'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Wednesday, March 16, 2016
எனது இனத்தை நேசிப்பது இனவெறி ஆகுமா?
எனது இனத்தை நேசிப்பது இனவெறி ஆகுமா?
தர்மபுரி இளவரசன், சேலம் கோகுல் ராஜ், உடுமலை சங்கர். இந்த மூன்று பேரும் சாதி மாறி திருமணம் புரிந்ததால் கொல்லப்பட்டுள்ளனர். இவை எல்லாம் சமீபத்தில் நடந்தவை. கடந்த ஐம்பது ஆண்டுகளை கணக்கிட்டால் இந்த கவுரவக் கொலைகளின் பட்டியல் மிக நீளும். இஸ்லாமியனாக இருக்கட்டும், இந்துவாக இருக்கட்டும், கிறித்தவனாக இருக்கட்டும் யார் தவறு செய்தாலும் அவனை கண்டிக்கும் மனப்பான்மையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். இளவரசன் கோகுல்ராஜ் கொல்லப்பட்ட போதே சம்பந்தப்பட்ட சாதிக்காரர்கள் கொன்ற கொலையாளிகளை சட்டத்தின் முன்னால் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுத்திருந்தால் இன்று நாம் உடுமலை சங்கரை இழந்திருக்க மாட்டோம். கொன்ற கொலையாளிகளை மானமுள்ளவன், வீரமுள்ளவன் என்று கொம்பு சிவி விடுவதாலேயே இது போன்ற கொலைகள் தொடர்கின்றன.
இது பற்றி நபிகள் நாயகம் சொன்ன ஒரு அறிவுரையை இங்கு நாம் நினைவு கூர்வோம்.
ஒரு முறை புசைலா என்ற பெண்மணி நபிகள் நாயகம் அவர்களிடம் வந்து “இறைத்தூதரே நான் என் சமூகத்தை நேசிப்பது இன வெறியாகுமா” என்று கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் அவர்கள் “தன் சமூகத்தை ஒருவன் நேசிப்பது இனவெறி ஆகாது. மாறாக தன் சமூகத்தைச் சார்ந்தவன் வரம்பு மீறி அநீதியை செய்யும்போது அவன் செய்வது தவறு என்று தெரிந்தும் அவன் தன் சமூகத்தைச் சார்ந்தவன் என்பதற்காக அவனுக்கு உதவினால் அதுவே இனவெறி” என்றார்கள்.
- நூல்: அஹ்மத்
என்ன ஒரு அருமையான விளக்கம். இதனை ஒவ்வொரு சமூகமும் கடைபிடித்தால் இது போன்ற தவறுகள் சிறிது சிறிதாக மறைந்து போகும். இனியாவது சம்பந்தப்பட்டவர்கள் யோசிப்பார்களா?
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
அரேபியரான முஹம்மதுவை முன் உதாரணமாகக் கொள்வது தேவையற்ற கருத்து.
இன்றும் சமூக பிாிவுகளுக்கு ஆரோக்கியமான தீா்வை முஸ்லீம் சமூகம் காணவில்லை.
ஷியா சன்னி என்றும் கோத்திர மோதல்கள் அரேபிய நாடுகளில் இரத்தக்களறியாக்கிக்
கொண்டிருக்கினறது. இந்நிலையில் சாதி மோதல்களில் கொல்லப்படுபவா்களின்
எண்ணிக்கை மிக அல்பம்..தினசாி பத்திாிகைளில் பயங்கரவாத தாக்குதல்களில் உயிாிழக்கும் முஸ்லீம்களின் எண்ணிக்கை மிக அதிகம்.
