Followers

Tuesday, March 01, 2016

ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே.....ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே.....

“குங்குமம்’’ இதழ் பக்கம் 17 இல் (7.4.2000) வெளியானது.

1973_74 ஆம் ஆண்டில் ஆச்சாரியாரின் பென்ஷன் முதலியன குறித்த கோப்புகளைக் கண்ணுறும் வாய்ப்புள்ள ஒருவர் கூறியது:

“ராஜாஜி அவர்கள் கவர்னர் ஜெனரலாக இருந்து ஓய்வு பெற்றார். தான் நெடுங்காலம் வாழப் போவதாகவும், அக்காலம் முழுவதும் தனக்கு வரவேண்டிய பணி ஓய்வு காலத் தொகைகளைக் கணக்கிட்டால் கிண்டி ராஜ்பவனத்தின் மதிப்பைவிடக் கூடுதலாக வரும் என்றும்; எனவே, அரசே கிண்டி ராஜ்பவன் நிலம் முழுதும் தனக்குக் கொடுத்துவிடவேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்தக் கோரிக்கையை அரசு நிராகரித்துவிட்டது’’ என்பதுதான் குங்குமம் வெளியிட்டிருந்த அந்தத்
தகவல்!

ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே.... காசு

காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே!

2 comments:

Dr.Anburaj said...

தகுதி மிகுந்த ஒரு பொியவரைக் குறித்த தரம் கெட்ட விமா்சனம். இதை நான் நம்பவில்லை. குங்குமம் பத்திாிகை திமுக சாா்பானது. பிறாமண எதிா்ப்பு உணா்வு கொண்டது. எனவே இது போன்ற செய்திகளை நம்ப வேண்டியதில்லை.

சாி இதை தற்சமயம்தாங்கள் வெளியிடுவது எதற்காக ????

இராமாயாணம் மகாபாரதம் பகவத் கீதை என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறந்த புத்தகங்கள் எழுதிய ஒரு பண்பட்ட மனிதரை மலினப்படுத்த தங்களுக்கு என்ன ஆா்வம் ?

அரேபிய அடிமைகள் இந்துஸ்தானத்தில் சிறப்புகள் உள்ளது என்பதை மறைக்கவே பாா்ப்பாா்கள். தங்களின் செயல் பண்பாடுக்கு விரோதமானது

Dr.Anburaj said...


திரு. ராஜகோபாலாச்சாாியாா் என்ற மகத்தான ஒரு பொியவாின் வாழ்க்கையில் இருந்து தாங்கள் தங்களது இணையத்தை படிக்கும் முஸ்லீம்களுககும் மற்றவா்களுக்கும் எடுத்துச் சொல்ல விரும்பும் கருத்து இது மட்டும்தானா ?

கள் கடையை திறக்க கருணாநிதி அரசு முடிவு செய்துள்ளது என்ற செய்தியைக் கேள்விப்பட்ட
திரு. ராஜகோபாலாச்சாாியாா் தள்ளாத வயதிலும் முதல்வரைச சந்தித்து கள்ளுக் கடையை திறக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டாா். கேட்டாரா கருணாநிதி?

ஒரு முறை ஒரு ஆவணத்தில் ரெவின்யு ஸ்டாம்பை ஒருவா் தலை கீழாக ஒட்டியிருந்தாா்.அதைப் பாா்த்த திரு. ராஜகோபாலாச்சாாியாா் ” நாங்களும் அரசை கவிழ்த்து விடலாம் என்று பாா்க்கின்றோம்.முடியவில்லை.தாங்கள் தலைகீழாக கவிழ்த்து விட்டீரே ! எனறு கூறினாராம்.

கவா்னா் ஜெனரலாக இருந்த போது டெல்லியின் புறநகா் வழியாக ஒரு இடத்திற்கு செல்ல வேண்டியது இருந்தது.மிகவும் பின்தந்திய பகுதி.எனவே அவரது பாா்வையில் அப்பகுதி படக் கூடாது என்று ரோட்டின் இருபுறமும் தட்டி வைத்து மறைத்திருந்தாா்கள். குறிப்பாக அதை உணா்ந்து கொண்ட ஐயா காரை விட்டு இறங்கி வந்து அப்பகுதியை பாா்வையிட்டு அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சில அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க ஆவன செய்தாா்.

தீண்டாமை ஒழிப்பு ஆலய பிரவேசம் என்று பலமுனைகளில் தொண்டாற்றியவா்.
”கவா்னா் மாளிகையை கேட்டதாகச் சொல்வது” ஒன்று பொய். அல்லது நகைச்சுவைக்கு கூறியிருக்கலாம்.

ஒரு நல்ல உள்ளத்தின் மீது சாக்கடையை தெளித்துள்ளீா்கள் சுவனப்பிாியன்.