Followers

Monday, March 21, 2016

குஜராத்தில் அதிக இந்துக்கள் மதம் மாற விருப்பம்!



கடந்த ஐந்து வருடங்களில் குஜராத் அரசுக்கு 1838 விண்ணப்பங்கள் மதம் மாற விருப்பம் தெரிவித்து வந்துள்ளன. இவற்றில் இந்துக்களிடமிருந்து 1735ம், இஸ்லாமியரிடமிருந்து 57ம், கிருத்தவர்களிடமிருந்து 42ம், பார்ஸிகளிடமிருந்து 4ம் விண்ணப்பங்கள் வந்துள்ளது. குஜராத்தில் மத மாற்ற தடை சட்டம் அமுலில் உள்ளதால் எவரும் மதம் மாறும் முன்பு அரசின் அனுமதியை பெற வேண்டும். விண்ணப்பங்களில் 94 சதம் இந்துக்களுடையது என்பதால் அரசு அனுமதி தராமல் இழுத்தடிக்கிறது. ஆனால் அரசுக்கு தெரிவிக்காமல் மறைமுகமாக மத மாற்றங்கள் நடந்தே வருகின்றன.

அமீத்ஷாவின் மிரட்டல், இந்துத்வாவாதிகளின் மிரட்டல், மோடியின் மிரட்டல், இந்து மதத்தை தழுவினால் ஐந்து லட்சம் சன்மானம் என்ற அறிவிப்புகள் இருந்தாலும் எவரும் இந்து மதத்தை தழுவ விரும்பவில்லை. சூரத், ராஜ்கோட், போர் பந்தர், அஹமதாபாத், ஜாம் நகர் போன்ற பகுதியிலிருந்தே அதிக விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. இந்த பகுதிகளில்தான் முன்பு இந்து முஸ்லிம் கலவரம் மோடியால் தூண்டி விடப்பட்டது ஞாபகம் இருக்கலாம். கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து குழந்தையை நெருப்பில் வீசிய கொடூரம்: கூட்டம் கூட்டமாக முஸ்லிம்களை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கொடூரம் எல்லாம் அந்த இந்து மக்கள் மனதில் நிழலாடியிருக்கும். இந்த கொடுமையை எல்லாம் தடுக்காமல் நின்றோமே என்றும் அதற்கு பிராயச்சித்தமாக இந்து மதத்தை துறக்க முடிவு செய்திருக்கிறார்களோ என்னவோ?

குஜராத் தலித் அமைப்பின் தலைவர்களுள் ஒருவரான ஜெயந்த் மங்காடியா கூறுகிறார் ' 'அரசு 1735 என்று பொய்யான தகவலை கொடுக்கிறது. விண்ணப்பங்கள் அனைத்தையும் இவர்கள் அரசு கெஜட்டில் பதிவு செய்வதில்லை. ஹிந்து மதத்தை துறக்க விருப்பம் தெரிவித்தவர்கள் எண்ணணிக்கை 50000 க்கு மேல் இருக்கும்.' என்கிறார்.

இந்து மதத்துக்கு திரும்பினால் ஐந்து லட்சம் தருகிறோம் என்ற அறிவிப்பு, முஸ்லிம்களை அடக்கி ஒடுக்குதல் ஒரு பக்கம் என்று இந்து மதத்தைக் காக்க மோடி அரசு நிறைய மெனக்கெடுகிறது. ஆனால் இவர்களிடம் உண்மையும் நேர்மையும் இல்லாததால் தொடர்ந்து இந்துத்வாக்கள் தோல்வி முகத்தையே தழுவுகின்றனர். எதற்கெடுத்தாலும் குஜராத்தை மாடலாக காட்டுவர் இந்துத்வாவாதிகள். அந்த ரோல் மாடல் முழு இந்தியாவுக்கும் பரவ நாமும் பிரார்த்திப்போம். :-)



தகவல் உதவி
டைம்ஸ் ஆஃப் இந்தியா
16-03-2016

http://timesofindia.indiatimes.com/city/ahmedabad/In-Gujarat-94-4-of-those-seeking-to-convert-are-Hindu/articleshow/51419977.cms

1 comment:

Dr.Anburaj said...


Hinduism should be desilted

and modernised based on the teachings of Swami

Vivekananda and Sri Narayana Guru of Kerala.