சாதி ஒற்றுமைக்கு உதாரணமாக எடுத்துக்காட்டும் தகுதி முஸ்லீம்களுக்கு கிடையாது. முஸ்லீம்கள் மத்தியில் அன்பையும் சகோரதத்துவததையும் ஜனநாயகத்தையும் விதைக்க மலரச் செய்ய இயலாத குரானுக்கும் ஹதீஸ்களுக்கும் எந்த முக்கியத்துவமும் இல்லை.பிறரை காபீா்எ ன்று பட்டம் கட்டி அநியாயமாக படுகொலை செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை பலபல கோடியைத்தாண்டும். பங்களாதேஷ்யில் இந்துக்கள் இன அழிப்புக்கு ஆளாகி ..... ???? பாக்கிஸ்தானில் இந்துக்கள் இனஒழிப்புக்கு ஆளாகி அழிந்து விட்டாா்கள். சாதி காரணம் அல்ல.காபீா் த்த்துவம் காரணம்.
01.சாதி ஒழிய வேண்டும் என்று கூச்சல் போட்ட இன்றைய சீா்திருத்தவாதிகள் யோக்கியதை - எந்த சாதிக்காரன் பெரும்பான்மையோ அங்கே அந்த சாதிக்காரன் வல்லாதிக்கத்தை கடும் போக்குதனத்தை ஆதரிப்பான்.பாா்ப்பனா்களால் ஏற்பட்ட சாதி பாகுபாட்டை எதிா்த்த இக் கயவா்கள் வட்டார அளவில் பிற சாதி மக்களில் சொ்த்துக் காரா்கள் செய்ய சமூக அநீதியை தட்டிக் கேட்கும் தைாியம் எவனுக்கும் இல்லை. காயல்பட்டணத்தில் முஸ்லீம்கள் வைத்ததுதான் சட்டம். ஆம்புாில் காவல்துறை பட்ட அடி யு டியுபில் காணலாம். சிவகாசியில் நாடா் வைத்ததுதான் சட்டம். பல பகுதிகளில் தேவா் வைத்ததுதான் சட்டம். பல பகுதிகளில் பள்ளா்கள் வைத்ததுதான் சட்டம்.
பள்ளா்களை எதிா்த்தவன்கொலை செய்யப்படவான்.
02.சைவ பிள்ளை முதலியாா் சைவ செட்டியாா் என்ற சாதி தமிழ்நாட்டில் உள்ளது. இவர்கள் தங்களுக்குள் பெண் கொடுப்பாா்கள் பெண் எடுப்பாா்கள். ஆண் மகன் சாதிதான் பெண்ணுக்கு என்று சொன்னேன் அல்லவா அது இங்கு நடைமுறையில் உள்ளது.
சாதி சண்டை யில்லை.
03.நாடாா் சாதியில் பனை எறும் மக்களை பிறா் மதிக்க மாட்டாா்கள். இன்று ப னைஏறும் தொழிலாளிக்கு எவனும் பெண்கொடுக்க மாட்டான். என்னிடம் ஒருவன் பெண் கிடைக்காமல் தவிக்கின்றேன் என்றான். ஆதிதிராவிடா் பெண்ணை திருமணம் செய்து வைத்தேன். மற்ற நாடாா்கள் தொந்தரவு செய்தால் ஆதிதிராவிடா்குடியிருப்பில் குடும்பத்தை வைத்து சாதி மாறிவிடு என்று ஆலோசனை சொல்லியிருக்கின்றேன். என்னை எவனும் என்ஊாில் எதிா்க்க முடியாது. எனது நிலை விதிவிலக்கு. பொதுவாக நாடாா் சாதியில் சாதி விட்டு திருமணம் செய்தால் இவ்வளவு கொடுமையாக யாரும் நினைப்பதில்லை.பணம் பெண்ணுக்கு அழகும் இருந்தால் எல்லாம் மறந்து விடுகின்றது. எனது உறவினா் ஒரு வா் சக்கிலிய பெண்ணை திருமணம் செய்தாா். பெண் பேரழகாக இருப்பாா். அவரதுஃ் இரு பெண்களுக்கு சுலபமாக திருமணம் நாடாா் சாதியில் நடைபெற்றது. மாமியாா் சக்கிலியப் பெண் என்பது பல பேருக்கு தொியாது.
