

மூன்று நாட்கள் கடும் மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் முன்பே தெரிவித்தும் அன்றைய தினத்தில் பல லட்சம் பேரை ஒன்று கூட்டினார் ரவி சங்கர். மழை வந்தால் அதற்கு என்ன முன்னேற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும் என்ற ஏற்பாட்டையும் ஏற்பாட்டாளர்கள் எதையும் செய்யவில்லை. மழை ஆக்ரோஷமாக வந்து பலரையும் சிரமத்திற்குள்ளாகியது. மக்கள் மழையிலிருந்து தப்பிக்க அங்கும் இங்கும் ஓடியது பரிதாபமாக இருந்தது.
'வாழும் கலை' பற்றி போதிப்பவர் மழை வந்தால் எவ்வாறு நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற யோசனையையும் முன்பே சொல்லியிரக்கலாம்.
பல உலக தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தும் பலரும் கலந்து கொள்வில்லை. மோடி விழாவில் கலந்து கொண்டார். கர்சாய் டெல்லியிலிருந்து உடனடியாக திரும்பிவிட்டார். சிறிசேனா உடல் நல காரணங்களுக்காக தவிர்த்து விட்டார். ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே இந்தியாவில் இருந்தபோதும், நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இந்திய குடியரசுத் தலைவர் நிகழ்ச்சியைப் புறக்கணித்ததால், அவர் தரப்பும் புறக்கணித்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுற்றுப்புற சூழலை கெடுத்ததற்காக 5 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முதலில் அபராத தொகையை கட்ட மறுத்து பின்னர் நீதி மன்ற கண்டிப்பு பிறகு முதல் தவணையாக 25 லட்சத்தை கட்டியுள்ளார். வாழும் கலையில் தாய் நாட்டு சட்டத்தை மதிப்பது வராது போல் இரக்கிறது. :-) மீதி தொகையை கட்டுவாரா? கட்டுவாரா? அல்லது மோடி அமீத்ஷா வகையறாக்கள் அதனை தள்ளளுபடி செய்ய முயற்சிப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும.
1 comment:
The imposed fine should be cancelled.
Post a Comment