின்றனர்.

இதேபோல், குழந்தைகளுக்கான பால் மற்றும் சத்து பானங்கள் கிடைக்காததால் பல குழந்தைகள் பட்டினியால் செத்து வருகின்றன. இந்த பட்டினி மரணத்தை தவிர்ப்பதற்காக பல குழந்தைகள் ஆடு,மாடுகளுக்கான கால்நடை தீவனங்களை தின்று உயிர் வாழ்வதாகவும் நெஞ்சைப் பிழியும் செய்திகளை மேற்கத்திய ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.

குழந்தைகள் உள்பட சுமார் 2 லட்சம் மக்கள் கொடூரமான உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நாடு முழுவதும் உள்ள திறந்தவெளி அகதிகள் முகாம்களில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் சத்துக்குறைவால் சூம்பிய கன்னம், குழிவிழுந்த கண்கள் மற்றும் வீங்கிய வயிற்றோடு மரணத்தின் விளிம்பு நிலையில் இருப்பதாகவும் அந்த செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளது, கல்மனதையும் கரையவைக்கும் வகையில் அமைந்துள்ளது.