சவாமி விவேகானந்தா் வழியில் முறையாக சமய கல்வியை அளித்தால் இந்து சமூகத்தில் அமைதியை ஒழுங்ககைஏற்படுத்த முடி?யும்.
மதச்சாா்பின்மை என்று இந்துக்கள் ஏமாந்தால் விளைவு கடுமையாக இருக்கும்
ஷியா மக்களை கொன்று குவிப்பது நியாயமா ?
காபீா் என்று பட்டம் கட்டி யஷடி இன மக்களை கொன்று அவரது பெண்களை வைப்பாட்டியாக வைத்திருப்பது நியாயமா ?
Minority Report: Yemen's Akhdam "Out-Castes"-அரபு நாட்டில் தீண்டாமை.சாதி வெறி
They have lived in Yemen for well over a thousand years. They are Arabic-speaking Muslims. And yet they are Yemen's great outcasts. Meet the Akhdam.
The photo at right is a snapshot from one of the Akhdam shanty-towns in Yemen's capital. As one article notes, this street slum lies "virtually in the shadows of the multi-million-dollar presidential mosque, and is made up of squat cinderblock buildings and shacks made from scrap materials. It sits on a waterway that fills up in the winter, turning the pathways into rivulets and dirt floors into muck."
Legend has it that the Black Yemenis, who do not belong to any of the major Arab tribe groups, descend from Ethiopian invaders from the sometime between 100-600 A.D. When the Ethiopian invasion failed, they became slaves and servants. With the abolition of slavery in Yemen (in 1962!), the Akhdam are now all "free" but face widespread discrimination and economic hardship:
They are almost always kept at arms length, and any chance of social integration is next to impossible. Their name, akhdam, is the plural of the Arabic term khadim, which literally means servant, a term far predating their common occupation nowadays as sanitary workers and garbage collectors, and is given to any Yemeni-born person with black skin, especially in the north of the country.
For more on the obstacles faced the Akhdam and proposed reforms, see Huda Seif's report in the Muslim World Journal of Human Rights [excerpt from abstract]:
...the Al-Akhdam are persecuted on account of their being of African-descent in a country with an Arab-majority... The article advocates the protection of the collective human rights of the Al-Akhdam minority and proposes cogent measures for restoring social justice through the implementation of specific actions, including international condemnation of their persecution; official recognition of the violence meted to them; national international recognition and promotion of their rights; cessation of Yemeni government-supported policy of Al-Akhdam forced labor; formal extension of constitutionally-guaranteed economic and social rights and the establishment of a program designed to integrate them into the mainstream of Yemeni society.
கொன்றை வேந்தன் - ஔவையார்
1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் - தாய், தந்தையர் கண்கண்ட தெய்வம்
2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று - கோவிலுக்குச் சென்று இறைவனைத் தொழுவது மிகவும் நல்லது
3. இல்லறமல்லது நல்லறமன்று - இல்லறவாழ்வே மிகவும் நன்மை பயக்கக் கூடியது
4. ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் - பிறருக்கு உதவி செய்யாதோர் பொருளைத் தீயவர் பறித்துக் கொள்வர்
5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க் கழகு - குறைத்து உண்ணுதல் பெண்களுக்கு அழகு தரும்
6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் - ஊராரோடு பகைத்துக் கொண்டால் குடும்பம் அழிந்து விடும்
7. எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் - அறிவியலுக்கு ஆதாரமான எண்ணும், இலக்கிய அறிவுக்கு ஆதாரமான எழுத்தும் நமக்குக் கண் போன்றவை
8. ஏவா மக்கள் மூவா மருந்து - செய் என்று சொல்லும் முன்பே குறிப்பறிந்து செயலாற்றும் பிள்ளைகள் அம்ருதம் போன்றவர்கள்
9. ஐயம் புகினும் செய்வன செய் - பிச்சை எடுத்தாவது செய்ய வேண்டிய நல்ல கார்யங்களை செய்
10. ஒருவனைப் பற்றி ஓரகத்திரு - ஒருவனை மணந்து புகுந்த வீட்டிலே வசிக்க வேண்டும்
11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம் - ஒழுக்கமானது வேதம் ஓதுவதை விட மிக நல்லது
12. ஔவியம் பேசுதல் ஆக்கத்திற் கழிவு - பொறாமைப் பேச்சு வளர்ச்சியை அழிக்கும்
13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு - சிக்கனமாயிருந்து தான்யத்தையும், செல்வத்தையும் தேட வேண்டும்.
