Followers

Wednesday, September 11, 2019

புர்கா போட்டு வரும் மாணவிகளை துரத்தும் பிரின்சிபால்!

புர்கா போட்டு வரும் மாணவிகளை துரத்தும் பிரின்சிபால்!
உத்தர பிரதேசத்தில் எஸ்.ஆர்.கே கல்லூரி உள்ளது. இங்கு பயிலும் முஸ்லிம் மாணவிகள் புர்கா அணிந்து வருவதற்கு கல்லூரி நிர்வாகம் தடை போடுகிறது. முன்பெல்லாம் வகுப்பறைக்கு வந்து புர்காவை கழட்டி விட்டு இஸ்லாமிய பெண்கள் அமர்வார்கள். ஆனால் தற்போது கல்லூரி வாசலில் பிரின்சிபால் குச்சியை வைத்து அடிப்பது போல் வந்து புர்காவை கழட்டி விட்டு வரச் சொல்லுகிறார். கல்லூரி வாசலிலும் கழட்ட அனுமதியில்லை. பஸ் நிறுத்தத்திற்கு சென்று அங்கிருந்து கழட்டி விட்டு வா என்கிறது நிர்வாகம். இதற்காக காவல் துறையையும் கல்லூரி நிர்வாகம் வாசலில் நிறுத்தியுள்ளது.
ஒரு இந்து பெண்ணை ஒரு வருடம் சிறை பிடித்து வன்பணர்வு செய்த இந்து சாமியார் சின்மயானந்தாவை கைது செய்யாத காவல் துறை கண்ணியமாக உடை உடுத்தும் இஸ்லாமிய பெண்களின் உடையை பொதுவில் கழட்டச் சொல்கிறது. இவர்களின் நோக்கம் இஸ்லாமிய அடையாளங்களை சிறிது சிறிதாக அழிப்பதே. ஆதித்யநாத் இதிலும் தோல்வியையே சந்திப்பார். புர்காவை கழட்ட சொல்லும் நிர்வாகம் அவர்கள் மனதில் குடி கொண்டிருக்கும் ஏக இறைக் கொள்கையை எவ்வாறு நீக்க முடியும்?
அநியாயக் காரர்களின் முடிவு மிக சமீபமாக உள்ளதாகவே எனக்ககுப் படுகிறது.


1 comment:

Dr.Anburaj said...

கொள்ளைக்காரர்களும் கொலைகாரர்களும் முகமூடி போடுவது போல முஸ்லீம் பெண்கள் போவது முட்டாள்தனம். பயங்கரவாதிகள் இப்படி வந்து நாச வேலைகள் செய்ய முடியும்.இராமன்பிறந்த மண்ணில் பர்தா தேவையில்லை. ஒரு பெண்ணை பார்த்தவடன் பாலியில் இச்சைதான் மேலோங்கும் என்பது தவறு. முறையாக உடை உடுத்தியிருந்தால் போதுமானது.