14. கற்பு எனப்படுவது சொல் திறம்பாமை - கணவன் சொல்லுக்கு மாறாக நடவாதிருத்தலே கற்பு
15. காவல்தானே பாவையர்க்கு அழகு - காவல், கட்டுப்பாட்டோடு இருத்தலே பெண்களுக்கு அழகு
16. கிட்டாதாயின் வெட்டென மற - நமக்குக் கிடைக்காது என்ற ஒன்றை மறந்து விடு
17. கீழோராயினும் தாழ உரை - உன்னை விடத் தாழ்ந்தோராயினும் நயமாகப் பேசு
18. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை - பிறர் குற்றங்களையே ஆராய்ந்து கொண்டிருந்தால், சுற்றத்தார் என்று எவருமே இருக்க மாட்டார்கள்
19. கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல் - பலவானாக இருந்தாலும், கர்வப் பேச்சு பேசாதே
20. கெடுவது செய்யின் விடுவது கருமம் - நமக்கு ஒருவர் கெடுதல் செய்தால், அதை அப்படியே விட்டு விடுதலே உயர்ந்த செயல்
21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை - தாழ்வு வந்த போதும் மனந்தளராது இருப்பதே மீண்டும் எல்லாவற்றையும் சேர்க்கும்
22. கைப்பொருள் தன்னில் மெய்ப்பொருள் கல்வி - கையில் இருக்கும் பொருளை விட உண்மையான செல்வம் கல்வியே ஆகும்
23. கொற்றவன் அறிதல் உற்றிடத்து உதவி - தேவையிருக்கும் இடம் சென்று உதவி செய்தலே, ஆட்சி செய்வோர் அறிய வேண்டியது
24. கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு - கோள் மூட்டி கலகம் செய்வோர் காதில் கோள் சொல்வது காற்றுடன் கூடிய நெருப்பு போன்றது
25. கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை - எவரையும் பழித்துக் கொண்டே இருந்தால், அனைவருக்கும் அவன் பகையாளி ஆவான்
26. சந்ததிக்கு அழகு வந்தி செய்யாமை - மலடின்றி வாழ்தலே, குடும்பம் தழைப்பதற்கு அழகு
27. சான்றோர் என்கை ஈன்றோட்கு அழகு - பெற்றோருக்குப் பெருமை, அவர் பிள்ளைகள் சான்றோர் எனப் பாராட்டப்படுவதே
28. சிவத்தைப் பேணில் தவத்திற்கு அழகு - தவத்திற்கு அழகு இறை நினைவோடு இருப்பதே
29. சீரைத்தேடின் ஏரைத் தேடு - புகழோடு வாழ விரும்பினால், பயிர்த் தொழிலில் ஈடுபட வேண்டும்
30. சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல் - எந்த நிலையிலும் கூடி இருத்தலே சுற்றத்திற்கு அழகு.
31. சூதும் வாதும் வேதனை செய்யும் - சூதாட்டமும், தேவையில்லாத விவாதமும் துன்பத்தையே தரும்
32. செய்தவம் மறந்தால் கைதவம் ஆளும் - தவம் செய்வதை விட்டு விட்டால் அறியாமை (கைதவம்) ஆட்கொண்டு விடும்
33. சேமம் புகினும் யாமத்து உறங்கு - காவல் வேலைக்கு சென்றாலும் நள்ளிரவில் உறங்க வேண்டும்
34. சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண் - பொருள் கொடுக்குமளவு இருந்தால், பிறருக்கு உணவிட்டு உண்ண வேண்டும்
35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர் - பொருளுள்ளவர், மீதமுள்ள அறம், இன்பம், வீட்டை பெறுவர்.
36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர் - சோம்பெறிகள் வறுமையில் வாடித் திரிவர்
37. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை - தந்தை சொல்லெ உயர்ந்த மந்திரம் போலாகும்
38. தாயிற் சிறந்த ஒரு கோயிலு மில்லை - தாயே சிறந்த தெய்வமாகும்
39. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு - கடல் கடந்தாவது பொருள் தேட வேண்டும்
40. தீராக் கோபம் போராய் முடியும் - கோபம் சீக்கிரமாகப் போய் விட வேண்டும். இல்லையேல் அது சண்டையில் போய் முடியும்
41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு - கணவனுக்குத் துன்பம் வந்த போது, கவலைப் படாத பெண்கள், மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டதற்கு ஒப்பாவர்.
42. தூற்றம் பெண்டிர் கூற்றெனத் தகும் - எப்போதும் அவதூறுக் கூறிக் கொண்டே இருக்கும் பெண்கள் குடும்பத்திற்கு எமன் போன்றவர்.
43. தெய்வம் சீறின் கைதவம் மாளும் - தெய்வம் கோபித்துக் கொண்டால், நம் தவமும் அழிந்து போம்.
44. தேடாது அழிக்கின் பாடாய் முடியும் - பொருளைத் தேடிச் சேர்க்காது, இருப்பதை செலவிட்டுக் கொண்டிருந்தால் துன்பத்தில் முடியும்
45. தையும் மாசியும் வையகத்து உறங்கு - தை, மாசி (வெயில் காலம்) மாதங்களில் வைக்கோல் வேய்ந்த வீட்டில் உறங்கு
46. தொழுது ஊண் சுவையின் உழுது ஊன் இனிது - பிறரிடம் வணங்கி அந்த ஊதியத்தில் உண்பதை விட பயிர் செய்து உண்பதே இனிது.
47. தோழனோடும் ஏழைமை பேசேல் - நெருங்கிய நண்பனிடத்தும் நம் வறுமை பற்றிப் பேசக் கூடாது
48. நல்இணக்கம் அல்லது அல்லல் படுத்தும் - நல்லோர் நட்பு இல்லையேல், அல்லல் படுவோம்
49. நாடு எங்கும் வாழக் கேடு ஒன்றும் இல்லை - நாடு செழித்திருக்குமானால் எவருக்கும் இன்பமே.
50. நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை - சொன்ன சொல் தவறாது இருத்தலே, நிலையான கல்வி கற்றதற்கு அழகு
51. நீர்அகம் பொருந்திய ஊர்அகத்திரு - நீர் நிறைந்த ஊரில் வசிக்க வேண்டும்
52. நுண்ணிய கருமமும் எண்ணித் துணி - சிறிய கார்யமாக இருந்தாலும், யோசித்து செயல் பட வேண்டும்
53. நூன் முறை தெரிந்து சீலத் தொழுகு - நல்ல நூல்களைப் பயின்று, ஒழுக்கத்தோடு நடந்து கொள்
54. நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை - நமக்குத் தெரியாமல் ஒருவருக்கு வஞ்சனை செய்ய முடியாது.
55. நேரா நோன்பு சீர் ஆகாது - மனம் ஒப்பி செய்யாத எந்த விரதமும் சிறப்பாக முடியாது
56. நைபவர் எனினும் நொய்ய உரையேல் - சக்தியற்றவர் இடத்தும் மனம் நோகுமாறு பேசக்கூடாது
57. நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர் - சிறியவர்களும் செய்யும் கார்யத்தால் சிறந்தவர் ஆவர்
58. நோன்பு என்பது கொன்று தின்னாமை - உயிரைக் கொன்று அதை உண்ணாமல் இருப்பதே விரதமாகும்
59. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும் - ஒருவர் புண்ணியம் அவர் அடைந்த விளைச்சலில் தெரியும்
60. பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண் - சிறந்த உணவாக இருந்தாலும், காலமறிந்து உண்ண வேண்டும்
61. பிறன்மனை புகாமை அறம் எனத்தகும் - அடுத்தவன் மனைவியை விரும்பாததே சிறந்த அறம்
62. பீரம் பேணில் பாரம் தாங்கும் - தாய்ப்பாலை ஊட்டி வளர்த்தால், அந்தக் குழந்தை பலம் பெறும், நிர்வாக சுமைகளைத் தாங்கும்
63. புலையும், கொலையும் களவும் தவிர் - புலாலுண்ணுதல், கொலை, திருடு இம்மூன்றையும் செய்யாதே
64. பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம் - கொடியவர்களிடம் சிறந்த ஒழுக்கங்கள் இருக்காது
65. பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும் - ஞானம் பெற்றோர்க்கு சுற்றம் என்ற பந்தமும், கோபமும் கிடையாது
66. பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம் - அறியாதவர் போன்று இருப்பது பெண்களுக்கு அணிகலன்
67. பையச் சென்றால் வையந் தாங்கும் - நிதானமாகச் செய்யும் கார்யங்களில் வெற்றி நிச்சயம்
68. பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர் - அனைத்துத் தீங்குகளையும் விட்டு விடு
69. போனகம் என்பது தானுழுது உண்ணல் - தான் முயன்று உழைத்து சம்பாதித்ததே உணவு என்பதாகும்
70. மருந்தே ஆயினும் விருந்தோடு உண் - தேவாம்ருதமே கிடைத்தாலும், பிறரோடு சேர்ந்து உண்
71. மாரி அல்லது காரியம் இல்லை - மழையின்றி ஒன்றும் இல்லை
72. மின்னுக்கு எல்லாம் பின்னுக்கு மழை - மழை வரப்போவதற்கு அறிகுறியே மின்னல்
73. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது - மாலுமி இல்லாத ஓடம் செல்லாது
74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் - பிறருக்கு செய்யும் நன்மை, தீமைகள் பின்பு நமக்கே வரும்
75. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் - முதியோர்கள் அறிவுரை அமிர்தம் போன்றது
76. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு - மெத்தையில் படுத்து உறங்குதலே தூக்கத்திற்கு சுகம்
77. மேழிச் செல்வம் கோழைப் படாது - கலப்பையால் உழைத்துச் சேர்த்த செல்வம் ஒரு போதும் வீண் போகாது
78. மைவிழியார் தம் மனைஅகன்று ஒழுகு - விலை மாதர் இல்லங்களிலிருந்து ஒதுங்கி இரு
79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம் - பெரியோர் சொல்லை கேளாமல் மறுத்தால் அந்த காரியங்கள் கெட்டுவிடும்
80. மோனம் என்பது ஞான வரம்பு - மௌனமே மெய்ஞ்ஞானத்தின் எல்லை
81. வளவன் ஆயினும் அளவு அறிந்து அழித்து உண் - சோழ வளவனை ஒத்த செல்வம் படைத்திருந்தாலும், வரவு அறிந்து செலவு செய்து உண்ண வேண்டும்
82. வானம் சுருங்கின் தானம் சுருங்கும் - மழை குறைந்து விடுமானால் பல தான தர்மங்கள் குறைந்து விடும்
83. விருந்தில்லோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம் - விருந்தினரை உபசரித்தறியாத இல்லத்தில் தேவையான ஒழுக்கம் இருக்காது
84. வீரன் கேண்மை கூர் அம்பாகும் - வீரனுடன் கூடிய நட்பு, கையில் கூர்மையான அம்பை வைத்திருப்பதற்கு ஒப்பாகும்
85. உரவோர் என்கை இரவாது இருத்தல் - யாசிக்காமல் இருப்பதே வல்லவர்க்கு இலக்கணம்
86. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு - உற்சாகமான முயற்சியோடு இருப்பதே முன்னேற்றத்திற்கு அழகு
87. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை - தூய்மையான மனமுள்ளோருக்கு, வஞ்சக எண்ணம் இல்லை
88. வேந்தன் சீறின் ஆம்துணை இல்லை - அரசின் கோபத்துக்கு ஆளானவருக்கு வேறு துணை இல்லை
89. வைகல் தோறும் தெய்வம் தொழு - தினமும் காலையில் தெய்வத்தை வணங்கு
90. ஒத்த இடத்து நித்திரை கொள் - பழக்கப்பட்ட, சமமான இடத்தில் படுத்து உறங்கு
91. ஓதாதார்க்கு இல்லை உணர்வோடு ஒழுக்கம் - படிக்காதவர்களிடம் மனமறிந்த ஒழுக்கம் இருக்காது.
திருக்குறள் இருக்க
ஆத்திச்சுடி இருக்க
கொன்றை வேந்தன் இருக்க
திருமந்திரம் இருக்க
நாலடியாா் இன்னா நாற்பது இனியவை நாற்து இருக்க
குரான் எதற்கு ?
குரான் எதற்கு ?
குர்ஆன் எதற்கு என்ற கேள்வியை கேட்ட நீங்கள் முதலில் குர்ஆனை படித்திருக்கிறீர்களா ஹதீசை படித்திருக்கிறீர்களா படித்தால் தெறியும் எதற்கு என்று
பள்ளிக்கூடத்தில் ஒரு மானவன் அல்லது பலமானவர்கள் தவறாக நடந்துக்கொண்டால் பள்ளிக்கூடம் தவறு (சரியல்ல) என்று சொல்வது போல் இருக்கிறது தாங்கள் சொல்வது தயவுசெய்து குர்ஆனையம் ஹதீசையும் படியுங்கள் பிறரு சொல்லுங்கள் இஸ்லாம் தவறான பாதையில் இட்டுச்செல்கிறதா
மனிதன் தவறு செய்வதால் மார்கம் தவறு என்று சொல்வது தவறு தாங்களோ டாகடர்
குரான் எதற்கு ?
குர்ஆன் எதற்கு என்ற கேள்வியை கேட்ட நீங்கள் முதலில் குர்ஆனை படித்திருக்கிறீர்களா ஹதீசை படித்திருக்கிறீர்களா படித்தால் தெறியும் எதற்கு என்று
பள்ளிக்கூடத்தில் ஒரு மானவன் அல்லது பலமானவர்கள் தவறாக நடந்துக்கொண்டால் பள்ளிக்கூடம் தவறு (சரியல்ல) என்று சொல்வது போல் இருக்கிறது தாங்கள் சொல்வது தயவுசெய்து குர்ஆனையம் ஹதீசையும் படியுங்கள் பிறரு சொல்லுங்கள் இஸ்லாம் தவறான பாதையில் இட்டுச்செல்கிறதா
மனிதன் தவறு செய்வதால் மார்கம் தவறு என்று சொல்வது தவறு தாங்களோ டாகடர்
சைவ பிள்ளை முதலியாா் சைவ செட்டியாா் என்ற சாதி தமிழ்நாட்டில் உள்ளது. இவர்கள் தங்களுக்குள் பெண் கொடுப்பாா்கள் பெண் எடுப்பாா்கள். ஆண் மகன் சாதிதான் பெண்ணுக்கு என்று சொன்னேன் அல்லவா அது இங்கு நடைமுறையில் உள்ளது.
சாதி சண்டை யில்லை.
இதுதான் இந்து சமயம் சாதி பிரச்சனைக்கு அளித்துள்ள தீா்வு. இந்து மதம் வெற்றி பெற்று விட்டது.
மேற்படி சமூகம் முறையான இந்து சமய கல்வி பெற்றது.
குரான் எதற்கு என்று கேட்வுடன் சாகீா் உசேன் என்பவருக்கு
பொத்துக் கொண்டு வந்து விட்டது.
படித்து விட்டுதான் சொல்கின்றேன் அன்பரே. அதற்கான ஒரு அரேபிய மொழி பண்டிதா் போல் என்னால் உதாரணங்களை அள்ளி பேச முடியாது.
ஆங்கில மொழி பெயா்ப்புக்களை படித்திருக்கின்றேன்.
குரானில் என்ன இருக்கின்றது. இறைவன் ஒருவனே.அவனது தூதா் முஹம்மது என்று எதற்கெடுத்தாலும் சொல்லிக் கொண்டுயிருப்பது மனநோய் பிடித்தவா்களின் செயல் போ்ல் உள்ளது.
மஹம்மது செய்ததைத்தான் இன்று தலிபான்களும் ஐஸ் காடையா்களும் செய்கின்றாா்கள்.
முஹம்மதுவிற்கும் மனைவிகள் இருந்தாா்கள்.
போாில் கைபற்றப்பட்ட பெண்கள் பலரை குமுஸ் வைப்பாட்டியாக வைத்திருந்தாா்.
அதுபோல் சிாியாவில் ப லாக்காரமாக கைப்பற்றிய யஷ்டி இனப் பெண்களை ஐஸ் காடையா்கள் செக்ஸ் வடிகாலுக்கு வைத்திருக்கின்றாா்கள்.செக்ஸ் அடிமையாக வைத்திருக்கின்றாா்கள். அவர்களிடம் கேட்டால் இது இசுலாம் மாா்க்கத்திற்கு இணக்கமானது என்று அறிவித்துள்ளாா்கள். ஐஸ் காடையா்கள் தொளுகை செய்யும் காட்சியைக் காணவில்லையா ?
அரேபிய ராக முஹம்மது அவர் பிறந்த மண்ணில்சில சில சமூக மாற்றங்களை செய்தாா். அதிலும் காலத்திற்கு பொருந்தாத விசங்கள் நிறைய உள்ளது. இன்று ஹஜ் என்று செய்வது முஹம்து பிறப்பதற்கு முன்பே அரபு மக்கள் செய்து வந்த பழக்கம் தானே. கலலொிவது காபாவை சுற்றுவது போன்ற அனைத்தும் அரேபிய மக்களின் பண்டைய பழக்கம்தான்.
அரேபிய நாகாீகத்தை பின்பற்றினால் சொா்க்கம் இல்லையேல் நகரம் என்று கூறும் குரான் அறிவுக்கு உகந்ததா ?அது ஒரு வேதம் என்ற தகுதி படைத்ததா ? அது உலக மக்களுக்கு பொருந்துமா ? அது அழிவைத் தராது வேறு நன்மையைத்தரவில்லையே. அரேபியா்கள் அல்லது அரேபிய அடிமைகள் தவிர வேறு யாரும் இந்த உலகில் வாழக் கூடாது என்று கூறும் குரான் எதற்கு? என்ன பயன் ? என்று கூறுவேன். ஆணித்தரமாக ஓங்கி உரைப்பேன் யான் ? அதுதான் சத்தியம்
C.Sugumar
தங்களுடைய எழுத்தில் தெறிகிறது தாங்கள் சரியாக குர்ஆனையோ ஹதீசையோ படிக்கவில்லை என்று அதேப்போல் நான் எழுதியதையம்
Post a Comment